அதிகரிக்கும் புற்று நோய்: சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

உலக அள­வில் புற்று நோய்க்கு அளிக்­கப்­ப­டும் ‘கீமோ­தெ­ரபி’ சிகிச்சை, வரும் 2040ல் 1 லட்­சத்து 50 ஆயி­ரம் பேருக்கு தேவைப்­ப­டும் என்று புதிய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. புற்று நோய் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க, குறிப்­பாக குறைந்த, மத்­திய வரு­வாய் நாடு­க­ளைச் சேர்ந்த நோயா­ளி­க­ளுக்கு கீமோ­தெ­ரபி சிகிச்சை அளிக்க சுமார் ஒரு லட்­சம் சிறப்பு மருத்­து­வர்­கள் தேவை.    

இந்த ஆய்வு முடி­வு­கள் சமீ­பத்­தில் புகழ்­பெற்ற லான்­செட் ஆன்­கா­லஜி (Lancet Oncology) இத­ழில் வெளி­யி­டப்­பட்­டது. உலக அள­வில் 2018ல் 98 லட்­சம் பேருக்கு கீமோ­தெ­ரபி சிகிச்சை தேவை­யாக இருந்­தது என்ற நிலை­யில் வரு­டத்­திற்கு 53 சத­வி­கி­தம் அதி­க­ரித்து, 2040ல் 1 கோடியே 50 லட்­சம் பேருக்கு தேவைப்­ப­டும்.

இந்த ஆய்வை சிட்­னி­யில் உள்ள நியு சவுத் வேல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கம், இன்­காம் இன்ஸ்­டி­டி­யூட் ஃபார் அப்­ளைடு மெடி­கல் சயின்ஸ், கிங்­கார்ன் கேன்­சர் சென்­டர், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள லிவர்­பூல் கேன்­சர் தெரபி சென்­டர், லியா­னில் உள்ள இன்­டர்­நே­ஷ­னல் ஏஜென்ஸி பார் ரிசர்ச் ஆன் கேன்­சர் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்­கள் மேற்­கொண்­ட­னர்.

நியு சவுத் வேல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர் டாக்­டர் புருக் வில்­சன்,  “இன்­றைய நிலை­யில் உலக அள­வில் அதி­க­ரித்து வரும் புற்று நோய் நிச்­ச­ய­மாக சுமையே. தற்­போது உள்ள புற்று நோயா­ளி­க­ளுக்­கும், எதிர்­கா­லத்­தில் பாதிக்­கப்­ப­டும் நோயா­ளி­க­ளுக்­கும் பாது­காப்­பான சிகிச்சை அளிக்க தேவை­யான சிறப்பு மருத்­து­வர்­கள், மற்ற பணி­யா­ளர்­களை அதி­க­ரிக்க உட­ன­டி­யாக திட்­ட­மிட வேண்­டும். நாடு­க­ளும், சிகிச்சை அளிக்­கும் மருத்­து­ம­னை­க­ளும் எங்­க­ளின் புள்ளி விப­ரங்­களை பயன்­ப­டுத்தி எதிர்­கா­லத்­தில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்­கும் சிறப்பு மருத்­து­வர்­க­ளின் தேவை, கீமோ­தெ­ரவி சிகிச்சை போன்­றவை திட்­ட­மி­ட­லாம். இதை தேசிய அள­வி­லும், பிராந்­திய அள­வி­லும், சர்­வ­தேச அள­வி­லும் திட்­ட­மிட வேண்­டும். இதன் மூலம் கீமோ­தெ­ரபி சிகிச்சை தேவைப்­ப­டு­ப­வர்­கள் அனை­வ­ருக்­கும் கிடைக்க செய்ய வேண்­டும். 2018ல் கீமோ­தெ­ரபி தேவைப்­ப­டும் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க 65 ஆயி­ரம் சிறப்பு மருத்­து­வர்­கள் தேவைப்­பட்­ட­னர். இது 2040ல் 1 லட்­ச­மாக உயர வாய்ப்பு உள்­ளது” என்று அவர் கூறி­னார்.

இந்த ஆய்­வில் தற்­போது எத்­தனை சிறப்பு மருத்­து­வர்­கள் தேவை, வரும் 2040ல் எத்­தனை சிறப்பு மருத்­து­வர்­கள் தேவை என்­றும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதே போல் தற்­போது கீமோ­தெ­ரபி சிகிச்சை தேவைப்­ப­டும் நோயா­ளி­கள், எதிர்­கா­லத்­தில் இந்த சிகிச்சை தேவைப்­ப­டும் நோயா­ளி­கள் பற்­றி­யும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.  

2040ல் கீமோ­தெ­ரபி தேவைப்­ப­டும் 1 கோடியே 50 லட்­சம் நோயா­ளி­க­ளில், 1 கோடி பேர் குறைந்த அல்­லது நடுத்­தர வரு­வாய் நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பார்­கள்.

இத்­து­டன் கூடு­த­லாக சிகிச்சை தேவைப்­ப­டும் 52 லட்­சம் பேரில் 75 சத­வி­கி­தத்­தி­ன­ரும், இந்த நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பார்­கள்.

இந்த ஆய்­வில் பங்­கேற்ற நியு சவுத் வேல்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த மற்­றொரு  ஆராய்ச்­சி­யா­ளர் டாக்­டர். மைக்­கேல் பார்­டன், “தற்­போ­துள்ள நில­வ­ரப்­படி உலக அள­வில் புற்று நோய் தாக்­கு­த­லுக்­குள்­ளான நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும். குறிப்­பாக குறைந்த, நடுத்­தர வரு­வாய் உள்ள நாடு­க­ளில் அதி­க­ரிக்­கும். புற்று நோய்க்கு முக்­கி­ய­மான சிகிச்­சை­யான கீமோ­தெ­ரபி சிகிச்­சை­யால் பெரும் எண்­ணிக்­கை­யி­லான நோயா­ளி­கள் பலன் அடை­வார்­கள்” என்று கூறி­னார்.