பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 02–6–19

பதிவு செய்த நாள் : 02 ஜூன் 2019

உல­கில் பல்­வேறு விஷ­யங்­கள் நடப்­ப­தைப் பார்க்­கி­றோம். ஒவ்­வொரு நாட்­டுக்­கும் ஒவ்­வொரு பிரச்னை.  அமெ­ரிக்­கா­வும், சீனா­வும் வர்த்­தகப் போ­ரின் உச்­சத்­தில் இருக்­கி­றது. ஆசிய பகு­தி­கள் முழு­வ­தை­யும் தன் பிடி­யில் வைத்­துக் கொள்ள வேண்­டும் என்று பேரா­சை­ப­டு­கி­றது சீனா. ஆசிய பகு­தி­க­ளில் இருக்­கும் நாடு­கள் தங்­கள் எல்­லை­களை பாது­காத்­துக் கொள்ள வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்­கின்­றன.

 உல­கம் முழு­வ­தும் இப்­போது அஞ்­சு­கிற விஷ­யம் தீவி­ர­வா­தம். ` இஸ்­லா­மிக் ஸ்டேட்’ உரு­வாக்க நினைப்­ப­வர்­க­ளால் இஸ்­லா­மிய மதத்­துக்கே பேரா­பத்து ஏற்­ப­டும் என்று இஸ்­லா­மிய அறி­வு­ஜீ­வி­கள் நினைக்க ஆரம்­பித்­து­விட்­டார்­கள்.

 மேற்­கத்­திய நாடு­க­ளுக்­கும் இஸ்­லாத்­துக்கு ஏற்­ப­டும் இடை­வெளி கண்டு இஸ்­லா­மிய மித­வா­தி­கள் அச்­சம் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.  இப்­படி உல­கம் முழு­வ­தும் பல்­வேறு பிரச்­னை­கள், அந்த நாட்டு தலை­வர்­க­ளின் அணு­கு­மு­றை­களை பார்க்­கும் போது­தான் சாணக்­கி­ய­ரின் ‘அர்த்த சாஸ்­தி­ரம்’ நூலின் மூல­மும் உரை­யும் படிக்க கிடைத்­தது.

உல­கத்­தையே ஆளும் ஞானத்­தைத் தரு­வது இந்த அர்த்த சாஸ்­தி­ரம். ராஜ்­ஜிய பரி­பா­ல­னத்தை முழு­மை­யாக கற்­றுத்­த­ரும் ஒரு பூர­ண­மான சாஸ்­திர நூல்.  இதில் அரிய பல விஷ­யங்­கள் அடங்­கி­யுள்­ளன. சாணக்­கி­யர் ‘அர்த்த சாஸ்­தி­ர’த்தை மட்­டுமே எழு­தி­யி­ருந்­தா­லும் அவர் அனைத்து சாஸ்­தி­ரங்­க­ளை­யும் அறிந்­த­வ­ரா­கவே இருந்­தி­ருக்­கி­றார் என்­பது இந்த புத்­த­கத்­தைப் படித்­தாலே புரி­யும். பல விஷ­யங்­கள் வியப்­பா­க­வும் இருக்­கும்.

 காலத்­தின் மாற்­றத்­தில் பழைய நூல்­க­ளி­லும் மாற்­றங்­கள் ஏற்­ப­டத்­தான் வேண்­டும். இதற்கு முந்­தைய அர்த்த சாஸ்­தி­ரங்­க­ளி­லி­ருந்து தாம் வாழ்ந்த காலத்­துக்கு தக்க சில மாற்­றங்­களை செய்­தி­ருக்­கி­றார் சாணக்­கி­யர். மேலும் தேவை­யா­னதை மட்­டும் எடுத்­துக் கொண்டு சுருக்­கி­யும் உள்­ளார்.  சாணக்­கி­யர் காலத்­துக்­கும், நிகழ்­கா­லத்­துக்­கும் ஏரா­ள­மான மாற்­றங்­கள் வந்­து­விட்­டன. ஆனா­லும் ஆட்சி நிர்­வா­கத்­திற்­கான அடிப்­படை இலக்­க­ண­மாக எல்லா காலங்­க­ளுக்­கும் பொருந்­தக்­கூ­டிய பல விஷ­யங்­கள் இதில் இருப்­பதை காண­லாம்.

