ஒரு பேனாவின் பயணம் – 210 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019

சிறையில் சிறிது காலம் இருப்பது நல்லது!

‘‘அது நாம் இரு­வ­ரும் பேசு­வது போல் ஆகாது. ஆகவே, நான் எழு­து­வ­தில் ஏதே­னும் உனக்­குச் சிறந்த புத்­தி­மதி கூறு­வ­தைப் போலத் தோன்­றி­னால் அதைக் கசப்பு மருந்து உட்­கொள்­ளு­வ­தைப் போல எடுத்­துக் கொள்­ளாதே. நாம் உரை­யா­டிக்­கொண்­டி­ருக்­கும்­போது கூறப்­ப­டும் ஒரு குறிப்பு போன்­றும் அதை எடுத்­துக்­கொண்டு நன்கு ஆராய்ந்து பார்ப்­பா­யாக.

 தேச சரித்­தி­ரங்­க­ளில் நாம் பெரு­மை­யும் சிறப்­பும்  உடைய காலப் பகு­தி­க­ளைப் பற்றி ( GREAT PERIODS) வாசிக்­கி­றோம். பெரி­ய­வர்­கள் தோன்­று­கி­றார்­கள். அவர்­கள் செயற்­க­ரிய செயல்­கள் செய்­கி­றார்­கள். நமது கன­வி­லும் கற்­ப­னை­யி­லும் அப்­பண்­டைக் காலத்து வீர புரு­ஷர்­க­ளும் ஸ்திரீ­க­ளும்  வாழ்ந்த காலங்­க­ளில் நாமும் வாழ்­வது போல­வும் அவர்­க­ளைப் போலவே நாமும் செயற்­க­ருஞ்­செ­யல்­கள் புரி­வது போல­வும் எண்­ணிச் சில சம­யங்­க­ளில் இன்­று­பு­று­கின்­றோம். ஆர்க் ஜோன் என்­ப­வ­ளின் கதையை நீ முதன் முத­லில் வாசித்­த­போது அதிலே மிக­வும் ஈடு­பட்டு அவ­ளைப் போல் நீயும் ஆக­வேண்­டு­மென்று நினைத்­தது உனக்கு ஞாப­கம் இருக்­கி­றதா?

 சாமா­னிய மக்­க­ளி­டையே உய­ரிய குணங்­கள் சாதா­ர­ண­மா­கக் காணப்­ப­டு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு உண்­ணும் உண­வைப் பற்­றி­யும் வீடு, வாசல், குழந்­தை­க­ளைப் பற்­றி­யும் நினைப்­ப­தற்கே பொழுது சரி­யா­கப் போய்­வி­டு­கி­றது.

ஆனால், அதற்­கு­ரிய காலம் பிறக்­கும்­போது ஒரு ஜன சமு­தா­யம் முழு­வ­துமே ஒரு பெரிய லட்­சி­யத்­தில் (GREAT CAUSE)  ஆர்­வம் கொண்டு ஆவே­சம் நிறைந்து நிற்­கி­றது. அப்­பொ­ழுது சாதா­ரண மனி­தர்­க­ளும் பெரிய வீரர்­கள் ஆகி­றார்­கள். சரித்­தி­ரம் கிளர்ச்சி நிறைந்­த­தா­க­வும் முக்­கி­யம் வாய்ந்­த­தா­க­வும் மாறு­கி­றது. பெரிய தலை­வர்­க­ளின் மந்­திர சக்­தி­யி­னால் ஜன சமு­தா­யம் முழு­வ­தும்  உறக்­கத்­தி­னின்று  விழித்­தெ­ழுந்து தீரச் செயல்­கள் புரி­கின்­றன.

