ஒரே நாளில் 800 திமி­லங்­களை பலி கொடுத்த கிராம மக்­கள்

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

டென்­மார்க் நாட்­டில் உள்ள பாரா தீவு மக்­கள் ஒவ்­வொரு வரு­ட­மும் திமிங்­கில வேட்­டை­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர். பட­கு­க­ளில் சென்று திமிங்­கி­லங்­களை பிடித்து, அதன் தலையை வெட்­டு­கின்­ற­னர். கடல் முழு­வ­தும் ரத்­தம் நிறைந்து சிவப்பு நிற­மாக மாறு­கின்­றது. திமிங்­கில உடல் பாகங்­களை வெட்டி உண­வுக்­காக பதப்­ப­டுத்தி பாது­காக்­கின்­ற­னர். இதுவே பாரா தீவு வாசி­க­ளின் முக்­கிய உணவு. டென்­மார்க் அர­சின் அனு­ம­தி­யு­டன் இந்த திமிங்­கில வேட்டை நடை­பெ­று­கி­றது. அதே நேரத்­தில் திமிங்­கி­லங்­களை வேட்­டை­யா­டு­வ­தற்கு எதிர்ப்­பும் வலுத்து வரு­கி­றது. ஜப்­பா­னில் திமிங்­கில வேட்­டைக்கு எதி­ராக போரா­டிய அமைப்பு, பாரா தீவி­லும் போராட்­டங்­களை நடத்­தி­யது.