கங்கை நதி சுத்தமாகுமா?

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்த 2014ல் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பிறகு நரேந்­திர மோடி ரூ.20 ஆயி­ரம் கோடி நிதி ஒதுக்­கி­னார். கடந்த நான்கு வரு­டங்­க­ளில் கங்கை நதி ஓர­ள­வா­வது சுத்­த­மா­கி­யுள்­ளதா என்ற கேள்­விக்கு இல்லை என்று தான் பதில் கூற­மு­டி­யும்.

சென்ற வாரம் கங்கை நதி நீர் குடிக்­கவோ, குளிக்­கவோ ஏற்­ற­தல்ல என மத்­திய மாசுக் கட்­டுப்­பாட்டு வாரி­யம் எச்­ச­ரித்­துள்­ளது. கங்­கை­யில் தொடர்ந்து கழி­வு­கள் கலப்­ப­தால் மாச­டைந்து காணப்­ப­டு­கி­றது. உத்­த­ரப் பிர­தே­சம், மேற்கு வங்­கா­ளம் ஆகிய இரு மாநி­லங்­க­ளில் கங்கை நதி பாயும் பெரும்­பா­லான பகு­தி­க­ளில் நீரா­னது குடிக்­கவோ, குளிக்­கவோ ஏற்­ற­தாக இல்லை. இந்த நதி நீரில் ‘கோலி­பார்ம்’ என்ற பாக்­டீ­ரியா அதிக அள­வில் காணப்­ப­டு­கி­றது.

கங்கை நதி ஓடும் 86 இடங்­க­ளில் மாசு அள­வைக் கண்­ட­றி­யும் மையங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் 7 இடங்­க­ளில் சேக­ரிக்­கப்­பட நீர் மட்­டும் சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட பின்­னர் குடிக்க ஏற்­ற­தாக உள்­ளது. 18 இடங்­க­ளில் உள்ள நீர் குளிக்க மட்­டும் பயன்­ப­டுத்­த­லாம். மீதம் உள்ள 62 இடங்­க­ளில் உள்ள நீரை குளிக்­கவோ அல்­லது சுத்­தி­க­ரித்து குடிக்­கவோ ஏற்­ற­தாக இல்லை  என்று மத்­திய மாசுக் கட்­டுப்­பாட்டு வாரி­யம் எச்­ச­ரித்­துள்­ளது.

மத்­திய மாசு கட்­டுப்­பாடு வாரிய எச்­ச­ரிக்­கை­யில் இருந்து, கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்த, இது வரை எடுத்த முயற்­சி­க­ளால் எதிர்­பார்த்த பலன் கிடைக்­க­வில்லை என்றே புரிந்து கொள்­ள­லாம்.

கங்கை நதி நிபு­ண­ரான விஷ்­வாம்­பர் நாத் மிஸ்ரா, “மோடி அரசு அரை மன­து­டன் தொடங்­கிய கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்­தும் திட்­டத்­தால் எவ்­வித பய­னும் இல்லை.  முன்பு இருந்­ததை விட கங்­கை­யில் அதிக அளவு மாசு ஏற்­பட்­டுள்­ளது” என்­கின்­றார்.

இந்­திய தொழில்­நுட்ப கழ­கத்­தில் (பனா­ரஸ் இந்து பல்­க­லைக்­க­ழ­கம்) எலக்ட்­ரா­னிக் இன்­ஜி­னி­ய­ரிங் பேரா­சி­ரி­ய­ராக இருந்­த­வர் விஷ்­வாம்­பர் நாத் மிஸ்ரா. தற்­போது 500 ஆண்­டு­கள் பழ­மை­யான சங்­கத் மோசான் ஹனு­மார் கோயி­லில் மகந்த் (மடா­தி­பதி) ஆக உள்­ளார். இந்த கோயி­லில் தான் 17 வது நூற்­றாண்­டில் துள­சி­தாஸ் இரா­ம­ச­ரித்­மா­னஸ் (ராமர் காவி­யம்) அரங்­கேற்­றி­னார். விஷ்­வாம்­பர் நாத் மிஸ்­ரா­வின் தந்தை வீர் பத்ரா மிஸ்ரா, ‘சங்­கத் மோசன் பவுண்­டே­சன்’ என்ற அறக்­கட்­ட­ளையை தொடங்கி நடத்­தி­ய­வர். இவ­ருக்கு 1999ல் பிர­பல டைம் இதழ் ‘ஹீரோஸ் ஆப் பிளா­னட்’ என்ற விருது வழங்கி கெள­ர­வித்­தது. இந்த அறக்­கட்­டளை கடந்த முப்­பது வரு­டங்­க­ளாக கங்கை நதியை தூய்­மை­ப­டுத்­தும் சேவை­யில் ஈடு­பட்­டுள்­ளது. தற்­போது இந்த அறக்­கட்­ட­ளையை, விஷ்­வாம்­பர் நாத் மிஸ்ரா நடத்தி வரு­கி­றார்.