 நீ பிறந்த 1917ம் ஆண்டு சரித்­தி­ரத்­தில் நினை­வு­கூர்­தற்­கு­ரிய ஆண்­டு­க­ளில் ஒன்­றா­கும். அவ்­வ­ரு­ஷம் நீ பிறந்த மாதத்­தி­லேயே ரஷ்ய தேசத்­தில் துன்­ப­மும் வாடும் எழை எளி­ய­வர்­க­ளுக்­காக அன்­பி­னால் உள்­ளம் கரைந்­து­ரு­கும் லெனின் என்­னும் பெரி­யார் தலை­மை­யின்­கீழ் அத்­தே­சத்து மக்­கள் சரித்­தி­ரத்­தி­லேயே இதற்­கு­முன் கண்­டும் கேட்­டு­மி­ராத அற்­பு­தம் ஒன்­றைச் செய்து முடித்­தார்­கள். லெனின் ஆரம்­பித்த பெரிய புரட்­சி­யா­னது, ருஷி­யா­வை­யும் சைபீ­ரி­யா­வை­யும் அடி­யோடு மாற்றி விட்­டது. இன்­றும் நம் நாட்­டில் மற்­றொரு பெரி­யார் துன்­பத்­தில் உழு­வோர்க்­கெல்­லாம் இரங்கி அவர்­கள் துன்­பத்தை துடைக்க விரை­யும் அன்பு வடி­வ­மான உத்­த­மர், அவ­ரு­டைய ஆத்ம சக்­தி­யால் தூண்­டப்­பட்டு நம் நாட்டு மக்­கள் சுதந்­தி­ர­ம­டை­ய­வும், ஏழை­கள் வறுமை முத­லான கொடு­மை­க­ளி­னின்­றும் நீங்கி பிழைக்­க­வும் பெரும் பெரும் காரி­யங்­க­ளை­யும் தியா­கங்­க­ளை­யும் செய்து வரு­கி­றார்­கள்.

 பாபுஜி ( காந்தி) இன்று சிறை­யில் கிடக்­கி­றார். ஆனால் அவ­ரு­டைய செய்­தியோ மாய மந்­தி­ரம் போன்று கோடிக்­க­ணக்­கான இந்­திய மக்­க­ளின் இத­யத்தே புகுந்து நிற்­கி­றது. ஆண்­க­ளும், பெண்­க­ளும் குழந்­தை­க­ளும் கூட தங்­கள் சிறிய கூட்டை உத­றித் தள்­ளி­விட்டு இந்­திய சுதந்­தி­ரப் போராட்­டத்­தின் முன்­ன­ணி­யில் நிற்­கி­றார்­கள். இந்­தி­யா­வில், இன்று நாம் சரித்­தி­ரத்­தையே சிருஷ்­டித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். நமது கண் முன்­பாக இவை நடக்க நாம் பார்ப்­ப­தா­லும், இந்­தப் பெரிய நாட­கத்­தில் நாமும் சிறிது பங்கு எடுத்­துக்­கொள்­வ­தா­லும் நீயும் நானும் பாக்­கி­ய­சா­லி­கள்.

 இந்த பெரிய இயக்­கத்­தில் நாம் எவ்­வாறு நடந்து கொள்­வது? நமது பங்­குக்கு என்ன வரும் என்று நான் சொல்ல முடி­யாது. அது என்­ன­வா­யி­னும் நாம் எடுத்­தி­ருக்­கும் பெருங்­கா­ரி­யத்­துக்கு  இழுக்­குத் தரு­வ­தையோ நமது மக்­க­ளின் மானத்­துக்கு கேடு விளை­விக்­க­கூ­டி ­ய­தையோ நாம் செய்­யக் கூடாது.

இந்­தி­யா­வின் போர் வீரர்­க­ளா­கிய நம்­மி­டத்­தில் நமது நாட்­டின் தூய்­மை­யான மானம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நாம் செய்­ய­வேண்­டு­வ­தைப் பற்றி அடிக்­கடி நம்­முள் ஐயம் எழ­லாம். இது சரி, இது சரி­யல்ல என்று தேர்­வது எளி­தல்ல. உனக்கு ஐயம் எழும்­போ­தெல்­லாம் அதை தீர்த்­துக்­கொள்ள ஒரு சிறு வழி சொல்­லித் தரு­கி­றேன். இர­க­சி­ய­மாக எதை­யும் செய்­யாதே. பிற­ரி­ட­மி­ருந்து  நீ ஒளிக்க விரும்­பு­வதை ஒரு போதும் செய்­யாதே.