 இந்த நூல், நாட்டை ஆள்­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே உத­வக்­கூ­டி­ய­தல்ல.  இவ­ரது சில நுணுக்­க­மான அணு­கு­மு­றை­கள், குடும்­பத்­தி­ன­ருக்­கும் வழி­காட்­டு­த­லா­கவே அமைந்­துள்­ளது.  சாணக்­கி­யர் என்­னும் மாம­னி­தர் எழு­திய  இந்­தப் புத்­த­கத்­தில் ஆளு­ப­வர்­க­ளுக்­கான பல்­வேறு வழி­காட்­டு­தல்­கள் இருக்­கின்­றன. ஒரு கால­கட்­டத்­தில் சொல்­லப்­பட்­டதை எப்­போது பின்­பற்ற வேண்­டும் என்­பது அவ­சி­ய­மல்ல.

 சாணக்­கி­ய­ரின் ‘அர்த்த சாஸ்­தி­ர’த்தை அவ­ரது காலத்து மன்­னர்­க­ளுக்கு அவர் சொன்­ன­தா­கவே கருத்­தில் கொண்டு படிக்க வேண்­டும். சில உதா­ர­ணங்­கள்:–

 ஒரு மன்­னன், நான்கு திசை­க­ளின் எல்லை வரை­யி­லும் பர­வி­யி­ருக்­கும் ராஜ்­ஜி­யத்தை ஆள்­ப­வ­னாக இருந்­தா­லும், சாஸ்­திர விரோத செயல்­க­ளில் ஈடு­பட்­ட­வ­னாக, இந்­தி­ரி­யங்­களை தன் கட்­டுப்­பாட்­டில் வைத்து கொள்­ளா­த­வ­னாக இருந்­தால், அவன் அழி­வான், எப்­ப­டி­யென்­றால்...  போஜ வம்­சத்தை சேர்ந்த தாண்­டக்­யன் என்­னும் மன்­னன் காம­வ­சப்­பட்டு ஒரு பெண்ணை விரும்பி அவளை அப­க­ரித்­தான். அத­னால் அவன் தந்தை சபிக்க, அதன் கார­ண­மாக அம்­மன்­னன், தன் சுற்­றத்­தோ­டும், ராஜ்­ஜி­யத்­தோ­டும் சேர்ந்து அழிந்­தான்.  விதேஹ மன்­ன­னான கரா­லன் என்­ப­வ­னும் இதே மாதிரி ஒரு பெண்ணை விரும்பி, சாபத்­துக்­குள்­ளாகி தன் சுற்­றத்­தோ­டும், ராஜ்­ஜி­யத்­தோ­டும் அழிந்­தான். ஜன­மே­ஜ­யன் என்­னும் மன்­னன் அஸ்­வ­மேத யாகத்­தில் கோபப்­பட்டு, வைதீ­கர்­க­ளி­டம் தன் வீரத்­தைக் காட்­டப்­போக, அவர்­கள் சாபத்­தால் அழிந்­தான்.

  இலா­புத்­ர­னான புரூ­ர­வன் லோபம் கார­ண­மாக மக்­க­ளி­ட­மி­ருந்து அதிக பணம் வசூ­லித்­தான். அத­னால் மக்­கள், நான்கு வர்­ணத்­த­வ­ருமே மன்­ன­னுக்கு எதி­ரா­கத் திரும்­பி­ய­தால் அழிந்­தான்.  தண்­டோத்­ப­வன் என்­னும் மன்­னன், மக்­களை அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­தால் அழிந்­தான்.