1986ல் ராஜீவ் காந்தி பிர­த­ம­ராக இருந்த போது முதல் கட்­ட­மாக கங்கை நதியை தூய்­மைப்­ப­டுத்­தும் பணி தொடங்­கப்­பட்­டது. 1993ல் இரண்­டாம் கட்ட பணி தொடங்­கப்­பட்­டது. 2009ல் பிர­த­ம­ராக மன்­மோ­கன்­சிங் இருந்த போது,  காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அரசு, தேசிய கங்கை நதி நீர் ஆணை­யம் அமைத்து, இதன் கீழ் கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்­தும் பணி தொட­ரப்­பட்­டது. அர­சின் தக­வல்­படி முதல் இரண்டு கட்­டங்­க­ளுக்­கும் ரூ.938.57 கோடி செல­வி­டப்­பட்­டது. 2015, டிசம்­பர் வரை தேசிய கங்கை நதி நீர் ஆணை­யம் கங்கை நதியை சுத்­தப்­ப­டுத்த ரூ.1,664.73 கோடி செல­வ­ழித்­துள்­ளது.  

2014ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் வார­ணாசி தொகு­தி­யில் வேட்­பு­மனு தாக்­கல் செய்­யும் போது நரேந்­திர மோடி ‘மா கங்கா’ (கங்கை தாய்) என்று கூறி­னார். தேர்­த­லில் வெற்றி பெற்ற பின், கங்­கை­ந­திக்­க­ரை­யில் நின்று, கங்­கையை சுத்­தி­க­ரிக்­கவே  தன்னை கங்கை தாய் தேர்வு செய்­தி­ருப்­ப­தாக கூறி­னார். மகாத்மா காங்­தி­யின் 150வது பிறந்த நாள் (2018, அக்­டோ­பர் 2) கொண்­டா­டும் சம­யத்­தில் கங்கை நதி சுத்­த­மாக இருக்­கும் என்­றும் கூறி­னார். இந்த வருட தொடக்­கத்­தில் மத்­திய அமைச்­சர் நிதின் கட்­காரி, 2020, மார்ச் மாத வாக்­கில் கங்கை நதி நூறு சத­வி­கி­தம் சுத்­த­மாக இருக்­கும் என்று அறி­வித்­துள்­ளார்.

2018ல் பிர­பல நாளி­தழ் இந்­துஸ்­தான் டைம்ஸ். மத்­திய மாசு கட்­டுப்­பாட்டு வாரி­யத்­தின் புள்ளி விப­ரங்­களை மேற்­கோள் காட்டி வார­ணா­சி­யில் கங்கை நதி­யின் மாசு அதிக அள­வில் இருப்­ப­தாக கூறி­யது.

ஹிபுங்­டன்­போஸ்ட் இணை­ய­த­ளத்­திற்கு விஷ்­வாம்­பர் நாத் மிஸ்ரா அளித்த பேட்­டி­யில், கங்கை நதியை தூய்­மைப்­ப­டுத்த விஞ்­ஞான பூர்­வ­மாக அணுகி, பொறி­யி­யல் ரிதி­யான தீர்வை காண­வேண்­டும். கங்கை நதியை ஆரா­திப்­ப­தால் மட்­டுமே பிரச்­னைக்கு தீர்­வா­காது. பனா­ரஸ் சீர்­கெட்டு வரு­கி­றது. ஆனால் நீங்­கள் பனா­ரஸை அலங்­க­ரிக்­கின்­றீர்­கள். இத­னால் என்ன பலன்? என்று கேட்­கின்­றார்.  

கேள்வி: கங்கை நதி எப்­படி மாசு­ப­டு­கி­றது?