 நீ எதை­யா­வது ஒளிக்க விரும்­பு­வ­தன் அர்த்­தம் உனக்­குள் பயம் இருக்­கி­றது என்­ப­தா­கும். அச்­சம் தீயது. தகா­தது. எதற்­கும் அஞ்­சாதே. மற்­ற­வை­யெல்­லாம் தானே வந்து சேரும். அச்­சம் ஒழிந்­தால் வெட்­கப்­ப­டத்­தக்க காரி­யம் எதை­யும் நீ செய்­ய­மாட்­டாய். பாபுஜி தலை­மை­யின்­கீழ் நடந்து வரும் சுதந்­திர இயக்­கத்­தில் ஒளிப்­ப­தற்­கும் மறைப்­ப­தற்­கும் ஒன்­று­மில்லை என்று உனக்­குத் தெரி­யும். நாம் சொல்­வதை அஞ்­சா­மல் சொல்­கி­றோம், செய்­வதை அஞ்­சா­மல் செய்­கி­றோம். வெளிப்­ப­டை­யாக வேலை செய்து வரு­கி­றோம். அதே­போல, நமது சொந்த வாழ்க்­கை­யி­லும் யாதொரு ஒளி­வு­ம­றை­வு­மின்றி செயல்­பு­ரிய நாம் பயில வேண்­டும். நாம் தனி­மை­யில் செய்ய வேண்­டிய கடன்­கள் பல இருக்­கின்­றன. அவற்றை நாம் பிறர்  கண்­ணுக்­குப் படா­மல் செய்­யத்­தான் வேண்­டும். அது வேறு. ரக­சி­ய­மான காரி­யங்­கள் செய்­வது வேறு. குழந்­தாய், நீ இம்­மு­றை­யிலே பழகி வந்­தால் ஒளி­யும் அமை­தி­யும் பெற்று விளங்­கு­வாய். யாது நேரி­னும் கலங்­காத உள்­ளம் பெறு­வாய்.

 நீண்­ட­தொரு கடி­தம் எழு­தி­விட்­டேன். ஆயி­னும் உனக்கு நான் சொல்ல விரும்­பு­வது இன்­னும் எவ்­வ­ளவோ இருக்­கி­றது. ஒரு கடி­தத்­தில் எல்­லா­வற்­றை­யும் எப்­ப­டிச் சொல்ல முடி­யும்?

 நம் நாட்­டில் நடை­பெ­றும் இச்­சு­தந்­திர போராட்­டத்தை நீ உன் கண்­ணெ­தி­ரி­லேயே பார்க்க கொடுத்து வைத்­தி­ருக்­கி­றாய் என்று முன்பே சொன்­னேன்.  இன்­னொரு விதத்­தி­லும் நீ அதிர்ஷ்­ட­சாலி. நமது தாய் வீர­மும் அன்­பும் உடை­ய­வள். அவள் உன் ஐயத்­தைத் தெளி­விப்­பாள். அச்­சத்­தை­யெல்­லாம் போக்­கு­விப்­பாள்.

 அன்பே, விடை பெற்­றுக்­கொள்­ளு­கி­றேன். இந்­திய நாட்­டுக்­குத் தொண்டு புரி­யும் வீர­மா­தாக நீ வளர்ந்து விளங்க வேண்­டும்.

 கொள்­ளை­யாக அன்­பும், ஆசி­யும்.

புத்­தாண்டு பரிசு

ஜன­வரி 1, 1931 இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு நான் அல­கா­பாத்­தி­லி­ருந்­தேன். நீ மூசி­ரி­லி­ருந்­தாய். அங்­கி­ருந்து நான் உனக்­குக் கடி­தங்­கள் எழு­தி­யது ஞாப­கம் இருக்­கி­றதா? உனக்கு அவை மிக­வும் பிடித்­தி­ருந்­தன என்று அப்­போது நீ சொல்­லி­யி­ருக்­கி­றாய். அவற்­றைத் தொடர்ந்து இவ்­வு­ல­கத்­தைப் பற்றி இன்­னும் அதி­க­மாக உனக்­குச் சொல்­ல­வேண்­டும் என்று நான் அடிக்­கடி நினைத்­த­துண்டு. ஆனால் அப்­ப­டிச் செய்ய நான் தயங்­கி­னேன். உல­கத்­தின் கடந்த கால சரித்­தி­ரத்­தைப் பற்­றி­யும் அப்­போது வாழ்ந்த பெரி­யார்­கள், அவர்­கள் செய்த காரி­யங்­கள் முத­லி­ய­வற்­றைப் பற்­றி­யும் நினைத்­துப் பார்ப்­ப­தும் படிப்­ப­தும் இன்­பம் பயப்­ப­தா­கும் ஆனால் சரித்­தி­ரத்தை படிப்­பதை விட அதை சிருஷ்­டிப்­பது அதிக இனி­மை­யா­னது. இன்­றும் நம் நாட்­டில் நாம் சரித்­தி­ரம் சிருஷ்­டித்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். இந்­தி­யா­வின் கடந்த காலம் மிக­மிக நீண்­டது. பழமை என்­னும் பனிப்­ப­ட­லம் அதை போர்த்தி நிற்­கி­றது. நமது பழைய வர­லாற்­றில் நாம் வெட்­க­மும் துக்­க­மும் அடை­வ­தற்­கு­ரிய அம்­சங்­கள் இருக்­கின்­றன. ஆனால் மொத்­த­மா­கப் பார்க்­கு­மி­டத்து நமது பழமை மிக­வும் போற்­று­தற்­கு­ரி­யது.

