கோவை­யில் அதி­பன் குழு­மம் வழங்­கும் ஏற்­று­மதி கருத்­த­ரங்­கம்

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019


புதிய தொழில் மற்­றும் ஏற்­று­மதி வாய்ப்­பு­களை தெரிந்து கொள்­ளும் வகை­யில், மும்பை சேது­ரா­மன் சாத்­தப்­பன்­ந­டத்­தும் ‘வெற்­றி­க­ர­மாக ஏற்­று­மதி செய்­வது எப்­படி? ‘ஸ்டார்ட்­அப்’ தொடங்­கு­வது எப்­படி?’ என்ற கருத்­த­ரங்கு, தமி­ழில்,கோவை­யில் வரும் ஜுன் மாதம் 9ம் தேதி நடக்­கி­றது. தொழில்­மு­னை­வோர், பெண்­கள், கல்­லுாரி மாணவ,மாண­வி­ய­ருக்கு இது பயன் தரும்.  ரூபாய்.10 ஆயி­ரம் தொடங்கி, பல கோடி ரூபாய் வரைக்­கும் புது­மை­யான     ஐடி­யாக்­க­ளு­டன் தொழில் தொடங்­கும்‘ஸ்­டார்ட்­அப்’ முயற்­சி­கள் நாடு            முழு­வ­தும் வேகம் எடுத்­துள்­ளது. தொழி­ல­தி­பர்­கள், தொழில்­மு­னை­வோர், சிறு­வ­ணி­கர்­கள், கல்­லுாரி மாண­வர்­கள், இல்­லத்­த­ர­சி­கள், மக­ளிர் சுய­உ­த­விக் குழுக்­கள்     என பல­ரும் ‘ஸ்டார்ட் அப்’­மு­யற்­சி­க­ளில் தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­னர். ‘ஸ்டார்ட் அப்’ தொடங்கி அவற்றை வெற்­றி­க­ர­மாக முடிக்க நுாற்­றுக்­க­ணக்­கான வழி­மு­றை­க­ளும், விதி­மு­றை­க­ளும் உள்­ளன.

தொழில் தொடங்க நினைப்­ப­வர்­கள், ஏற்­ற­மதி குறித்து தவ­றில்­லா­மல் தெரிந்து கொண்டு ஏற்­று­ம­தி­யில் ஈடு­ப­ட­நி­னைப்­ப­வர்­க­ளுக்கு பய­ன­ளிக்­கும் வகை­யில், கோவை­யில் ஜுன் 9ம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை ‘‘வெற்­றி­க­ர­மா­க­ஏற்­று­மதி செய்­வது எப்­படி? ஏற்­று­ம­திக்கு மார்க்­கெட்­டிங் செய்­வது எப்­படி? ‘ஸ்டார்ட் அப்’ தொடங்­கு­வது எப்­படி?’ என்­ற­த­லைப்­பில் ஒரு நாள் கருத்­த­ரங்கு தமி­ழில் சேது­ரா­மன் சாத்­தப்­பன் நடத்த உள்­ளார்.  இந்த கருத்­த­ரங்கு தொழில்­மு­னை­வோர், மாண­வர்­கள், பெண்­கள், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு புதிய வாய்ப்­பு­களை திறந்­து­வி­டும்.

பல்­துறை வல்­லு­நர்­கள்

இந்­தக் கருத்­த­ரங்­கத்­தில் பல்­துறை வல்­லு­னர்­க­ளும் பேச­வி­ருக்­கி­றார்­கள். குறிப்­பாக கோவை வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஆர்­கா­னிக் துறை­யின் தலை­வர் டாக்­டர் சோம­சுந்­த­ரம் அவர்­கள் ஆர்­கா­னிக் பொருட்­களை எப்­படி ஏற்­று­மதி செய்­வது என்­பது பற்­றி­யும், பெங்­க­ளூ­ரைச் சார்ந்த டிக்­கெட்­கூஸ் என்ற கம்­பெ­னி­யின் தலை­வர் கார்த்தி தனது ஸ்டார்ட் அப் அனு­ப­வங்­கள் பற்­றி­யும், கோவை­யைச் சேர்ந்த ஆடிட்­டர் திரு கார்த்­தி­கே­யன் ஜிஎஸ்­டி­யும், ஏற்­று­ம­தி­யும் என்­பது பற்­றி­யும் பேச உள்­ளார்­கள்

ஏற்­று­மதி, ஸ்டார்ட் அப் புத்­த­கங்­கள்

இந்த கருத்­த­ரங்­கில் பங்­கேற்­கும் கல்­லுாரி மாணவ, மாண­வி­ய­ருக்கு   கட்­ட­ணத்­தில் 50 சத­வீ­தம் சலுகை உண்டு. ரூபாய் 2000 மதிப்­புள்ள 6 புத்­த­கங்­க­ளும் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டும். கருத்­த­ரங்கு குறித்த விப­ரங்­க­ளுக்கு 9869616533 மற்­றும் 9994029969 என்­ற­எண்­ணில் பேச­லாம்.

அதி­பன் குழு­மம்

இந்த கருத்­த­ரங்கை கோவையை சேர்ந்த மியூச்­சு­வல் பண்டு, இன்­வஸ்­மெண்ட்ஸ், நிதி ஆகிய துறை­க­ளில் செயல் ஆற்றி வரும் அதி­பன் குழு­மம் வழங்­கு­கி­றது. இவர்­கள் இந்த கருத்­த­ரங்­கின் டைட்­டில் ஸ்பான்­ஸ­ராக இருக்­கின்­றார்­கள். தமிழ்­நாட்­டின் இளை­ஞர்­களை தொழில் முயற்­சி­யில் ஈடு­பட வேண்­டும் என்ற நோக்­கத்­தில் இந்த கருத்­த­ரங்கை இணைந்து நடத்­து­வ­தாக  செய்­த­தாக இந்த குழு­மத்­தின் தலை­வர் செல்வா பழ­நி­யப்­பன் தெரி­வித்­தார்.

தின­ம­லர், கோவை மற்­றும் டாக்­டர் எஸ்.என்.எஸ்., ராஜ­லெ­ட­சுமி ஆர்ட்ஸ் அண்டு அறி­வி­யல் கல்­லுாரி ஆகி­யோர் இணைந்து இந்த கருத்­த­ரங்கை வழங்­கு­கின்­றன.