ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 29–5–19

பதிவு செய்த நாள் : 29 மே 2019

இந்த டியூன் வேண்­டா­மென்று சொல்லமாட்­டார்­கள்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

இசை­ய­மைப்பு உங்­க­ளு­டை­யது. பாடல் உரு­வாக்­கத்­தில் அதைப் பாடு­வ­தும் கரு­வி­க­ளில் இசைப்­ப­து­மான சக கலை­ஞர்­க­ளின் பங்­க­ளிப்பை எப்­படி பார்க்­கி­றீர்­கள்?

மிக  முக்­கி­ய­மான விஷ­ய­மாக இதைப் பார்க்­கி­றேன். இன்­றைக்­கும் எத்­த­னையோ இசைக்­க­ரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தித்­தான் நான் இசை­ய­மைத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். சற்­று­முன் ரிகர்­ச­லில் பார்த்­தீர்­கள்­தானே? ஒரு பாட­லில் எத்­தனை பேர் வாசித்­தார்­கள்? அத்­தனை பேரும் கொடுக்­கப்­பட்ட இசைக்­கு­றிப்­பு­களை அனு­ப­வித்து, ரசித்து உணர்­வு­பூர்­வ­மாக வாசித்து வரக்­கூ­டிய அந்த ஜீவன் முழு­வ­மும் சேர்ந்­து­தானே உங்­களை மயக்­கு­கி­றது, ஆட்­கொள்­கி­றது அல்­லது உங்­களை வசப்­ப­டுத்­து­கி­றது. ஒரு கலை என்­றால் அதில் பெர்­பார்­மன்ஸ் இருக்க வேண்­டும். பெர்­பார்­மன்ஸ் இல்­லை­யென்­றால், அது இசை அல்ல. எஸ்.எம்.எஸ். டைப் செய்­வ­து­போல கம்ப்­யூட்­ட­ரில் புரோ­கி­ராம் செய்­து­விட்டு இசை என்று சொன்­னால் அதை எப்­படி ஏற்­றுக்­கொள்­வது?

* ‘இந்த டியூன் வேண்­டாம், வேறொன்று தாருங்­கள்’ என்று கேட்­கும் இயக்­கு­நர்­க­ளைப் பார்த்­தி­ருப்­பீர்­கள். இப்­படி ஒதுக்­கப்­பட்ட மெட்­டுக்­களை என்ன செய்­வீர்­கள்?

இந்த டியூன் வேண்­டாம் என்று சொல்ல மாட்­டார்­கள். இன்­னொரு டியூன் பார்க்­க­லாமா சார் என்­று­தான் கேட்­பார்­கள். ‘முரட்­டுக்­காளை’ படத்­துக்­குப் பாடலை கம்­போஸ் செய்­து­கொண்­டி­ருந்­தேன். இயக்­கு­நர் கூறிய சூழ்­நி­லைக்கு ‘ஏ ஆத்தா.. ஆத்­தோ­ரமா வார்­றியா’ பாட­லின் மெட்டு பிறந்­தது. ஆனால், இயக்­கு­நர் எடுத்­துக்­கொண்­டது ‘பொது­வாக என்­ம­னசு தங்­கம்’ பாடலை. இரண்டு பாடல்­க­ளும் ஒரே மாதிரி இருக்­கும். இருந்­தா­லும் இது வேறு, அது வேறு. ‘மூடு­பனி’ படத்­துக்­கான கம்­போ­சிங். பாலு­ம­கேந்­திரா ‘என் இனிய பொன் நிலாவே’ மெட்­டைத் தேர்வு செய்­து­விட்­டார். அவர் கூறிய சூழ்­நி­லைக்கு முத­லில் நான் மெட்­ட­மைத்­தது ‘இளை­ய­நிலா பொழி­கி­றதே’. இப்­படி இடம் மாறிய, படம் மாறிய பாடல்­க­ளின் பட்­டி­யல் பெரிது.

* இசைக்கு மொழி­யில்லை என்று கூறி­யி­ருக்­கி­றீர்­கள். உங்­கள் பாடல்­க­ளில் வரும் இண்­டர்­லூட் இசையை மொழி­யற்ற இசைக்கு உதா­ர­ண­மா­கக் கூற­லாமா?

நீங்­கள் எப்­படி கூறிக்­கொண்­டா­லும் எனக்கு மகிழ்ச்­சி­தான்.

* ‘ஹவ் டு நேம் இட்’, ‘நத்­திங் பட் விண்ட்’ ஆகி­ய­வற்­றுக்­குப் பிறகு மொழி­யற்ற இசையை உங்­க­ளி­ட­மி­ருந்து யாசித்­துக் காத்­தி­ருக்­கும் ரசி­கர்­க­ளுக்கு அடுத்து என்ன தரப்­போ­கி­றீர்­கள்?

அதற்கு ஏற்ற சூழ்­நிலை அமைய வேண்­டும். எந்த நேரத்­தி­லும் அது பிறக்­க­லாம். ‘ஹவ் டு நேம் இட்’, ‘நத்­திங் பட் விண்ட்’ ஆகி­ய­வற்­றைக் கேட்­டு­விட்டு கமல் என்­னி­டம் பேசிக்­கொண்­டி­ருந்­தார். அப்­போது அவ­ரி­டம் ‘நத்­திங் பட் விண்­டு’க்­காக இசை­ய­மைத்த ஒரு பேஸ் புளூட் பீசை, அதில் நான் பயன்­ப­டுத்­த­வில்லை என்­றேன். அவ­ருக்கு ஆர்­வம் மிகு­தி­யா­கி­விட்­டது… ‘என்ன அது… எனக்கு உடனே வாசித்­துக்­காட்­டுங்­கள்’ என்­றார். அந்த பீசை அவ­ருக்­குப் பாடிக் காட்­டி­னேன். ‘ரொம்ப நல்லா இருக்கே... நம்ம படத்­துக்கு பாட­லா­கப் போட்­டு­வி­ட­லாமா?’ என்­றார். இல்லை, இது புல்­லாங்­கு­ழல் வழியே புறப்­பட்டு வர­வேண்­டிய இசை, ஹரி­பி­ர­சாத் சவு­ரா­சியா வாசிப்­ப­தற்­காக வடி­வ­மைத்­தது என்­றேன். ‘இல்லை… இல்லை, இதையே எனக்­குப் பாட்­டாக்­கித் தாருங்­கள்’ என்­றார். அந்­தப் புல்­லாங்­கு­ழல் இசைத் துணுக்­கி­லி­ருந்து பிறந்த அந்­தப் பாடல் ‘வளை­யோசை கல­கல கல­வெ­னக் கவி­தை­கள் படிக்­குது.. குளு குளு தென்­றல் காற்­றும் வீசுது’. இப்­ப­டிக் கரு­விக்­காக வடி­வ­மைத்த இசையை ரசி­கர்­க­ளுக்­குப் பாட­லா­க­வும் கொடுத்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றேன்.