அதை நினைக்­கும் எந்த இந்­தி­ய­னும் தலை­நி­மிர்ந்து பெரு­மை­யும் மகிழ்ச்­சி­யும் அடை­யா­மல் இருக்க முடி­யாது. ஆயி­னும் பழம் பெரு­மையை நினைத்­துக்­கொண்டு உட்­கார்ந்­தி­ருக்க நமக்கு இப்­போது நேர­மில்லை. வருங்­கா­லமே நமது  மனத்­துள்­ளும்,கண்­ணுள்­ளும் நிறைந்து நீங்­கா­மல் நிற்­கி­றது. அந்த வருங்­கா­லத்தை நாம் சிருஷ்­டித்­துக் கொண்­டி­ருக்­கி­றோம். அந்த சிருஷ்டி நிகழ்­கா­லத்­தில் நமது உழைப்­பை­யும் நேரத்­தை­யும் கவர்ந்து நிற்­கி­றது.

 நைனி சிறை­யில் படிக்க வேண்­டி­ய­தைப் படிக்­க­வும், எழுத வேண்­டி­யதை எழு­த­வும் எனக்­குப் போதிய நேரம் இருக்­கி­றது. ஆனால் எனது மனமோ நிலை­யின்­றித் திரி­கி­றது. அது சதா வெளி­யில் நடக்­கும் போராட்­டத்­தைப் பற்­றியே நினைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. மற்­ற­வர்­கள் என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள், நான் வெளி­யில் இருந்­தால் என்ன செய்­வேன் என்று இப்­ப­டி­யெல்­லாம் எண்­ண­மி­டு­கி­றது. நிகழ்­கா­ லத்­தைப் பற்­றிய நினை­வும் இனி வரப்­போ­கிற காலத்­தைப் பற்­றிய நினை­வும் என்­னுள் நிறைந்து நிற்­ப­தால் கழிந்த காலத்­தைப் பற்றி எனக்கு எண்ண இட­மில்லை. ஆயி­னும், இது தவறு என்­பதை நான் உண­ரு­கி­றேன். வெளி­யி­லி­ருந்து வேலை செய்ய முடி­யாத போது நான் ஏன் அதைப் பற்றி எண்ணி எண்ணி மனம் புண்­ணாக வேண்­டும்?

 ஆனால், நான் எழு­தா­மல் தள்­ளிக்­கொண்டு போன­தற்கு உண்­மை­யான கார­ணம் வேறு. அதை உன் காதில் மட்­டும் ரக­சி­ய­மாக சொல்­லட்­டுமா?  உனக்­குச் சொல்­லிக் கொடுக்­கக்­கூ­டிய அள­வுக்கு எனக்­குத் தெரி­யுமா என்று எனக்கே சந்­தே­கம். நீ விடு­வி­டு­வென்று வளர்ந்து வரு­கி­றாய். ஆனால் நீ மேம்­பட்டு வரு­கி­றாய்.  அத­னால் நான் பள்­ளிக்­கூ­டத்­தி­லும், கலா­சா­லை­யில் கற்­ற­தும், கேட்­ட­தும் உன்னை நெருக்­கு­ வ­தற்கு போதா. உனக்கு அவை சுவை­யு­டை­ய­ன­வா­க­வும் இரா என்று எனக்­குத் தோன்­று­கி­றது. சில காலத்­திற்கு பிறகு நீயே எனக்கு குரு­வாக மாறிப் பல புதிய விஷ­யங்­க­ளைக் கற்­றுக் கொடுத்­தா­லும் கொடுக்­க­லாம். உனக்கு பிறந்த நாளன்று நான் உனக்கு எழு­திய கடி­தத்­தில் கூறி­யது போல ஞானம் மேன்­மே­லும் சுரப்­ப­தால் வயிறு வெடித்­து­வி­டும் என்று பயந்து செப்­புத் தக­டு­க­ளைக் கட்­டிக்­கொண்டு போன அந்த ` மகா­மே­தா­வி’­யின் நிலையை நான் அடை­ய­வில்லை.

