அரசியல்மேடை : வெற்றிடம் நிரப்பப்பட்டதா....!

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

தமிழ்­நாட்­டில் ஆளு­மை­மிக்க அர­சி­யல் தலை­வர்­கள் வரி­சை­யில், அண்ணா, காம­ரா­ஜர், கரு­ணா­நிதி, எம்.ஜி.ஆர், ஜெய­ல­லிதா உள்­ளிட்­டோர் மிக முக்­கி­ய­மா­ன­வர்­கள் ஆவார்­கள்.

சொல்­லாற்­றல், எழுத்­தாற்­றல், மக்­களை ஈர்க்­கும் தன்மை, மக்­க­ளால் நேசிக்­கப்­ப­டும் பாங்கு, இவை­களை வைத்­து­தான், ஒரு ஆளு­மை­மிக்க தலை­மையை நாம் தீர்­மா­னிக்­கி­றோம். அர­சி­ய­லில் மக்­கள் செல்­வாக்­கு­மிக்க தலை­வர்­கள் இப்­போது இல்லை என்­ப­தால்­தான், குறிப்­பாக ஜெய­ல­லிதா, கரு­ணா­நிதி மறை­வுக்­குப் பிறகு ஒரு அர­சி­யல் வெற்­றி­டம் ஏற்­பட்­டு­விட்­ட­தாக ஊட­கங்­க­ளும் அர­சி­யல் விமர்­ச­கர்­க­ளும் எழு­தி­யும் பேசி­யும் வந்­த­னர்.

பொது­வெ­ளி­யி­லும் மக்­கள் மன­தில் இத்­த­கை­ய­தொரு தாக்­கம் ஏற்­பட்­டி­ருந்­த­தும் உண்­மை­தான். தமி­ழக அர­சி­யல் களத்­தில் இன்­றைய சூழ­லில் அதி­முக, திமுக ஆகிய 2 திரா­விட கட்­சி­கள்­தான் வலு­வான கட்­ட­மைப்­பும் தொண்­டர்­கள் பல­மும், மக்­க­ளின் ஆத­ர­வும் கொண்ட கட்­சி­க­ளாக உள்­ளன.

கடந்த 1967ம் ஆண்டு தொடங்கி, கடந்த 60 ஆண்­டு­க­ளாக திரா­விட கட்­சி­கள்­தான் மாறி­மாறி ஆட்சி அதி­கா­ரத்­தில் அமர்ந்­துள்­ளன. திமு­க­வின் நிறு­வன தலை­வ­ரான அண்ணா, 67 தொடங்கி 69ம் ஆண்டு வரை­யி­லும், சுமார் 2 ஆண்­டு­கள் ஆட்சி நடத்­தி­னார். அந்த ஆளு­மை­மிக்க தலை­வர் உரு­வாக்­கி­வைத்­தி­ருந்த கட்­சிக் கட்­ட­மைப்­பும் தொண்­டர்­கள் ஆத­ர­வும் வலு­வாக இருந்­த­தா­லும், மக்­கள் செல்­வாக்­கு­மிக்க எம்.ஜி.ஆர் அந்த கட்­சி­யின் மூல பல­மாக இருந்த நிலை­யி­லும், கரு­ணா­நிதி திமு­க­வின் தலைமை பொறுப்­பை­யும், ஆட்­சிப் பொறுப்­பை­யும் ஏற்று நடத்­தி­வந்­தார்.

1972இல் எம்.ஜி.ஆர் தலை­மை­யில் அண்ணா திமுக உரு­வா­கிய பிறகு, திமு­க­வின் மக்­கள் செல்­வாக்கு சுமார் 90 சத­வீ­தம் அள­விற்கு எம்.ஜி.ஆரின் பின்­னால் அணி­வ­குத்­தது. அத­னால்­தான், 1973ம் ஆண்டு நடை­பெற்ற திண்­டுக்­கல் இடைத்­தேர்­தல் முதல் தொடர் வெற்­றி­களை எம்.ஜி.ஆர் பெற்­று­வந்­தார்.

அது­மட்­டு­மல்­லா­மல், 1977, 80, 84ஆகிய ஆண்­டு­க­ளில் நடை­பெற்ற சட்­ட­மன்ற பொதுத்­தேர்­தல்­க­ளில், எம்.ஜி.ஆர் தொடர் வெற்­றி­க­ளைப்­பெற்று சுமார் 11 ஆண்­டு­கள் தமிழ்­நாட்­டில் நல்­லாட்சி நடத்­தி­வந்­தார்.

