மாணவிகள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019


கன­டா­வில் வின்­னி­பெக் என்ற இடத்­தில் உள்ள சிறார் பாலி­யல் பாது­காப்பு மையத்­தின் சார்­பில் நடத்­திய ஆய்­வில் கடந்த 17 மாதங்­க­ளில் மட்­டும், உறுதி செய்­யப்­பட்ட அல்­லது நடந்­த­தாக சந்­தே­கிக்­கப்­ப­டும் 108 பாலி­யல் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­கள் பள்­ளி­க­ளில் நடந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இதில் 36 சம்­பங்­க­ளில் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது அல்­லது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மற்ற மாண­வி­கள் மீதான பாலி­யல் துஷ்­பி­ர­யோக வழக்­கு­கள் நீதி­மன்­றத்தை கூட எட்­ட­வில்லை. 1997ம் ஆண்­டிற்­கும் 2017ம் ஆண்­டிற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் கன­டா­வில் ஆசி­ரி­யர்­கள் உட்­பட பள்ளி ஊழி­யர்­கள் மாண­வி­களை பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கம் செய்த 1,300 சம்­ப­வங்­கள் நடந்­துள்­ள­தாக ஆய்­வில் இருந்து தெரிய வந்­துள்­ளது. அன்னா கோடி என்ற மாண­விக்கு 13 வயது இருக்­கும் போது, ஒட்­டா­வில் உள்ள பள்­ளி­யில் இசை கற்­றுக் கொடுக்­கும் ஆசி­ரி­யர், ஆறு மாதங்­கள் அன்னா கோடியை பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கம் செய்­துள்­ளார்.

இசை ஆசி­ரி­ய­ரால் மாணவி அன்னா கோடி, துஷ்­பி­ர­யோ­கம் செய்­யப்­ப­டு­வதை கவ­னித்த சில மாண­வர்­கள், அந்த ஆசி­ரி­ய­ருக்கு எங்­கள் மாண­வி­யி­டம் தவ­றாக நடந்து கொள்­வதை நிறுத்து என எச்­ச­ரித்­துள்­ள­னர். மாண­வி­கள் துஷ்­பி­ர­யோ­கம் செய்­யப்­ப­டு­வது மாண­வர்­க­ளுக்கு தெரி­யும் போது, பள்­ளி­யில் உள்ள பெரி­ய­வர்­கள் ஏன் உண­ர­வில்லை என்று கேட்­கின்­றார் மாணவி அன்னா கோடி­யின் தாயார்.

இவ­ரது தாயார் செக்­லாக் மெக்­ட­னால்ட், “என் மகள் பாலி­யல் ரீதி­யாக துன்­பு­றுத்­தப்­ப­டும் போது, நிச்­சம் பள்­ளி­யில் அதை தவிர்ப்­ப­தற்­கான கொள்­கை­கள் இருந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் அவை முறை­யாக செயல்­ப­ட­வில்லை. பள்­ளி­யில் உள்ள பெரி­ய­வர்­க­ளின் கவ­னக்­கு­றைவே கார­ணம்” என்று குற்­றம் சாட்­டு­கி­றார்.

மாண­வி­களை பாலி­யல் துஷ்­பி­ர­யோ­கம் செய்த கார­ணத்­தால் 2016ல் பிலிப் நோலன் என்ற ஆசி­ரி­யர் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டார். இவ­ரது ஆசி­ரி­யர் பணி பறி­போ­னது.