ஸ்டார்ட் அப்: உபர்

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019

வீட்டை விட்டு இறங்­கி­னால் நமக்கு உபர் தேவை, இல்லை ஓலா தேவை. அப்­படி நம்மை கெடுத்து வைத்­தி­ருக்­கி­றது இந்த வாக­னக் கம்­பெ­னி­கள். அனால் அவை லாபத்­தில் ஓடு­கின்­றதா என்­றால் இல்லை. ஓலா, உபர், பிளிப்­கார், அமே­சான் போன்ற பல வியா­பார நிறு­வ­னங்­கள் நஷ்­டத்­தில் தான் இருக்­கின்­றன. அது­வும் பல கோடி­க­ளில். கார­ணம் என்ன? அவர்­கள் கொடுக்­கும் டிஸ்­க­வுண்ட் மற்­றும் வியா­பார செலவு நடை­கள் தாம். உபர் மட்­டும் சென்ற காலாண்­டில் 7000 கோடி நஷ்­டத்­தில் இருக்­கி­றது. இவ்­வ­ளவு நஷ்­டம் இருந்­தும் அவர்­கள் தொடர்ந்து நடத்­தும் மந்­தி­ரம் என்ன? முத­லில் கஸ்­ட­மர்­களை பிடிக்க வேண்­டும். அதி­கப்­ப­டி­யான கஸ்­ட­மர்­கள் இந்த நஷ்­டங்­களை சரி செய்து விடும் என்ற நம்­பிக்கை தான். நம்­பிக்கை தான் வாழ்க்கை.

17 வய­தில் ஸ்டார்ட் அப்

17 வய­தில் பெரும்­பா­லான இளை­ஞர்­கள் என்ன செய்து கொண்­டி­ருப்­பார்­கள். சீரி­ய­ஸாக படித்து கொண்­டி­ருப்­பார்­கள். மேலே என்ன படிக்­க­லாம் என்று யோசித்­துக் கொண்­டி­ருப்­பார்­கள். ஆனால் டெல்­லி­யைச் சேர்ந்த 6 இளை­ஞர்­கள் ஒன்று சேர்ந்து ஒரு நர்­சரி ஸ்டார்ட் அப் ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். சாப்ரா என்ற இளை­ஞர் தனது பக்­கத்து வீட்­டில் தோட்­டத்தை மிக­வும் சரி­யில்­லா­மல் பாது­காத்து வந்­த­தைப் பார்த்து அவர்­கள் தோட்­டத்தை சரி செய்து அழகு படுத்தி தரு­கி­றேன் என்று ஆரம்­பித்த வேலை இன்று அவர்­களை விடா­மல் போனில் துரத்தி கொண்­டி­ருக்­கி­றது மற்ற ஆர்­டர்­கள். இவர்­கள் ஆர்­டர்­கள் எடுத்து அந்த ஆர்­டர்­க­ளுக்­கான செடி­களை பெரிய நர்­ச­ரி­யில் இருந்து வாங்கி டெலி­வரி செய்­கி­றார்­கள். மற்­றும் வீட்­டுத் தோட்­டத்தை எப்­படி பாது­காப்­பது என்­றும் சொல்­லி­யும் தரு­கி­றார்­கள். நிறைய செடி விற்­கும் கம்­பெ­னி­கள் இருந்­தா­லும் (அமே­சான் உள்­பட) பூல்­வாரி என்ற இவர்­க­ளின் கம்­பெ­னி­யின் சிறப்பு உங்­க­ளுக்கு கார்­ட­னர் தேவை என்­றால் அனுப்­பு­வது, கார்­டனை எப்­படி மேனேஜ் செய்­வது என்று கற்­றுத் தரு­வது, செடி­களை உங்­கள் வீட்­டிற்கே டெலி­வரி செய்­வது, உரங்­களை டெலி­வரி செய்­வது போன்­ற­வை­க­ளை­யும் செய்­கி­றார்­கள். ஒரு கால் செண்­ட­ரும் வைத்­தி­ருக்­கி­றார்­கள். இதில் கார்­டன் பற்­றிய சந்­தே­கங்­க­ளுக்கு பதில் தரு­கி­றார்­கள்.

இது பல­ரும் செய்­யாத ஒன்று. இத­னால் இந்த வரு­டத்­தில் சிறந்த ஸ்டார்ட் அப் என்ற விரு­தை­யும் டை என்ற அமைப்­பி­ட­மி­ருந்து வாங்­கி­யி­ருக்­கி­றார்­கள். ஆளுக்கு ஒரு லட்­சம் போட்டு ஆறு பேர் சேர்ந்து ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்­கள். தற்­போது டெல்­லி­யில் மட்­டும் இருக்­கி­றது. இன்­னும பல நக­ரங்­க­ளுக்கு விரிவு படுத்­த­வுள்­ளார்­கள்.

இட்லி, தோசை

இட்லி, தோசை என்­றால் மயங்­கா­த­வர்­கள் இல்லை. வெளி­நாட்­டுக்­கா­ரர்­கள் இந்­தியா வந்­தா­லும் சரி, வட­நாட்­டு­கா­ரர்­கள் ஹோட்­ட­லுக்கு சென்­றா­லும் அங்கு முத­லில் கேட்­பது இட்லி, தோசை தான்.

மேலும், இந்­தி­யர்­கள் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றால் ஏங்­கு­வது அங்கு இட்லி கிடைக்­காதா? தோசை கிsடைக்­காதா? என்று தான்.

அந்த காலத்­தில் வீட்­டில் கல்­லில் அரைத்­தார்­கள், அவர்­க­ளுக்கு நேர­மி­ருந்­தது. அப்­போது இட்லி அரைக்­கும் கல் நிரந்­த­ர­மாக இருக்­கும், குழவி மாவை ஆட்­டும். தற்­போது மாவு அரைக்­கும் இயந்­தி­ரத்­தில் கல் சுற்­று­கி­றது, குழவி நிரந்­த­ர­மாக இருக்­கி­றது.

 ஆனால் ஓடிக்கொண்­டி­ருக்­கிற உல­கத்­தில் இட்லி, தோசைக்கு மாவு அரைப்­பது என்­பது ஒரு பெரிய வேலை. அதற்கு யாரி­ட­மும் நேரம் இருப்­ப­தில்லை. இதை மன­தில் வைத்து பல இடங்­க­ளில் சிறிய அள­வில் மாவு அரைத்து, பாக்­கெட்­டில் போட்டு வியா­பா­ரம் செய்து வந்­தார்­கள். இதில் ஒரு பெரிய வியா­பா­ரம் இருப்­பதை மன­தில் கொண்டு ஐ.ஐ.எம். படித்த முஸ்­தபா அதி­க­மாக மக்­கள்  வேலைக்­குப் போகும் பெங்­க­ளூர் நக­ரில் ஐ.டி. என்ற பெய­ரில் (அதா­வது ஐ.டி. என்­றால் என்ன அர்த்­தம் என்­றால் இட்லி, தோசை என்று பொருள்­ப­டும்) இட்லி, தோசை மாவு­களை வியா­பா­ரத்­திற்கு கொண்டு வந்­தார்­கள். பின்­னர் அது ஊர் ஊராக விரி­வ­டைந்து வியா­பா­ரம் பல ஊர்­க­ளுக்கு இன்று பர­வி­யுள்­ளது. வியா­பா­ர­மும் சக்­கைப் போடு போடு­கி­றது. இட்லி, தோசை மாவு தவிர பல வகை உண­வுப் பொருட்­கள் தயா­ரிப்­ப­தி­லும் இறங்­கி­யுள்ள இவர்­கள், தற்­போது புதி­தாக கொண்டு வந்­தி­ருப்­பது, ஐ.டி. டிகா­ஷன் ஆகும். அதா­வது ரெடி­மேட் டிகா­ஷன். பில்­டர் காபி விரும்­பு­ப­வர்­க­ளுக்கு இது ஒரு இனிப்­பான செய்தி ஆகும். இது தவிர ஆர்­கா­னிக் இட்லி, தோசை மாவு வியா­பா­ரத்­தி­லும் இறங்­கி­யுள்­ளார்­கள்.

இட்லி, தோசை மாவு­க­ளுக்கு எல்லா ஊர்­க­ளி­லும் வர­வேற்பு இருக்­கி­றது. இதை மன­தில் வைத்­துக் கொண்டு கோவை­யைச் சேர்ந்த “நலன் பிரஷ்” என்ற நிறு­வ­னம் மிக­வும் சுகா­த­ர­மான முறை­யில் கைப­டா­மல், ஆர்.ஓ. வாட்­டர் சேர்த்து, இயற்­கை­யான முறை­யில் புளிக்க வைத்து கோவை­யில் தற்­போது பெரிய அள­வில் விற்­பனை செய்து வரு­கி­றார்­கள். வீடு­க­ளுக்­கும் பால் போடு­வது போல் நேர­டி­யாக கோவை­யில் சப்ளை செய்­கி­றார்­கள். முக­வர்­கள் மூல­மா­க­வும் விற்­பனை செய்து வரு­கி­றார்­கள். விரை­வில் சென்­னைக்­கும் வர­வி­ருக்­கி­றார்­கள். தொடர்பு கொள்ள 7010025007