“பேய் கதைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்!” என்று சொல்கிறார் அகிலா.
‘முள்ளும் மலரும்” ( ஜீ தமிழ் ) ‘அருந்ததி’ (சன்) ஆகிய இரு சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் அவர், பேட்டி அளித்ததாவது:
“நான் ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட்டா இருக்கும்போதே நடிக்க ஆரம்பிச்சிட்டேன். 2005லிருந்து 14 வருஷமா நடிச்சுக்கிட்டு இருக்கேன். ‘தென்றல்,’ ‘கோலங்கள்,’ ‘ரோஜா,’ ‘கல்யாண பரிசு,’ ‘அஞ்சலி,’ ‘திருமதி செல்வம்,’ ‘அபூர்வ ராகங்கள்,’ ‘இளவரசி’ உட்பட 40க்கும் அதிகமான சீரியல்கள்ல இதுவரை நடிச்சிருக்கேன். இப்போ ‘முள்ளும் மலரும்’ல லீடிங் கேரக்டர்லயும், ‘அருந்ததி’ புது சீரியல்ல இம்பார்டண்ட் கேரக்டர்லயும் நடிக்கிறேன்.
‘முள்ளும் மலரும்’ல நடிச்சுக்கிட்டு இருக்கும்போது ‘அருந்ததி’ ஆபர் வந்துச்சு. எனக்கு எப்பவுமே ஹாரர் சப்ஜெக்ட்ஸ் மேலே அலாதி பிரியம் உண்டு. கடவுள் பக்தி உள்ள ஒரு பெண்ணுக்கு தீய சக்தி கொடுக்கிற பிரச்னைகள்தான் மெயின் சப்ஜெக்ட். பேய் வீட்ல இருக்கிற ஒரு முக்கிய ஆளா நடிக்கிறேன். இதிலே திகில், உறவுகள், காதல்ன்னு பல அம்சங்களும் இருக்கு. ஆடியன்ஸ் மத்தியிலே நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு.
என்னோட 14 வருஷ கேரியர்ல எத்தனையோ மேடு – பள்ளங்களை பார்த்துட்டேன். ஆரம்ப காலத்திலே எல்லாம் மீடியாவிலே ‘சுதந்திரம்’ இருந்துச்சு. அது இப்போ இல்லே. நாம எது செஞ்சாலும் உடனே வைரலாயிடுது. டெக்னாலஜி டெவலப்மெண்ட்! அதை ஒண்ணும் பண்ணமுடியாது. நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்.
‘சரவணா’தான் நான் நடிச்ச முதல் படம். அதுக்கப்புறம் ‘பொல்லாதவன்’, ‘அரண்மனை,’ ‘திருவண்ணாமலை,’ ‘அரசாங்கம்,’ ‘பிள்ளையார் தெரு கடைசி வீடு’ இப்படி பல படங்கள்ல நடிச்சேன். நிறைய சீரியல்களை ஒத்துக்கிட்டதால, என்னால தொடர்ந்து சினிமாவிலே நடிக்க முடியாம போயிடுச்சு. நேரம் கிடைச்சா - நல்ல கேரக்டர்கள் அமைஞ்சா நிச்சயமா சினிமாவிலே நடிப்பேன். பொதுவா, சப்ஜெக்ட்ல எனக்கு முக்கியத்துவம் இருக்கான்னு பார்ப்பேன். மத்தபடி, மக்கள் விரும்புற கதைகள்ல நடிக்கிறதுதான் என் ஆசை. அதையும் மீறி சீரியல்ல எனக்கு கொடுக்கப்படுற கேரக்டர் எப்படிப்பட்டதா இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு நடிப்புத்திறமையை வெளிப்படுத்த நினைப்பேன்.
‘ஐடியா செல்லர்’ அப்படீங்கற என் சொந்த புரொடக்ஷன் கம்பெனி மூலமா ‘தேனருவி’ (வசந்த் டிவி) ஷோவையும், ‘மணி மணி மணி’ கேம் ஷோவையும் புரொடியூஸ் பண்றேன். ‘தேனருவி’யை காம்பியருங்கும் பண்றேன்.”