சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 3– 6–19

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

பொரு­ளா­தார சந்­தை­யில் எந்த மாற்­ற­மும் கடந்த இரண்டு வாரங்­க­ளில் இல்லை. ஆனால் சந்­தை­க­ளில் நல்ல முன்­னேற்­றம். கார­ணம் ஒரு நிலை­யான அர­சாங்­கம் மத்­தி­யில் வந்­தது தான். கருத்­துக் கணிப்பை ஒட்டி தேர்­தல் முடி­வு­க­ளும் இருந்­தது தான். ஏன் பல கருத்து கணிப்­பு­களை விட கூடு­த­லா­க­வும் இருந்­தது.

40 ஆயி­ரம் புள்­ளி­ய­கள் தாண்­டிய பங்­குச் சந்­தை­கள்

ஒரு மகிழ்ச்­சி­யான விஷ­யம் சந்­தை­கள் இந்த வாரம் 40 ஆயி­ரம் புள்­ளி­க­ளை­யும் தாண்­டி­யது தான். ஆனால் இது­போல ஒரு உச்­சத்தை எட்­டும்­போது நிச்­ச­யம் சந்­தை­யில் விற்று லாபம் பார்ப்­ப­வர்­கள் இருப்­பார்­கள். அது தான் நடந்­தது இங்­கும். கருத்து கணிப்பு முடி­வு­க­ளைப் பற்றி விஷே­ச­மாக நாம் முதல் பக்­கத்­தில் எழு­தி­யதை தொடர்ந்து அதில் குறிப்­பிட்­டி­ருந்த பங்­கு­களை வாங்­கி­யி­ருந்­தாலே நல்ல லாபங்­கள் உங்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கும்.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 117 புள்­ளி­கள் குறைந்து 39714 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. தேசி­ய­பங்­குச்­சந்தை 23 புள்­ளி­கள் குறைந்து 11922 புள்­ளி­க­ளில்­மு­டி­வ­டைந்­தது. சென்ற வாரத்தை விட இந்த வாரம் 280 புள்­ளி­கள் கூடி மும்பை பங்­குச் சந்­தை­யில் கூடி முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

புதிய நிதி­ய­மைச்­சர்

அருண் ஜெயிட்லி அமைச்­ச­ராக தொடர் விரும்ப்­பம் இல்லை என தெரி­வித்த பிறகு, நிதி­ய­மைச்­ச­ராக அமித்ஷா வரு­வார் அல்­லது பியூஸ் கோயல் வரு­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டா­லும் அவர்­க­ளை­யெ­ல­லம் புறம்­தள்­ளி­விட்டு நிர்­மலா சீதா­ரா­மன் நிதி அமைச்­ச­ராக பதவி ஏற்­றி­ருக்­கி­றார். அவ­ரி­டம் நிறைய எதிர்­பார்ப்­பு­கள் இருக்­கின்­றன. அவர் அந்த எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்ற மிக­வும் கடி­ன­மாக உழைக்க வேண்­டும். நாட்­டின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்­கான வழி­களை அவர் முத­லில் தேட­வேண்­டும். வேலை­யில்லா திண்­டாட்­டத்தை குறைக்க வழி­வகை செய்ய வேண்­டும். குறைந்து வரும் ஜிடி­பியை கூட்­டு­வ­தற்­கான முயற்­சி­கள் எடுக்க வேண்­டும். ஜிஎஸ்டி பிரச்­ச­னை­களை தீர்க்க வேண்­டும். குறிப்­பாக சிமெண்­டிற்­கான ஜிஎஸ்­டியை 28 சத­வீ­தத்­தி­லி­ருந்து 18 சத­வீ­த­மாக குறைக்க வேண்­டும்.  இதற்­கெல்­லாம் மேல் ஒரு இருக்­கும் ஒரு கஷ்­ட­மான வேலை என்­ன­வென்­றால் ஜூலை 5ஆம் தேதி பட்­ஜெட் பட்­ஜெட். இதை சமர்ப்­பிப்­ப­தற்­கான எல்லா வேலை­க­ள­யும் செய்­தாக வேண்­டும். பட்­ஜெட்­டி­லும் பெரிய எதிர்­பார்ப்­பு­கள் இருக்­கின்­றன, அந்த எதிர்­பார்ப்­பு­களை நிறை­வேற்ற வேண்­டும். பெரிய  எதிர்­பார்ப்பு என்­ன­வென்­றால் எப்­போ­தும் இருப்­பது தான் வரு­மான வரி சலுகை அதி­க­மாக கொடுக்­கப்­பட வேண்­டும் என்­பது தான்.

என்ன பங்­கு­கள் வாங்­கா­லம்?