 நீ மூசி­ரி­யி­லி­ருந்­த­போது இவ்­வு­ல­கத்­தில் ஆதி­நாள் வர­லா­று­களை பற்றி எழு­த­வது மிக­வும் எளி­தாக இருந்­தது. ஏனெ­னில் அந்த நாட்­க­ளைப் பற்றி நமக்­குத் தெளி­வா­க­வும் திட்­ட­மா­க­வும் ஒன்­றும் தெரி­ய­வில்லை. ஆனால், அந்த ஆதி­கா­லத்தை கடந்து அப்­பால் வந்­தால் மனி­தன் தனது விசித்­திர வாழ்க்­கையை உல­கில் பல பாகங்­க­ளி­லும் தொடங்­கு­வ­தைக் காண்­கி­றோம், சரித்­தி­ர­மும் ஆரம்­ப­மா­கி­றது. மனி­த­னின் வாழ்க்­கையை சிறு­பான்மை அறி­வு­டை­மை­யும், பெரும்­பான்மை மட­மை­யும் மதி­யீ­ன­மும் நிறைந்த வாழ்க்­கையை சித்­த­ரிப்­பது எளி­தல்ல. புத்­த­கங்­க­ளின் துணை கொண்டு ஒரு­வாறு முயற்சி செய்­ய­லாம். ஆனால் நைனி சிறை­யில் புத்­தக சாலை ஏது?  ஆகவே, நான் விரும்­பி­னா­லும் உலக சரித்­தி­ரத்­தைத் தொடர்ச்­சி­யா­கத் தொகுத்து உனக்­குக் கூறு­வ­தென்­பது முடி­யாத காரி­யம். பிள்­ளை­கள் ஒரு தேசத்­தின் சரித்­தி­ரத்தை மட்­டும் கற்­ப­தும், அது கூட சில தேதி­க­ளை­யும் நிகழ்ச்­சி­க­ளை­யும் மட்­டும் நெட்­டு­ருப்­போ­டு­வ­தோடு திருப்தி அடைந்து விடு­தும் எனக்கு எப்­போ­தும் பிடிக்­காது. சரித்­தி­ரம் என்­பது ஒன்­றுக்­கொன்று தொடர்­புள்ள ஒரு நிகழ்ச்சி. ஒரு தேசத்­தின் சரித்­தி­ரத்தை மட்­டும் பூர­ண­மாக உணர்­வ­தென்­றால் கூட உல­கத்­தின் மற்ற பாகங்­க­ளில் நிகழ்ந்த நிகழ்ச்­சி­க­ளை­யும் அறிந்து கொள்­ளா­மல் முடி­யாது. நீ அந்­தக் குறு­கிய முறை­யில் ஒன்­றி­ரண்டு தேசங்­க­ளின் சரித்­தி­ரத்தை அறிந்து கொள்­வ­தோடு நின்­று­வி­டா­மல் உலக முழு­மை­யி­லும் நடந்­த­வற்றை  அறிய விரும்­பு­வாய் என்று நம்­பு­கி­றேன். நாம் சாதா­ர­ண­மாக எண்­ணிக்­கொள்­வது  போல ஒரு நாட்டு மக்­க­ளுக்­கும் மற்­றொரு நாட்டு மக்­க­ளுக்­கும் அதிக வேற்­றுமை கிடை­யாது என்­பதை நீ எப்­போ­தும் நினை­வில் வைக்க வேண்­டும்.  உல­கப் படத்­தைப் பார்த்­தால் ஒவ்­வொரு நாடும் ஒவ்­வொரு நிறத்­தில் தீட்­டப்­பெற்­றி­ருக்­கும். மக்­கள் இடத்­துக்கு இடம் மாறு­பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­பது என்­னவோ உண்­மை­தான். ஆனால், அவர்­கள் பெரும்­பா­லும் ஒத்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் நினை­வில் வைக்க வேண்­டும். பல்­வேறு நாடு­க­ளில் எல்­லைக்­கோ­டு­க­ளை­யும் பல­நி­றப்­பட்ட நிறங்­க­ளை­யும் பார்த்து மக்­க­ளுக்­குள்­ளி­ருக்­கும் அடிப்­ப­டை­யான ஒற்­று­மையை நாம் மறந்­து­வி­டக்­கூ­டாது. நாம் விரும்­பு­வது போல் சரித்­தி­ரத்தை எழுத முடி­யா­தது பற்றி வருந்­து­கி­றேன்.  அதற்கு நீ மற்ற புத்­த­கங்­களை படிக்க வேண்­டும். ஆனால் நான், சிற்­சில நாட்­க­ளுக்­கொ­ரு­முறை, கடந்து போன காலத்­தைப் பற்­றி­யும் அக்­கா­லத்­தில் வாழ்ந்த மக்­க­ளைப் பற்­றி­யும் அவர்­கள் உலக அரங்­கத்­தில் நடித்­து­விட்டு போன பெரிய நாட­கத்­தைப் பற்­றி­யும் உனக்கு எழுதி வரு­வேன்.

