தேங்காய் பர்பி!

பதிவு செய்த நாள் : 07 ஜூன் 2019

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1

சர்க்கரை - 1 டம்ளர்

நெய் - 1 தேக்கரண்டி

கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி

ஏலக்காய்த் துாள் - அரை தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

தேங்காயை, பூ போல துருவி வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

தேங்காய், நன்கு வறுபட்டவுடன், சர்க்கரையைச் சேர்த்து, தண்ணீர் சுண்டும் வரை, கிளர வேண்டும்.

பின், நெய், கேசரி பவுடர், ஏலக்காய்த் துாள் சேர்த்து கிளறி, நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி, வில்லைகள் போடவும்.

சுவையான தேங்காய் பர்பி தயார்!

–- என்.அகல்யா, கடலுார்.