 ஐதய வம்­சத்­தைச் சேர்த்த கார்த்­த­வீர்­யார்­ஜு­னன் கர்­வத்­தால் அழிந்­தான்.  பெரி­யோரை அவ­ம­திப்­ப­தி­லும், பரி­க­சிப்­ப­தி­லும் ஆனந்­தப்­ப­டும் தன்­மை­யால், வாதாபி அகத்­தி­ய­ரால்  அழிந்­தான். யாதவ குலம் த்வைபா­ய­ன­ரால் அழிந்­தது.  இவர்­கள் மட்­டு­மன்றி பல மன்­னர்­கள், சத்ரு ஷ்டவர்க்­கம் என்­னும் காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாத்ஸ்ர்­யம் என்­னும் ஐந்து பகை­களை அடக்­கா­த­வர்­க­ளாக, அவற்­றிற்கு மட்­டுமே ஆட்­பட்டு சுற்­றத்­தோ­டும் ராஜ்­ஜி­யத்­தோ­டும் அழிந்­தார்­கள்.  இந்த ஆறு பகை­களை விட்­ட­வர்­க­ளான ஜம­தக்­னி­யின் புதல்­வர் பர­சு­ரா­ம­ரும், நாபா­க­ரின் புதல்­வர் அம்­ப­ரீ­ஷ­னும் நீண்டு நெடுங்­கா­லம் பூமியை அனு­ப­வித்­தார்­கள்.  வயது முதிர்ந்­த­வர்­க­ளின் சக­வா­சத்­தால், மூன்று காலங்­க­ளுக்­கும் சம்­பந்­தப்­பட்ட விஷய ஞானத்தை அடைய வேண்­டும்.

 ஒற்­றர்­க­ளின் மூல­மாக அனைத்­தை­யும் அறிய வேண்­டும்.  அதா­வது, ஒற்­றர்­க­ளையே கண்­க­ளாக கொண்டு பார்க்க வேண்­டும். அவ­ர­வ­ருக்­கு­ரிய தொழில்­களை நடத்­தச் செய்­வ­தன் மூலம் அவ­ர­வர் சுய­தர்­மத்தை நிலை­நாட்­ட ­வேண்­டும்.  

தர்­மத்­துக்­கும், செல்­வத்­துக்­கும் குறைவு ஏற்­ப­டா­வண்­ணம் விருப்­பங்­களை அனு­ப­விக்க வேண்­டும். அப்­ப­டி­யி­ருப்­ப­வன் சுக­மாக வாழ்­வான்.  தர்­மம், அர்த்­தம், காமம் என்­னும் மூன்­றை­யும் சம­மாக செயல்­ப­டுத்தி அனு­ப­விக்க வேண்­டும். மன்­னன் ஆசா­ரி­யர்­க­ளை­யும், மந்­தி­ரி­க­ளை­யும் மரி­யா­தை­யு­டன் நடத்த வேண்­டும்.  தன்­னி­டத்­தில் ஏதே­னும் தவறு ஏற்­ப­டும் காலத்­தில் அவர்­க­ளி­டம் கூற­வேண்­டும். ஆசா­ரி­யர்­க­ளும், மந்­தி­ரி­க­ளூம் மன்­ன­னுக்கு அபா­யம் ஏற்­ப­டக்­கூ­டிய விஷ­யங்­க­ளி­லி­ருந்து அவனை விலக்­கிக் கொண்டே இருக்க வேண்­டும்.

பாகம் 2 புதி­தாக  ஒரு கிரா­மம் நிறு­வு­வ­தைப் பற்றி சொல்­கி­றது. ஏற்­க­னவே கிரா­மம் இருந்த இட­மாக இருந்­தா­லும், புதி­தாக ஏற்­ப­டுத்­தப் போவ­தாக இருந்­தா­லும், மற்ற நாடு­க­ளி­லி­ருந்து தன் நாட்­டுக்­கும் அழைத்து வந்த மக்­க­ளைக் கொண்டோ, ஓரி­டத்­தில் ஜனத்­தொகை அதி­க­மாக இருக்­கு­மா­னால், அவர்­களை அங்­கி­ருந்து அழைத்து வந்தோ கிரா­மத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும்.  உரு­வாக்­கப்­பட்ட அந்த கிரா­மத்­தில் உழைப்­பா­ளி­க­ளும் விவ­சா­யி­க­ளும் இருக்க வேண்­டும்.  ஒரு கிரா­மத்­தில் குறைந்­த­பட்­சம் நூறு குடும்­பங்­கள் வசிக்க வேண்­டும்.  500 குடும்­பங்­க­ளுக்கு மேல்  இருக்­கக்­கூ­டாது.

