100ஐ கடந்த ‘புலன் விசா­ரணை!’

பதிவு செய்த நாள் : 05 ஜூன் 2019


புதிய தலை­மு­றை­யில், சனிக்­கி­ழ­மை­க­ளில் மதி­யம் 12.30 மணிக்­கும், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் மாலை 3.30 மணிக்­கும் ஒளி­ப­ரப்­பா­கும் ‘புலன் விசா­ரணை,’ 100வது எபி­சோடை கடந்து வெற்­றி­க­ர­மாக பய­ணிக்­கி­றது. நிகழ்ச்சி தயா­ரிப்­பா­ளர் ஹமீது சிந்தா எழுதி டைரக்ட் செய்­கி­றார்.

சட்­டத்­திற்கு புறம்­பாக, விதி­களை மீறி செயல்­ப­டும் நட­வ­டிக்­கை­க­ளை­யும், தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி நடக்­கும் மோச­டி­க­ளை­யும்,  ஒவ்­வொரு  வார­மும் ஆதா­ரத்­து­டன்­அம்­ப­லப்­ப­டுத்­தும்  இந்த தொகுப்பு, முழுக்க முழுக்க சமூக நோக்­கத்­திற்­கா­க­வும், மக்­க­ளின் விழிப்­பு­ணர்­விற்­கா­க­வும் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கி­றது.

மனி­த­னின் மூளையை ‘ஹேக்’ செய்­வது தொடங்கி, வீடியோ காலிங் மூலம் எப்­படி ஏமாற்­று­கி­றார்­கள் என்­பது குறித்த சமீ­பத்­திய  எச்­ச­ரிக்கை  பதிவு, தமிழ் தொலைக்­காட்­சி­க­ளில் இது­வரை யாரும் செய்­தி­ராத முயற்சி. முழுக்க முழுக்க சாமான்ய மக்­க­ளின் விழிப்­பு­ணர்­விற்­காக ஒளி­ப­ரப்­பா­கி­றது.