உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

பதிவு செய்த நாள் : 25 மே 2019 17:04

லண்டன்,

   லண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் இன்று  மோதுகின்றது.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5ம் தேதி நடக்கிறது.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

இந்திய அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.

இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது

இந்த நிலையில், உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. விஜய் நேற்று காயம் அடைந்த நிலையில், அவர் இன்று போட்டியில் விளையாடவில்லை. கேதர் ஜாதவ் இன்று விளையாடவில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.