 ஒரு கிரா­மத்­துக்­கும், அடுத்த கிரா­மத்­துக்­கு­மி­டையே ஒரு கூப்­பி­டும் தூரமோ அல்­லது இரண்டு கூப்­பி­டும் தூரமோ இடை­வெளி இருக்க வேண்­டும்.அக்­கி­ரா­மத்­த­வர்­கள் பரஸ்­ப­ரம் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் ரட்­சித்­துக் கொள்­ப­வர்­க­ளாக இருக்க வேண்­டும். அப்­படி இல்­லை­யேல், அவர்­கள் ஒரு­வர் இடத்தை  மற்­றொ­ரு­வர் ஆக்­ர­மித்­துக்  கொள்­ளா­த­படி பார்த்­துக் கொள்ள வேண்­டும். ஆறு, மலை, மணல்­வெளி, காடு, மலை­குகை, பாலம் முத­லான  இவற்­றுக்­கான எல்­லை­களை ஏற்­ப­டுத்த வேண்­டும். எல்­லைப்­பு­றத்­தில் இல­வ­ம­ரங்­கள்,

பாலுள்ள மரங்­கள் முத­லா­ன­வற்றை நட­வேண்­டும்.

 800 கிரா­மங்­க­ளுக்கு நடுவே ஒரு ஸ்தானீ­யம் இருக்க வேண்­டும். அதா­வது ஒரு தலை­மை­ய­கம் இருக்க வேண்­டும். இங்கே அர­சாங்க நிர்­வாக அதி­கா­ரி­கள் வசிப்­பார்­கள்.  400 கிரா­மங்­க­ளுக்கு நடுவே துரோ­ண­மு­கம் இருக்க வேண்­டும். இது­வும் தலை­மை­ய­கம்­தான். ஆனால், ஸ்தானீ­யத்தை விட சிறி­யது. ஸ்தானீ­யம் ஒரு சிறு நக­ரம் போன்று விளங்­கும். அங்கு வரி­வ­சூ­லிக்­கும் அதி­காரி போன்ற கிரா­மங்­க­ளின் நிர்­வாக அதி­கா­ரி­கள் இருப்­பார்­கள். இங்­கும் இருப்­பார்­கள். இவர்­கள் 400 கிரா­மங்­க­ளின் பொறுப்­புக்­களை மட்­டுமே கவ­னிப்­பார்­கள். 200 கிரா­மங்­க­ளுக்கு நடு­வில் கார்­வா­டி­கம் இருக்­கும். இது­வும் இது போன்­ற­து­தான். ஆனால் இன்­னும் சிறி­யது. 10 கிரா­மங்­காள் சேர்ந்த ஒரு தலை­மை­யி­டத்­துக்கு ‘சங்க்­ர­ஹம்’ என்று பெயர்.

 ஆக, 10 கிரா­மங்­க­ளைக் கவ­னிக்­கும் அதி­கா­ரி­க­ளைக் கொண்ட ஒரு தலை­மை­யி­ட­மும், அவையே சேர்ந்த 200 கிரா­மங்­க­ளுக்கு மேல­தி­கா­ரி­க­ளின் தலை­மை­யி­ட­மும், 400 கிரா­மங்­க­ளைச் சேர்ந்து அதற்­கும் மேல­தி­கா­ரி­க­ளின்  தலை­மை­யி­ட­மும் அதற்கு மேற்­பட்ட அதி­கா­ரி­யின்  தலை­மை­யி­டம் 800 கிரா­மங்­க­ளுக்­குச் சேர்ந்­த­தா­க­வும் இருந்து நிர்­வா­கம் செய்­யப்­ப­டும்.