பெர்­ஜர் பெயின்ட்ஸ், பி.ஐ. இண்­டஸ்­டீ­ரீஸ், ஏரீஸ் அக்ரோ, எல் அண்டு டி., உஜ்­ஜி­வன் பைனான்­சி­யல், வினாதி ஆர்­கா­னிக்ஸ்,  இண்­டர்­கு­ளோப் ஏவி­யே­ஷன் ஆகிய பங்­கு­கள் உங்­கள் போர்ட்­போ­லி­யோ­வில் இருக்­க­லாம்.

வாரன் பஃபே

உல­க­ள­வில் மிக­வும் புகழ்­பெற்ற பங்­குச் சந்தை நிபு­ண­ரான வாரன் பஃபே வரு­டா­வ­ரு­டம் நடத்­தும் சாரிட்டி லஞ்ச் பார்ட்டி உலக அள­வில் மிக­வும் பிர­ப­லம். இந்த சாரிட்டி லஞ்ச்­சில் கலந்­து­கொள்ள வரு­ப­வர்­கள் பணம் கட்ட வேண்­டும். அப்­படி பணம் கட்­டு­வது பணம் கட்­டு­வ­தில் யார் அதி­க­மாக கட்டி இருக்­கி­றார்­களோ அவ­ரு­டன், அவ­ரு­டைய நண்­பர்­கள் ஏழு பேரு­ட­னும் வாரன் பஃபே விருந்­தில் கலந்து கொள்­வார். இது வருடா வரு­டம் நடந்து வரு­கி­றது. இதில் கிடைக்­கும் பணத்தை இவ­ரு­டைய மனைவி தொடங்­கிய ஒரு சாரிட்டி நிறு­வ­னத்­திற்கு அளிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த வரு­டம் இந்த சாரிட்டி விருந்­திற்கு  பல போட்­டி­யா­ளர்­கள் போட்டி போட்­டுக் கொண்டு நான் வரு­கி­றேன், நீ வரு­கி­றேன் என்று தங்­க­ளு­டைய சாரிட்டி அமெண்­டையை  கூட்­டிக் கொண்டே சென்­றார்­கள். கடை­சி­யாக 4.57 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் கொடுத்து அந்த சாரிட்டி விருந்­தில் கலந்து கொள்­ளும் வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது. கிட்­டத்­தட்ட 32 ரூபாய் இந்த விருந்­தில் அவர் கலந்து கொள்­கி­றார். இந்த பணம் முழு­வ­தும் நல்ல காரி­யங்­க­ளுக்­காக செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது.  கடந்த 10 வரு­டத்­தில் இது போன்று நடத்­திய சாரிட்டி விருந்­து­க­ளில் இருந்து 30 மில்­லி­யன் டாலர் வரை கிடைக்­கப் பெற்­றி­ருக்­கி­றது. இதன் மதிப்பு சுமார் 210 கோடி ரூபாய்­கள் ஆகும். இவை அனைத்­தும் மக்­க­ளின் நல்ல காரி­யங்­க­ளுக்­காக செல­வ­ழிக்­கப்­ப­டு­கி­றது.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்

 நான்­கா­வது காலாண்­டில் ஜிடிபி வளர்ச்சி 5.8 சத­வீ­த­மாக இருக்­கி­றது. இது கடந்த ஐந்து வரு­டங்­க­ளில் மிக­வும் குறை­வா­ன­தா­கும். மேலும் வேலை­யில்­லாத் திண்­டாட்­டம் சத­வீ­தம் கடந்த 45 வரு­டங்­க­ளில் மிக­வும் அதி­க­மா­ன­தாக இருக்­கி­றது. இவற்­றை­யெல்­லாம் வைத்து பார்க்­கும்­போது இந்த அர­சாங்­கத்­தின் முன்  தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பெரிய பிரச்­ச­னை­கள் இருக்­கின்­றன.

இவை­களை தீர்ப்­ப­து­தான் அல்­லது தீர்ப்­ப­தற்­கான வழி­களை கண்­டு­பி­டிப்­பது தான் தற்­போது இந்த அர­சாங்­கத்­தின் தலை­யாய கட­மை­யாக இருக்­கும், இருக்க வேண்­டும். நிலை­யான மத்­திய அர­சாங்­கம் இருப்­ப­தால் இவற்றை தீர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள் எடுக்க எல்­லோ­ரும் உறு­து­ணை­யாக இருப்­பார்­கள் என நம்­ப­லாம்.

ஆத­லால் சந்­தை­கள் லாப நோக்­கில் சிறிது கீழே சென்­றா­லும் மறு­படி நல்ல முன்­னேற்­றத்­திற்கு செல்­வ­தற்­கான வழி­கள் அறி­கு­றி­கள் நிறைய இருக்­கின்­றன. தொடர்ந்து நல்ல பங்­கு­க­ளில் முத­லீடு செய்து வாருங்­கள்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.com