இந்தியாவில் புற்று நோய்....

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

இந்­தி­யா­வைப் பொருத்த அள­வில், ஆதா­ரங்­கள் அடிப்­ப­டை­யில் கணக்­கிட்­டால் 2018ல் 6 லட்­சத்து 70 ஆயி­ரம் பேருக்கு கீமோ­தெ­ரபி சிகிச்சை தேவைப்­பட்­டது என்று டாக்­டர் புருக் வில்­சன் தெரி­வித்­தார். 2040ம் ஆண்டு வாக்­கில் வரு­டத்­திற்கு 11 லட்­சம் பேருக்கு கீமோ­தெ­ரபி சிகிச்சை தேவை. அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் சிகிச்சை அளிப்­பது போல் கணக்­கிட்­டால் வரு­டத்­திற்கு 12 லட்­சம் முதல் 15 லட்­சம் பேருக்கு சிகிச்சை தேவை” என்று கூறி­னார்.

இந்­தி­யா­வில் தற்­போது புற்று நோய் பாதிப்பு சவால்­வி­டும் நிலை­யில் உள்­ளது. இந்த நோயால் சென்ற வரு­டம் 7 லட்­சத்து 84 ஆயி­ரத்­திற்­கும் அதி­க­மா­னோர் மர­ண­ம­டைந்­துள்­ள­னர். புதி­தாக 11 லட்­சத்து 50 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். தற்­போது இந்­தி­யா­வில் 22 லட்­சத்து 50 ஆயி­ரம் பேர் புற்று நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த 26 வரு­டங்­க­ளில் புற்று நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை இரண்டு மடங்­கிற்­கும் அதி­க­மாக அதி­க­ரித்­துள்­ளது. மற்ற எந்த நோயும் இந்த அள­விற்கு அதி­க­ரித்­த­தில்லை. இரு­தய நோயால் மர­ணம் அடை­பர்­க­ளுக்கு  அடுத்த படி­யாக புற்று நோயால் அதி­கம் பேர் மர­ணம் அடை­கின்­ற­னர்.

இந்­தியா புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்­ப­தில் மிக­வும் பின்­தங்கி உள்­ளது. புற்று நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 83 சத­வி­கி­தத்­தி­னர் முறை­யான சிகிச்சை பெறு­வ­தில்லை. 15 சத­வி­கி­தத்­தி­ன­ருக்கு தவ­றான சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கி­றது. 27 சத­வி­கி­தத்­தி­ன­ருக்கு முறை­யான கீமோ­தெ­ரபி மருந்­து­கள் கிடைப்­ப­தில்லை. இந்த ஆய்­வின் முடி­வில் கீமோ­தெ­ரபி மருந்து அதிக அளவு தேவைப்­ப­டு­வது தெரிய வந்­துள்­ளது. இது போன்ற ஆய்­வு­கள் கடு­மை­யான அளவு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தும்.

இதில் இருந்து இந்­தி­யா­வில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்­கும் சிறப்பு மருத்­து­வர்­க­ளின்,மற்ற பணி­யா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டும். இது பற்றி டாக்­டர் புருக் வில்­சன் கூறு­கை­யில், “இந்­தி­யா­வில் அதி­க­ரிக்­கும் புற்று நோய் நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு மருத்­து­வர்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டும். 2040 வாக்­கில் 7,300 சிறப்பு மருத்­து­வர்­கள் தேவை என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. சீனா, அமெ­ரிக்­கா­விற்கு அடுத்து, இந்­தி­யா­வில் தான் அதிக அளவு மருத்­து­வர்­கள் தேவை.

தற்­போது இந்­தி­யா­வில் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்­கும் 1,250 சிறப்பு மருத்­து­வர்­கள் உள்­ள­னர். இந்த மருத்­து­வர்­க­ளின் பற்­றாக்­கு­றை­யால், முன்­னரே புற்று நோய் பாதிப்பை இனம் காண முடி­யாத கார­ணத்­தி­னால், நோயா­ளி­க­ளுக்கு சிகிச்சை அளிக்க முடி­வ­தில்லை. மார்­பக புற்று நோயை பொருத்த அள­வில் ஐம்­பது முதல் எழு­பது சத­வி­கித நோயா­ளி­க­ளுக்கு ஆரம்ப நிலை­யி­லேயே உள்­ளது. இவர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்க தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் இல்லை.

புற்று நோய் பாதிப்­பிற்கு உள்­ளான நோயா­ளி­க­ளுக்கு ஆரம்ப கட்­டத்­தி­லேயை சிகிச்சை அளிப்­பது அவ­சி­யம். உலக சுகா­தார நிறு­வ­னம், “ஆரம்ப கட்ட நிலை­யில் சிகிச்சை அளிப்­ப­தால், நோய் குண­மாக அதிக வாய்ப்பு உள்­ளது” என்று கூறி­யுள்­ளது. எனவே புற்று நோய் பற்றி விழிப்­பு­ணர்ச்சி ஏற்­ப­டுத்த வேண்­டும். ஆரம்ப கட்­டத்­தி­லேயே பரி­சோ­தனை செய்ய வேண்­டும்.

அதி­க­ரித்து வரும் புற்று நோய் பாதிப்பை புறந்­தள்­ளி­விட முடி­யாது. இத­னால் மர­ணம் ஏற்­ப­டு­வ­து­டன், சிகிச்சை அளிக்­க­வும் அர­சு­கள் அதிக நிதி ஒதுக்க வேண்­டி­ய­துள்­ளது. 2012ல் புற்று நோய் பாதிப்பு கார­ண­மாக 670 கோடி அமெ­ரிக்க டாலர் மதிப்­பிற்கு உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இது இந்­தி­யா­வின் மொத்த உற்­பத்­தி­யில் 0.36தவி­கி­தம்.

இத்­து­டன் நோயா­ளி­க­ளும் சிகிச்­சைக்கு சொந்த பணத்­தில் இருந்து அதிக அளவு செல­வ­ழித்­துள்­ள­னர். இதற்­கான மருத்­து­வச் செலவு கார­ண­மாக 5 கோடியே 50 லட்­சம் பேர் வறு­மை­யில் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

இந்­தி­யா­வில் புற்று நோய் அதி­க­ரிக்க கார­ணம், வாழ்க்கை முறை மாற்­றத்­தால் ஊட்­டச்­சத்து இல்­லாத உண­வு­கள், புகை பிடித்­தல், சுற்­றுச் சூழல் சீர்­கெட்டு வரு­வது, சுற்­றுச் சூழல் மாசு­ப­டு­வது போன்­ற­வையை.

எங்­கள் ஆய்­வில் இருந்து கிடைத்­துள்ள தக­வல்­கள், புள்ளி விப­ரங்­கள் இந்­தியா போன்ற நாடு­க­ளில் அர­சின் கொள்­கை­களை வகுப்­ப­வர்­கள், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு , எதிர்­கா­லத்­தின் புற்று நோயா­ளி­க­ளுக்கு தேவை­யான சிகிச்சை அளிக்க திட்­ட­மிட உத­வி­யாக இருக்­கும் என்று டாக்­டர். புருக் வில்­சன் தெரி­வித்­தார்.

இந்த கட்­டுரை முத­லில் ஹெல்த் இஷ்­யூவ் இந்­தி­யா­வில் (Health Issues India)வில் பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

நன்றி: தி நியூஸ்­மி­னிட் இணை­ய­த­ளத்­தில்

 நிக்­கோ­லஸ் பாரி.