பதில்: இது பழங்­கா­லத்­தில் இருந்தே நடந்து வரு­கி­றது. ஆனால் நீங்­கள் நவீன சமூ­கத்­து­டன் இணை­யா­விட்­டால், உங்­கள் பராம்­ப­ரி­யம் வழக்­கி­ழந்து போகும். எனது தகப்­ப­னால் சிவில் இன்­ஜி­னி­யர். பனா­ரஸ் இந்து பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேரா­சி­ரி­ய­ராக இருந்­தார். கங்கை நதியை தூய்­மை­ப­டுத்­தும் பணி சிவில் இன்­ஜி­னி­ய­ரிங் உடன் சம்­பந்­தப்­பட்­டது. நான் எலக்ட்­ரா­னிக்ஸ் இன்­ஜி­னி­யர். அதிர்ஷ்­ட­வ­ச­மாக எனது தகப்­ப­னா­ரு­டன் 20 வரு­டம் இணைந்து பணி­யாற்­றும் வாய்ப்­பினை பெற்­றேன். நான் மடா­தி­பதி. அதே நேரத்­தில் தொழில்­நுட்ப வல்­லு­ன­ரா­க­வும் உள்­ளேன். எனது பாரம்­ப­ரி­யத்­தில் இருந்து ஆன்­மி­கத்­திற்கு வந்­துள்­ளேன். அதே­நே­ரத்­தில் தொழில்­நுட்ப வல்­லு­ன­ரா­க­வும் உள்­ளேன். இது அரிய சேர்க்கை. எங்­க­ளி­டம் கங்கை நதி­யில் ஓடும் நீரை சோதனை செய்ய பரி­சோ­தனை கூடம் உள்­ளது. புள்ளி விப­ரங்­க­ளும் சேக­ரித்­துள்­ளோம். இதன் அடிப்­ப­டை­யில் தான் நாங்­கள் கங்­கை­யின் நிலை பரி­தா­ப­மாக இருக்­கின்­றது என்று கூறு­கின்­றோம் என்­றார்.    

கங்கை நதி­யின் நிலை மோச­மாக இருக்­கின்­றது. கங்கை நதி மாசு­ப­டு­த­வற்கு 90 சத­வி­கித கார­ணம் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத கழிவு நீரை கங்­கை­யில் விடு­வதே. நீங்­கள் ஒரு சொட்டு கழிவு நீரை கூட கங்­கை­யில் கலக்க அனு­ம­திக்க கூடாது.

இதை பற்றி விளக்­குங்­க­ளேன்:  அர­சில் திட்­ட­மி­டு­ப­வர்­கள் குளிக்க மட்­டுமே உகந்த நதி என்ற ‘பி’ அந்­தஸ்தை வழங்­கு­வ­தற்கு மூன்று அள­வீடு (காரணி) கூறி­யுள்­ள­னர். குளிப்­ப­தற்கு உகந்த ‘பி’ என்ற அந்­தஸ்தை பெற்ற நதி­யில் ஓடும் நீரில் மனித மலம் கலந்த கோலி­பார்ம் பாக்­டீ­ரியா 100 மில்லி லிட்­ட­ருக்கு 500 துகள் என்ற அள­வில் இருக்க வேண்­டும். ஒரு லிட்­டர் நீரில் பயோ­கெ­மிக்­கல் ஆக்­ஸி­சன் 300 மில்லி கிராம் என்ற அள­வில் இருக்க வேண்­டும். ஒரு லிட்­டர் நீரில் இருந்து வெளி­யா­கும் ஆக்­ஸி­சன் ஐந்து மில்­லி­கி­ராம் என்ற அள­வில் இருக்க வேண்­டும் என வரை­ய­றுத்­துள்­ள­னர்.

வார­ணா­சி­யில் கங்கை நதி நுழை­யும் இடத்­தில் எல்­லாம் சரி­யாக உள்­ளது. வார­ணா­சி­யில் வடக்­கில் கங்கை நதி­யு­டன் வருணா (Varuna) என்ற நதி இணை­கி­றது. தெற்­கில் ஆசி (Assi) என்ற நதி இணை­கி­றது. இரண்டு துணை நதி­க­ளின் பெய­ரை­யும் சேர்த்­து­தான் ‘வார­ணாசி’ என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இந்த இரண்டு துணை நதி­க­ளில் இருந்­தும் கங்கை நதி­யில் முழுக்க முழுக்க சுத்­தி­க­ரிக்­கப்­ப­டாத கழிவு நீர் (சாக்­கடை) கலக்­கி­றது.      

