குளு குளு குல்பி!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

தேவையான பொருட்கள்:

பால் - 500 மி.லி.,

தேங்காய் துருவியது - 100 கிராம்

சீனி - 100 கிராம்

முந்திரி பருப்பு, ஏலக்காய் - சிறிதளவு.

செய்முறை:

கடாயில் பாலை, 25 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதில், துாளாக்கிய சீனியை சேர்க்கவும். துருவிய தேங்காய், முந்திரி பருப்பு, ஏலக்காயை நன்கு அரைத்து, பாலில் கலக்கவும்.  இந்த கலவை ஆறியபின், குளிர்சாதன பெட்டியில், எட்டு மணி நேரம் வைக்கவும். சுவையான, குளுகுளு குல்பி தயார். சிறுவர், சிறுமியர் விரும்புவர்!

–- ரா.வளர்மதி, திண்டுக்கல்.