சொத்­துக்­களை தான­மாக வழங்­கும் இளம் பணக்­கா­ரர்

பதிவு செய்த நாள் : 08 ஜூன் 2019

பிரிட்­ட­னைச் சேர்ந்த இளம் பணக்­கா­ரர் பென் டிலோ (35). இவர் தனது சொத்­தில் பெரும் பகு­தியை  தொண்டு நிறு­வ­னம் மூலம் ஏழை­க­ளுக்கு வழங்க முடிவு செய்­துள்­ளார். இவர் பிட்­மெக்ஸ் என்ற வர்த்­தக நிறு­வ­னத்­தின் நிறு­வ­னர். தனது கடு­மை­யான உழைப்­பால் உயர்ந்­த­வர். இந்த நிறு­வ­னத்­தின் சொத்து மதிப்பு 3.6 பில்­லி­யன் டாலர். இவ­ரது நிகர சொத்து மதிப்பு மட்­டும் 1 பில்­லி­யன் டால­ருக்­கும் அதி­கம் என கூறப்­ப­டு­கி­றது.

கிவ்­விங் பிளிட்ஜ் (Giving Pledge) என்ற அரசு சாரா தொண்டு நிறு­வ­னம் இயங்கி வரு­கி­றது. இதன் நோக்­கம் பெரும் பணக்­கா­ரர்­கள் கஷ்­டப்­ப­டும் ஏழை­க­ளுக்கு உதவ வேண்­டும் என்று பிர­சா­ரம் செய்து வரு­கி­றது. இந்த தொண்டு நிறு­வ­னத்­தில் பில்­கேட்ஸ், வாரன் பபெட் போன்ற பெரும் செல்­வந்­தர்­கள் உள்­ள­னர். இதில் தற்­போது பென் டிலோ­வும் இணைந்­துள்­ளார். தான் கொடுக்­கும் பணம் பல வழி­க­ளில் பயன்­பட வேண்­டும் என்று விரும்­பு­வ­தாக கூறி­யுள்­ளார்.