கங்கை நதி­யில் ஆசி நதி கலக்­கும் இடத்­தில் 100 மில்லி லிட்­டர் நீரில் மலம் கலந்த கோலி­பார்ம் பாக்­டீ­ரியா 32 லட்­சம் என்ற அள­வில் உள்­ளது. இந்த இடத்­தில் இருந்து கீழே (தெற்கு) உள்ள துளசி படித்­து­ரை­யில் 100 மில்லி லிட்­டர் நீரில் மலம் கலந்த கோலி­பார்ம் பாக்­டீ­ரியா 90 ஆயி­ரம் என்ற அள­வில் உள்­ளது. இதற்­க­டுத்து (வார­ணாசி நக­ரின் நடு­வில்) ராஜேந்­திர பிர­சாத் படித்­து­ரை­யில் 100 மில்லி லிட்­டர் நீரில் கோலி­பார்ம் பாக்­டீ­ரியா 40 ஆயி­ரம் என்ற அள­வில் உள்­ளது. வார­ணாசி நக­ரின் இறு­தி­யில் கங்கை நதி­யு­டன் வருணா நதி கலக்­கும் இடத்­தில் 100 மில்லி லிட்­டர் நீரில் கோலி­பார்ம் பாக்­டீ­ரியா 68 லட்­சம் என்ற அள­வில் உள்­ளது.

அர­சின் திட்­ட­மி­டு­ப­வர்­கள் ‘பி’ என்ற அந்­தஸ்து வழங்கி குளிப்­ப­தற்கு மட்­டும் ஏற்­றது என வரை­ய­றுத்­துள்ள நதி­யின் 100 மில்லி லிட்­டர் நீரில் மலம் கலந்த கோலி­பார்ம் பாக்­டீ­ரியா எண்­ணிக்கை 500 என்ற அள­வில் மட்­டுமே இருக்க வேண்­டும். மேலே கூறிய படித்­துரை உட்­பட கங்கை நதி­யில் ஆசி, வருணா நதி­கள் கலக்­கும் இடங்­க­ளில் மலம் கலந்த கோலி­பார்ம் பாக்­டீ­ரி­யா­வின் அளவை பார்த்­தால், நீங்­களே கங்கை நதி எந்த அளவு மாசு­பட்­டுள்­ளது என்­பதை கற்­பனை செய்து பாருங்­கள்.

கேள்வி: உயிர்­வே­தி­யல் ஆக்­ஸி­ஜன் நிலை (Biochemical Oxygen Demand) என்ன?

பதில்: ஒரு லிட்­டர் நீரில் உயிர்­வே­தி­யல் ஆக்­ஸி­ஜன் மூன்று மில்லி கிரா­முக்­கும் குறை­வாக இருக்க வேண்­டும். துளசி படித்­து­ரை­யில் ஒரு லிட்­டர் நீரில் உயிர்­வே­தி­யல் ஆக்­ஸி­ஜன் 9.5 அல்­லது 9.8 மில்லி கிரா­மாக உள்­ளது. வருணா நதி கலக்­கும் இடத்­தில் ஒரு லிட்­டர் நீரில் உயிர்­வே­தி­யல் ஆக்­ஸி­ஜன் 68 முதல் 70 மில்லி கிராம் என்ற அள­வில் உள்­ளது. இது தான் கங்கை நதி­யின் நிலை. நீங்­கள் 20 ஆயி­ரம் கோடி ரூபாய் செல­வ­ழித்­தா­லும்

சரி அல்­லது எவ்­வ­ளவே பணம் செல­வ­ழித்­தா­லும் சரி, இத­னால் எந்த பல­னும் இல்லை.

கேள்வி: கங்கை நதி நீரில் உள்ள ஆக்­ஸி­ஜன் (Dissolved Oxygen ) நிலை என்ன?

பதில்: வருணா, ஆசி நதி கங்­கை­யில் கலங்­கும் இடங்­க­ளைத் தவிர மற்ற இடங்­க­ளில் பிரச்னை இல்லை. இந்த இரு இடங்­க­ளி­லும் நீர்­வாழ் உயி­ரி­னங்­கள் வாழ முடி­யாது.  

கேள்வி: கங்கை நதியை எப்­படி தூய்­மைப்­ப­டுத்­து­வது?