 எல்­லைப்­பு­றங்­க­ளில் கோட்­டை­களை நிர்­மா­ணிக்க வேண்­டும். வரவு, செலவு கணக்­கு­க­ளைப் பார்க்­கும் அதி­காரி, ‘நிபத்த பத்­த­கங்­கள்’ எனப்­ப­டும் கணக்­குப் பதி­வே­டு­க­ளைப் பத்­தி­ரப்­ப­டுத்தி வைக்­கும் அலு­வ­ல­கத்தை தனித்­த­னிப் பிரி­வு­க­ளாக இருக்­கும்­ப­டி­யாக, வடக்கு நோக்­கியோ, கிழக்கு நோக்­கியோ நிறுவ வேண்­டும்.

 இந்த கணக்கு பதிவு அலு­வ­ல­கத்­தில் கணக்­குப் புத்­த­கங்­களை அந்­தந்த பிரி­வுக்­குத் தனித்­த­னி­யாக எண்­ணிக்­கை­யிட்டு வைக்க வேண்­டும்.

1.கிரா­மங்­க­ளில் கிடைக்­கும் மொத்த லாபம் இவ்­வ­ளவு என்­பதை பதிவு புத்­த­கத்­தில் குறித்து வைக்க வேண்­டும்.

2.தொழிற்­சா­லை­க­ளில், செல­வ­ழித்த பணத்தை அபி­வி­ருத்தி, பொருட்­க­ளின் அபி­வி­ருத்தி, அல்­லது அவற்­றில் ஏற்­பட்ட நஷ்­டம், செலவு, உற்­பத்தி, வியா­பார வரி, அளவை, நிறு­வை­க­ளில் அதி­க­மா­கப் பெறும் அளவு (சில பொருட்­கள்  உலர்ந்த பிறகு எடை குறை­யும்) ஊதி­யங்­கள், விர­யச் செலவு இவற்றை பதி­வுப் புத்­த­கத்­தில் குறித்து வைக்க வேண்­டும்.

3. ரத்­தி­னங்­கள், விலை­யு­யர்ந்த பொருட்­கள், குறைந்த விலைப் பொருட்­கள், வனத்­தி­லி­ருந்து கிடைக்­கும் பொருட்­கள் இவற்­றின் விலை, தரம், எடை, அளவு, இவற்றை வைத்­தி­ருக்­கும் பெட்­டி­கள் முத­லான விவ­ரங்­க­ளை­யும் பதி­வுப் புத்­த­கத்­தில் எழுதி வைக்க வேண்­டும்.

4. மன்­னர், மன்­னர்  மனை­வி­கள், மன்­னர் வாரி­சு­கள் இவர்­கள் அனு­ப­விக்­கும்  பொருட்­கள், இடங்­கள் இவற்­றின் கணக்­கும் எழுதி வைக்க வேண்­டும்.

5. மன்­ன­ருக்­கும் அவர் மனை­வி­ய­ருக்­கும், அவர் வாரி­சு­க­ளுக்­கும் தின­மும் கொடுப்­பது போக, மேற்­கொண்டு அதி­க­மா­கக் கொடுக்­கும் தனத்­தை­யும் எழுதி வைக்க வேண்­டும்.

6. உற்­ச­வச் செலவு, மருத்­து­வச் செலவு, சாந்­தி­ஹோ­மங்­க­ளின் செலவு, பிற­ரு­டன் நட்பு பூண்டு அவர்­க­ளுக்­குக் கொடுக்­கும் தனம் இவற்­றை­யும் குறித்து வைக்க வேண்­டும்.

‘அர்த்த சாஸ்­தி­ர’த்­தில் ஒரு பகுதி இது. மொத்த அரசு நிர்­வா­கத்­திற்­கான வழி­காட்­டு­த­லும் இதில் இருக்­கி­றது.                                              ***