ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு: 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2019 13:05

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் ஜிப்மர் கல்லூரியின் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

200 எம்பிபிஎஸ் இடங்களுக்கான நுழைவுத் தேர்வானது, 25 மாநிலங்களில் உள்ள 280 மையங்களில் காலை, மாலை என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வுகள் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரையும், 

பிற்பகல் 3:00 மணி முதல் 5:30 மணி வரையும் நடக்கவுள்ளது. தேர்வு மையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாக வரவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் நாடு முழுவதிலுமிருந்து 1,84,272 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 21ம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளன.