மொக்க ஜோக்ஸ்

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019


‘‘உனக்கு ஸ்கூல்ல எந்த ஆசிரியரை பிடிக்கும்?’’

‘‘பெல் அடிக்கிற தாத்தாவைதான் பிடிக்கும்!’’

– பொ. பாலாஜி, கடலுார்

‘‘பாட்டிக்கு இன்டர்நெட் பத்தி சொல்லிக் கொடுத்தது தப்பா போச்சு!’’

‘‘ஏன்?’’

‘‘இறந்து போன தாத்தாவை கூகுள்ல தேடிக்கிட்டு இருக்காங்க...!’’

– கிளியோபாட்ரா, சென்னை.

‘‘எதுக்குடா சாக்குபையை துாக்கிட்டு வர்றீங்க?’’

‘‘நீங்க தானே சார், லீவு போட ஒரு சாக்கு வேணும்...ன்னு சொன்னீங்க...!’’

– க. நாகமுத்து, திண்டுக்கல்.


‘‘மண்டை ஓட்டின் பயன் என்ன?’’

‘‘மூளையை பாதுகாக்கிறது...’’

‘‘வேற...?’’

‘‘மந்திரவாதிக்கு மந்திரம் செய்ய உதவுகிறது...’’

– கு. அருணாசலம், தென்காசி.

‘‘உன்னோட காரை திருடிட்டு போனவன, பாராட்டுறியே... ஏன்?’’

‘‘என்னை மறக்காம, பேரீச்சம் பழத்தை பார்சலில் அனுப்பியிருக்கானே...!’’

– ஜி. சுந்தரராஜன், சிவகாசி.