திமுக, கட்சி ரீதி­யாக வலு­வான கட்­ட­மைப்­பு­டன் இருந்­தா­லும், மக்­க­ளின் ஆத­ரவு இல்­லா­த­தன் விளை­வா­கத்­தான் சுமார் 13 ஆண்­டு­கள் கரு­ணா­நிதி ஆட்சி அதி­கா­ரத்­திற்கு வர­மு­டி­யாத நிலை உரு­வா­னது. அந்த வகை­யில், அந்த காலக்­கட்­டத்­தில் கரு­ணா­நி­தியை விட­வும், ஆளு­மை­மிக்க தலை­வ­ராக எம்.ஜி.ஆர் இருந்­தார் என்­பது வெளிப்­ப­டை­யான உண்மை நிலை­யா­கும்.

எம்.ஜி.ஆர் மறை­வுக்­குப் பிறகு, அதி­மு­க­வின் தலைமை பொறுப்­பேற்ற ஜெய­ல­லிதா தமி­ழக அர­சி­ய­லில் புதிய ஆளு­மை­யாக தலை­யெ­டுத்­தார். ஆனா­லும்­கூட, தொடர் வெற்றி என்ற நிலை­யில் இருந்து மாறி, அதி­முக, திமுக ஆகிய இரண்டு கட்­சி­க­ளுமே அவ்­வப்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப மாறி மாறி ஆட்சி அமைத்து வந்­தன.

1989-–90ம் ஆண்­டு­க­ளில் திமுக ஆட்சி அமைந்­தது. 91 தேர்­த­லில் அக்­கட்சி படு­தோல்வி அடைந்து ஜெய­ல­லிதா தலை­மை­யில் அதி­முக ஆட்சி அமைந்­தது. அடுத்­து­வந்த 96 தேர்­த­லில் அதி­முக படு­தோல்வி அடைந்து திமுக ஆட்சி அமைத்­தது. மறு­ப­டி­யும் 2001இல் அதி­முக ஆட்சி, 2006இல் திமுக ஆட்சி, மீண்­டும் 2011இல் அதி­முக ஆட்சி என்று மாறி மாறி வந்த நிலை­யில், 2016 ம் ஆண்­டி­லும் அதி­மு­கவே ஆட்சி கட்­சி­யாக வரு­வ­தற்­கான வாய்ப்பை ஜெய­ல­லிதா உரு­வாக்கி வைத்­தி­ருந்­தார்.

2016ம் ஆண்டு, ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு அதி­முக கட்­சி­யும் ஆட்­சி­யும் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்­தது. இடைக்­கால முதல்­வ­ராக ஓ.பன்­னீர்­செல்­வம் பொறுப்­பேற்­று­வந்த நிலை­யில், ஜெய­ல­லி­தா­வின் உயிர்த்­தோ­ழி­யாக உற்ற சகோ­த­ரி­யாக இருந்த சசி­கலா, ஆட்­சிக்­கும் கட்­சிக்­கும் தலை­மை­யேற்று புதிய ஆளு­மை­யாக தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பி­னார். அதற்கு, காலம் இடம்­த­ர­வில்லை. அதிர்ஷ்­ட­வ­ச­மாக, முத­ல­மைச்­சர் பொறுப்பை எடப்­பாடி பழ­னி­சாமி ஏற்­று­ந­டத்த, கட்­சியை ஓ.பன்­னீர்­செல்­வ­மும், எடப்­பா­டி­யும், ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் என்ற பொறுப்­புக்­களை ஏற்று வழி­ந­டத்த தொடங்­கி­னர். ஆனா­லும்­கூட, தின­க­ர­னின் எதிர்ப்பு நிலை­யால், அதி­முக தடு­மாற்­றத்­து­டன் குழப்­ப­மான சூழ்­நி­லை­யில் இருந்­தது.

இந்த நிலை­யில், திமுக தலை­வர் கரு­ணா­நிதி மறைந்­த­தும் தமி­ழக அர­சி­ய­லில் ஒரு வெற்­றி­டம் உரு­வாக்­கி­விட்­டது என பர­வ­லாக பத்­தி­ரிக்­கை­க­ளி­லும் காட்சி ஊட­கங்­க­ளி­லும் செய்­தி­கள் பர­வின. இந்த வெற்­றி­டத்தை நிரப்­பு­வ­தற்­காக சினிமா உல­கில் இருந்­தும், கமல், ரஜினி இரு­வ­ரும் கால்­ப­திக்க முற்­பட்­ட­னர். கமல்­ஹா­சன் விரை­வாக அர­சி­யல் கட்­சியை தொடங்கி தேர்­த­லை­யும் சந்­தித்­து­விட்­டார். ஆனால், மக்­கள் செல்­வாக்­கு­மிக்க ஆளு­மை­மிக்க தலை­வ­ராக அவர் அடை­யா­ளப்­ப­டுத்­தப் பட­வில்லை என்­பதை தேர்­தல் முடி­வு­கள் வெளி­காட்­டி­விட்­டன.

