சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 394– எஸ்.கணேஷ்

28 மே 2019, 06:57 PM

நடி­கர்­கள்  :  விக்­ரம், தீக்ஷா சேத், கே.விஸ்­வ­நாத், ப்ரதீப் ராவத், அவி­னாஷ், சனா, தம்பி ராமையா, மற்­றும் பலர். இசை : யுவன் சங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு : ஆர். மதி, எடிட்­டிங் : காசி விஸ்­வ­நா­தன், தயா­ரிப்பு : பிவிபி சினிமா, வச­னம்: பாஸ்­கர் சக்தி, திரைக்­கதை, இயக்­கம் : சுசீந்­தி­ரன்.

அனல் மு­ரு­கன் (விக்­ரம்) சினி­மா­வில் வெற்­றி­க­ர­மான வில்­ல­னா­கத் துடிக்­கும் ஒரு ஜிம் பாய். தனது சக ஜிம் பாய்­க­ளு­ட­னும் சண்­மு­கத்­தோ­டும் (தம்பி ராமையா) சந்­தோ­ஷ­மாக வாழ்ந்து வரு­கி­றான். ஒரு நாள் ரவுடி கும்­ப­லி­ட­மி­ருந்து பெரி­ய­வ­ரான தட்ஷி­ணா­மூர்த்­தியை (இயக்­கு­னர் கே.விஸ்­வ­நாத்) காப்­பாற்றி தன்­னு­டன் அழைத்­துச் செல்­கி­றான்.  எதி­ரே­யுள்ள மக­ளிர் விடு­தி­யில் தங்­கி­யி­ருக்­கும் தர்­ஷி­னியை (தீக்ஷா சேத்) அனல் விரும்­பு­வது தெரிந்து தட்ஷிணா அன­லுக்கு உத­வு­கி­றார். இரு­வ­ரும் நேசிக்­கத் தொடங்­கு­கி­றார்­கள்.

இதற்­கி­டையே தட்ஷி­ணாவை துரத்­தும் ஆபத்­தின் பின்­னணி பற்றி அனல் தெரிந்து கொள்­கி­றான். இறந்து போன தனது அன்பு மனை­வி­யின் நினை­வாக த­ட்ஷிணா நடத்­தி­வ­ரும் ஆத­ர­வற்­றோர் இல்­லத்­தின் இடத்தை கைப்­பற்ற துடிக்­கி­றார் தீய அர­சி­யல்­வா­தி­யான ’அக்கா’ என்­ற­ழைக்­கப்­ப­டும் ரங்­க­நா­யகி (சனா). பணத்­தா­சை­யால் தட்ஷிணா­வின் மகன் சிதம்­ப­ர­மும் (அவி­னாஷ்) அவர்­க­ளுக்கு துணை போகி­றான். அன­லின் பாது­கா­வ­லை­யும் மீறி சதி செய்து த­க்ஷி­ணா­வி­ட­மி­ருந்து கையெ­ழுத்து பெற்று அக்கா அந்த இடத்தை கைப்­பற்­று­கி­றார். தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி சிதம்­ப­ரத்­தை­யும் கைது செய்ய வைக்­கி­றாள். மனம் உடை­யும் த­ட்ஷிணாவை தேற்­றும் அனல் அவ­ரது இடத்தை திரும்­பப் பெறு­வ­தோடு அக்­காவை தண்­டிப்­ப­தா­க­வும் உறுதி எடுக்­கி­றார். அக்­கா­வின் பின்­னணி பற்­றி­யும், அவ­ரது பலம் பற்­றி­யும் ஆரா­யும் அனல் அவ­ளுக்கு பின்­ன­ணி­யில் அவ­ளுக்கு பினா­மி­யாக இருக்­கும் வாப்­பாவை (ப்ரதீப் ராவத்) பற்றி தெரிந்து கொள்­கி­றான். தமிழ்­நாடு முழு­வ­தும் நில­மோ­ச­டி­யில் ஈடு­பட்ட இவர்­க­ளைப் பற்­றிய உண்­மையை வெளிக்கொணர்­வ­தற்­காக தனது சினிமா ஞானத்தை பயன்­ப­டுத்தி திட்­டங்­கள் போடு­கி­றான். அதன்­படி உண்­மை­கள் வெளி­வர கோப­மா­கும் அக்கா வாப்­பா­வின் உயிரை பறிக்­கி­றாள். நீதி­மன்­றத்­தி­லி­ருந்து வெளியே வரும் அக்­காவை பாதிக்­கப்­பட்ட பல­பே­ரில் ஒரு­வ­ரான இளை­ஞ­னின் தந்தை கத்­தி­யால் குத்­திக் கொல்­கி­றார். அன­லின் சப­தம் ஜெயிக்க, தட்ஷிணா­வின் ஆசைப்­படி ஆத­ர­வற்­றோர் இல்­லம் சிதம்­ப­ரம் கண்­கா­ணிப்­பில் மறு­படியும் இயங்­கத் தொடங்­கு­கி­றது. சினி­மா­வில் வளர்ந்து வரும் அன­லின் மானே­ஜ­ராக மாறு­கி­றார் தட்ஷினா.