பதில்: முதல் கட்ட கங்கை நதியை தூய்­மைப்­ப­டுத்­தும் திட்­டத்­தில் தின­சரி 102 மில்­லி­யன் லிட்­டர் கழிவு நீரை சுத்­தி­க­ரிக்­கும் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைக்­கப்­பட்­டது. ‘நமது கங்கை’ திட்­டப்­படி (நமாமி கங்கா திட்­டம்–Namami Gange project) பிர­த­மர் தினா­பூர் என்ற இடத்­தில் தின­சரி 140 மில்­லி­யன் லிட்­டர் கழிவு நீரை சுத்­தி­க­ரிக்­கும் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை திறந்து வைத்­தார். இதே போல் கோதி­காகா என்ற இடத்­தில் தின­சரி 120 மில்­லி­யன் லிட்­டர் கழிவு நீரை சுத்­தி­க­ரிக்­கும் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை திறந்து வைத்­தார். இதில் பிரச்னை என்­ன­வெ­னில் கோதி­காகா என்ற இடத்­தில் திறக்­கப்­பட்ட கழிவு நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு, சுத்­தி­க­ரிக்க தேவை­யான கழிவு நீர் கிடைக்­க­வில்லை. அப்­படி இருக்­கை­யில் எதை சுத்­தி­க­ரிப்­பது. தினா­பூர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு 60 மில்­லி­யன் லிட்­டர் கழிவு நீர் சுத்­தி­க­ரிக்க அனுப்­பப்­ப­டு­கி­றது. இவை சுத்­தி­க­ரித்து மீண்­டும் வருணா நதி­யில் கலக்­கி­றது.

கேள்வி: கோதி­காகா கழிவு நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு தேவை­யான கழிவு நீர் கிடைக்­க­வில்லை  என்று எப்­படி கூறு­கின்­றீர்­கள்?

பதில்: கோதி­காகா கழிவு நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தின் திறன் 140 மில்­லி­யன் லிட்­டர். இதற்கு தின­சரி 10 முதல் 20 மில்­லி­யன் லிட்­டர் கழிவு நீர் மட்­டுமே கிடைக்­கின்­றது. சரி­யான அளவு தெரி­ய­வில்லை. இத­னால் என்ன பலன். கழிவு நீரை கொண்டு வரும் திட்­டம் தோல்வி அடைந்­து­விட்­டது.

கேள்வி: தினா­பூர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு 60 மில்­லி­யன் லிட்­டர் கழிவு நீர் மட்­டுமே அனுப்­பப்­ப­டு­கி­றது என்­கின்­றீர்­களே?

பதில்: இதன் திறன் 140 மில்­லி­யன் லிட்­டர். இதற்கு கழிவு நீரை கொண்டு வரு­வ­தற்கு தேவை­யான குழாய் இணைப்­பு­கள் இல்லை. இதுவே கார­ணம்.

கேள்வி: சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தில் பயன்­ப­டுத்­தும் தொழில் நுட்­பம் சரியா?

பதில்: முதல் கட்ட கங்கை நதியை தூய்­மைப்­ப­டுத்­தும் திட்­டத்­தில் கழிவு நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­க­ளில் ஆக்­டி­வே­டட்  சிலஜ்ட் பிளாண்ட் [Activated Sludge Plant (ASP)] என்ற தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இது தோல்வி அடைந்த தொழில் நுட்­பம். இத­னால் மலம் கலந்த கோலி­பார்ம் பாக்­டீ­ரி­யாக்­களை நீக்க முடி­யாது. இதுவே தண்­ணீ­ரால் ஏற்­ப­டும் நோய்­க­ளுக்கு கார­ணம். தற்­போது இதே தொழில்­நுட்­பத்­தின் மேம்­ப­டுத்­தப்­பட்ட சிகுண்­டி­யல் பேட்ச் ரியாக்­டர் [Sequential Batch Reactor (SBR)]  என்ற தொழில் நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இரண்டு தொழில் நுட்­பங்­க­ளும் ஒன்றே. பிந்­தை­ய­தற்கு குறைந்த இடம் போது­மா­னது. இதுவே வேறு­பாடு. இரண்டு சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­கள் முழு திற­னு­டன் இயங்­கி­னா­லும் கூட, இத­னால் எவ்­வித பல­னும் இல்லை. இந்த தொழில்­நுட்­பத்­தால் எவ்­வித பல­னும் இல்லை.

கேள்வி: இந்த தொழில்­நுட்­பம் தவ­றா­னது என்று எப்­படி கூறு­கின்­றீர்­கள்?