 என்­னு­டைய கடி­தங்­கள் உனக்­குக் கவர்ச்­சி­யைத் தருமா?அவை உன் அறிவை மேலும் மேலும் தூண்டி வளர்க்­குமா? உண்­மை­யில், நீ இவற்றை எப்­பொ­ழுது பார்க்க முடி­யும் அல்­லது ஒரு வேளை பார்க்­கவே முடி­யாது போய்­வி­டுமோ என்று நான் எண்­ணு­கி­றேன். நாம் இவ்­வ­ளவு அரு­கி­லி­ருந்து ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தூரத்­தி­லி­ ருப்­பது ஆச்­ச­ரி­ய­மில்­லையா? நீ மூசி­ரி­யி­லி­ருந்­த­போது சில நூற்­றுக்­க­ணக்­கான மைல்­கள் தூரத்­தில் இருந்­தாய். ஆயி­னும் விரும்­பி­ய­போ­தெல்­லாம் உனக்கு கடி­தம் எழு­து­வேன். உன்­னைக் காண­வேண்­டு­மென்று ஆவல் உண்­டா­னால், ஓடி­வந்து உன்­னைப் பார்ப்­பேன். ஆனால், இங்கோ நம்­மைப் பிரிப்­பது யமுனை ஆறு ஒன்­று­தான். நீ அந்­தக் கரை­யி­லும் நான் இந்­தக் கரை­யி­லு­மாக இருக்­கி­றோம். இவ்­வ­ளவு அண்­மை­யில் இருந்­தும் நைனி சிறை­யின் உயர்ந்த சுவர்­கள் நம்­மைப் பிரித்து வைத்­தி­ருக்­கின்­றன. பதி­னைந்து நாட்­க­ளுக்கு ஒரு கடி­தம் எழு­த­லாம். ஒரு கடி­தம் பெற­லாம். இரு­பது நிமி­டம் வேண்­டி­ய­வர்­க­ளைப் பார்த்­துப் பேச­லாம். இந்த தடை­க­ளும் ஒரு விதத்­தில் நன்­மை­யா­கவே முடி­கின்­றன. ஏனெ­னில், நமக்கு எளி­தில் கிடைப்­ப­வற்­றின் அரு­மையை நாம் உணர்­வ­தில்லை. கல்வி கற்­கும் ஒரு­வ­னுக்­குச் சிறை­யில் சிறிது காலம் இருப்­ப­தும் விரும்­பத்­தக்­கது என்று நான் நினைக்­கி­றேன். நல்­வி­னைப்­ப­ய­னாக நம் நாட்­டில் இன்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் இக்­கல்­வியை பயின்று கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

 இக்­க­டி­தங்­களை நீ பார்க்­குங்­கா­லத்­தில் இவை உனக்­குப் பிடிக்­குமா என்­பது எனக்­குச் சந்­தே­க­மா­யி­ருக்­கி­றது. ஆனால் என்­னு­டைய இன்­பத்­துக்­காக இவற்றை எழு­து­வ­தென்று தீர்­மா­னித்­து­ விட்­டேன். இக்­க­டி­தங்­கள் எழு­தும்­போது நீ என் அரு­கில் இருப்­பது போல­வும் உன்­னு­டன் நான் பேசு­வது போல­வும் ஒரு உணர்ச்சி உண்­டா­கி­றது.’’

(தொட­ரும்)