ஏற்­று­மதி உல­கம்: அமெ­ரிக்கா, சீன வர்த்­தக போரை தொடர்ந்து அமெ­ரிக்கா, இந்­தியா வர்த்­தக போர்

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019


அமெ­ரிக்கா சீனா வர்த்­தக போர் உச்­ச­கட்­டத்­தில் சென்று கொண்­டி­ருப்­பது எல்­லோ­ரும் அறிந்­ததே.  அதன் தொடர்ச்­சி­யாக அமெ­ரிக்கா தற்­போது மற்ற நாடு­க­ளு­டன் வர்த்­தக போரை தொடங்க இருக்­கி­றது.  

மெக்­சிகோ நாட்­டில் இருந்து பார்­டர் வழி­யாக விசா இல்­லா­மல் அமெ­ரிக்­கா­விற்­குள் நுழை­ப­வர்­கள் அதி­க­மா­கி­விட்­ட­தால், அமெ­ரிக்கா மெக்­சி­கோ­விற்கு ஒரு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது, அதா­வது தரை­வ­ழி­யாக விசா இல்­லா­மல் அமெ­ரிக்கா உள்ளே நுழை­ப­வர்­களை நிறுத்­தா­விட்­டால் ,மெக்­சிகோ நாட்­டில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் பொருட்­க­ளுக்கு 5 சத­வீத வரி விதிக்­கப்­ப­டும் என அறி­வித்­துள்­ளது.  

இந்­தி­யா­விற்கு காலம் கால­மாக ஜி எஸ் பி என்ற வகை­யில் பல பொருட்­களை வரி­யில்­லா­மல் இறக்­கு­மதி செய்ய அமெ­ரிக்க அனு­மதி அளித்து வந்­தது. இந்த பொருட்­க­ளின் மதிப்பு தற்­போது வரு­டத்­திற்கு 6.5 பில்­லி­யன் டாலர் அள­வாக இருந்­தது. இது கிட்­டத்­தட்ட 45 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு இருந்­தது.  இந்த பொருட்­க­ளுக்கு இருந்த இந்த வரி விலக்கை தற்­போது நிறுத்­தி­விட்­ட­தாக, அதா­வது ஜூன் 5ம் தேதி­யில் இருந்து நிறுத்­தப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ளது. இத­னால் இழப்பு என்­ன­வென்று பார்த்­தால் வரு­டத்­திற்கு சுமார் 260  மில்­லி­யன் டாலர் ஆகும்.

என்­னென்ன பொருட்­கள் இத­னால் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றது என்று பார்த்­தால் கவ­ரிங் நகை­கள், லெதர் பொருட்­கள் (லெதர் கால­ணி­கள் இதில் வராது), மருந்­துப் பொருட்­கள், சர்­ஜி­கல் பொருட்­கள், கெமிக்­கல் மற்­றும் பிளாஸ்­டிக் பொருட்­கள், விவ­சாய விளை­பொ­ருட்­கள் இதில் அடங்­கும்.

கேள்வி: ஸ்டாண்ட் பை எல்.சி. என்­றால் என்ன ?

பதில்: கியா­ரண்­டி­களை சில நாடு­கள் ஸ்டாண்ட் பை எல்.சி.என்று அழைக்­கின்­றன. குறிப்­பாக அமெ­ரிக்கா, மெக்­ஸிகோ, கனடா ஆகிய நாடு­கள் ஆகும். கியா­ரண்­டி­கள்­யூ­னி­பார்ம் ரூல்ஸ் பார் கியா­ரண்­டீஸ் கீழும், ஸ்டாண்ட் பை எல்.சி. கள் -இன்­டர்­நே­ஷ­னல்  ஸ்டாண்ட் பைபி­ராக்ட்­டிஸ் - ன் கீழும் வரும். ஸ்டாண்ட் பை எல்.சி. கேட்­கும் நாடு­கள், கியா­ரண்டி கொடுத்­தால் ஏற்­றுக் கொள்­ளாது. இரண்­டும் தனித்­தனி ரூல்­கள்.

கேள்வி: வங்­கி­யில் டாக்­கு­மெண்ட் களை சமர்ப்­பித்து விட்ட பிறகு வாங்கி அந்த டாக்­கு­மென்­டில் தவறு கண்­டு­பி­டிக்­கி­றது. இந்த டாக்­கு­மெண்ட்­களை நாங்­கள்  திருத்­தி­கொ­டுக்க வழி உண்டா ?

பதில்: ஒரு உதா­ர­ணத்­து­டன் சொல்­வோம். எல்.சி. படி டாக்­கு­மெண்ட் சமர்ப்­பிக்க வேண்­டி­ய­க­டைசி தேதி ஜன­வரி மதம் 10 ம் தேதி என்று வைத்து கொள்­வோம்.  நீங்­கள்­டாக்­கு­மெண்ட் களை 1 ம் தேதி சமர்ப்­பித்து இருந்து பேங்க் 6 ம் தேதி தவ­று­க­ளை­கண்­டு­பித்து சொன்­னால் உங்­க­ளுக்கு இன்­னும் 4  நாட்­கள் அதா­வது 10 ம் தேதி வரை­நாள் இருக்­கி­றது திருத்­திய டாக்­கு­மெண்ட்­களை கொடுக்க.  இதன்­மூ­லம் என்ன தெரி­கி­றது டாக்­கு­மெண்ட்­களை சீக்­கி­ரம் வங்­கி­யில்­கொ­டுப்­பது சிறந்­தது. அப்­போது திருத்தி கொடுக்க உங்­க­ளுக்கு நாட்­கள் இருக்­கும்.