பதில்: எங்­கள் அறக்­கட்­ட­ளை­யில் தொழில்­நுட்ப நிபு­ணர்­கள் உள்­ள­னர். அவர்­கள் பல நிலை­க­ளில் சோதனை செய்து, இந்த தொழில்­நுட்­பம் கோலி­பார்ம் பாக்­டீ­ரி­யாக்­களை அகற்­றாது என்ற முடி­வுக்கு வந்­துள்­ள­னர். அவர்­கள் செய்ய வேண்­டுமே என்­ப­தற்­காக எதையோ செய்­கின்­ற­னர். இத­னால் எவ்­வித பல­னும் இல்லை.

கேள்வி: அப்­ப­டி­யெ­னில் சரி­யான தொழில்­நுட்­பம் எது?

பதில்: நாங்­கள் ‘அட்­வான்ஸ்ட் இன்­டி­கி­ரே­டட் வேஸ்ட் வாட்­டர் பான்ட் சிஸ்­டம்’ [Advanced Integrated Wastewater Pond System (AIWPS)] என்ற தொழில்­நுட்­பத்தை அர­சுக்கு பரிந்­துரை செய்­கின்­றோம். இது அமெ­ரிக்க தொழில்­நுட்­பம். இதை அரசு கொள்கை அள­வில் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர். ஆனால் அதி­கா­ரி­க­ளின் சிவப்பு நாடா முறை­யால் நடை­மு­றைக்கு வர­வில்லை என்று கரு­து­கின்­றேன். மன்­மோ­கன் சிங் பிர­த­ம­ராக இருந்த போது அமைக்­கப்­பட்ட தேசிய கங்கை நதி நீர் ஆணை­யத்­தில் எனது தகப்­ப­னார் உறுப்­பி­ன­ராக இருந்­தார். அப்­போது தேசிய கங்கை நதி நீர் ஆணை­யம்,  சிறிய அள­வில் இந்த தொழில்­நுட்­பத்தை (அட்­வான்ஸ்ட் இன்­டி­கி­ரே­டட் வேஸ்ட் வாட்­டர் பான்ட் சிஸ்­டம்) சோதித்து பார்க்­கும்­படி சங்­கத் மோசன் பவுண்­டே­சனை கேட்­டுக் கொண்­டது. இது சரி­யாக செயல்­பட்­டால், பிறகு பெரிய அள­வில் பயன்­ப­டுத்­த­லாம் என்று மன்­மோ­கன் சிங் அரசு கூறி­யது. அதற்­குள் அரசு மாறி­விட்­டது. (சங்­கத் மோசன் பவுண்­டே­சன் தக­வல்­படி இந்த தொழில்­நுட்­பம் கலி­போர்­னி­யா­வில் நான்கு கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் உட்­பட அமெ­ரிக்­கா­வில் பல இடங்­க­ளில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.)  

அந்த சம­யத்­தில் சுற்­றுச் சூழல் மற்­றும் வனத்­துறை அமைச்­ச­கத்­தைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், நாங்­கள் பரிட்­சார்த்த முறை­யில் அமைத்த கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களை பார்­வை­யிட்­ட­னர். இதன் அடிப்­ப­டை­யில்­தான் எங்­க­ளுக்கு பனா­ரஸ் நக­ரில் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது. நாங்­கள் விரி­வான திட்ட அறிக்­கையை தயா­ரித்து சமர்ப்­பித்­தோம். அது அர­சி­டம் உள்­ளது. அதன் பிறகு எவ்­வித நட­வ­டிக்­கை­யும் இல்லை. அவர்­கள் பழைய தொழில்­நுட்­பத்­தையே பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இது தோல்வி அடைந்த தொழில் நுட்­பம்.

மத்­திய அமைச்­சர் நிதின்­கட்­காரி கங்கை நதியை தூய்­மைப்­ப­டுத்­தும் காலக்­கெ­டுவை 2020 வரை நீடித்­துள்­ளார். இத­னால் என்ன பலன். அவ­ரி­டம் எந்த மந்­தி­ரக்­கோ­லும் இல்லை. எங்­க­ளுக்கு யதார்த்­தம் என்று தெரி­யும். இதே போல் செய்­தால், இன்­னும் நூறு முதல் 200 ஆண்­டு­கள் வரை ஆனா­லும் கூட எது­வும் நடக்­காது.

நன்றி: ஹாபிங்­டன்­போஸ்ட் இணை­ய­த­ளத்­தில் பெட்வா சர்மா எழு­திய செய்­தி­யின் சுருக்­கம்.