நடி­கர் ரஜி­னி­காந்தோ, அடுத்­து­வ­ரும் சட்­ட­மன்ற பொதுத்­தேர்­த­லின்­போ­து­தான் கட்சி தொடங்கி நேரடி அர­சி­ய­லுக்கு வரு­வ­தாக தெரி­வித்­தார். ஜெய­ல­லிதா, கரு­ணா­நிதி மறை­வுக்­குப் பிறகு தமி­ழக அர­சி­ய­லில் வெற்­றி­டம் ஏற்­பட்­டி­ருப்­பது உண்­மை­தான். அந்த வெற்­றி­டத்தை நிரப்­பவே நான் அர­சி­ய­லுக்கு வரு­கி­றேன் என்று ரஜி­னி­காந்த் கூறி­னார்.

தற்­போது நாடா­ளு­மன்ற பொதுத் தேர்­தல் முடிந்­த­வு­டன் திமுக அணிக்கு லோக்­ச­பா­வில் 38 இடங்­கள் கிடைத்­த­தும், ”இனி தமி­ழ­கத்­தில் அர­சி­யல் வெற்­றி­டம் என்­பதே இல்லை, அந்த வெற்­றி­டத்தை நான் நிரப்­பி­விட்­டேன்” என்று ஸ்டாலின் பேசத்­தொ­டங்­கி­விட்­டார்.

இதே அள­விற்கு கடந்த முறை வெற்­றி­பெற்று லோக்­ச­பா­வில் 3வது பெரிய கட்­சி­யாக இருந்த அதி­முக இந்த முறை படு­தோல்வி அடைந்து ஒரே ஒரு இடத்தை மட்­டுமே வெற்­றி­பெற்­றுள்ள நிலை­யில், திமு­க­வின் வெற்றி தற்­கா­லி­க­மா­ன­து­தான், அடுத்­த­டுத்த தேர்­தல்­க­ளில் அதி­முக வெற்­றி­பெற்று ஆட்சி அதி­கா­ரத்­தில் நீடிக்­கும் என்று அக்­கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓபி­எஸ் கூறு­கி­றார்.

“ஆண்­ட­வன் நல்­ல­வர்­களை சோதிப்­பான், ஆனால் கைவி­ட­மாட்­டான்” என்­கிற ரஜி­னி­யின் டைலாக்கை சொல்லி அவர் ஆறு­தல்­ப­டுத்­திக்­கொள்­கி­றார்.

தமி­ழக மக்­களை பொறுத்­த­வரை தேர்­த­லுக்கு தேர்­தல் அப்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளின் செயல்­பா­டு­கள், அர­சி­யல் சூழ்­நிலை, மத்­தி­யில் யார் தலை­மை­யில் ஆட்சி அமை­ய­வேண்­டும் என்­கிற நிலைப்­பாட்­டில்­தான் வாக்­க­ளிப்­பார்­கள். அந்த வகை­யில், திமுக வெற்­றியோ, அதி­மு­க­வின் வெற்­றியோ நிரந்­த­ர­மா­னது அல்ல. தேர்­த­லுக்கு தேர்­தல் மாறு­ப­டும் என்­பது கண்­கூடு.

எனவே, ஸ்டாலின் நிரப்­பிய வெற்­றி­டம் என்­பது திமு­க­வில் இருக்­க­லாம். தமி­ழக அர­சி­யல் களத்­தில் ஏற்­பட்­டி­ருக்­கிற வெற்­றி­டத்தை அவ­ரால் நிரப்­ப­மு­டி­யாது என்று அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர். எதிர்­கா­லத்­தில், வர இருக்­கிற உள்­ளாட்­சித் தேர்­தல், சட்­ட­மன்ற பொதுத் தேர்­தல் முடி­வு­க­ளைப் பொறுத்­தும் ரஜி­னி­யின் வரு­கைக்­குப் பின் ஏற்­ப­டு­கிற அர­சி­யல் மாற்­றத்தை பொறுத்­தும்­தான் வெற்­றி­டத்­தின் நிலை என்ன என்­பது தெரி­ய­வ­ரும்.