சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 393– எஸ்.கணேஷ்

21 மே 2019, 04:00 PM

நடி­கர்­கள்  :  விமல், பரணி, நிஷாந்த், கவுரவ் நாரா­ய­ணன், சிதம்­ப­ரம் செட்­டி­யார் (கமலா தியேட்­டர் உரி­மை­யா­ளர்), அஞ்­சலி மற்­றும் பலர். இசை : சுந்­தர் சி. பாபு, ஒளிப்­ப­திவு :  விஜய் உல­க­நாத், எடிட்­டிங் : டி.எஸ். சுரேஷ், தயா­ரிப்பு :   கிள­வுட் நைன் மூவீஸ் (தயா­நிதி அழ­கிரி), திரைக்­கதை, இயக்­கம் : கவு­ரவ் நாரா­ய­ணன்.

துாங்­கா­ந­க­ர­மான மது­ரை­யில் நடக்­கும் சம்­ப­வங்­களே கதை. கண்­ணன் (விமல்), அய்­யாவு (பரணி), ராஜா­மணி (கவுரவ் நாரா­ய­ணன்) மற்­றும் மாரி­யப்­பன் (நிஷாந்த்) நால்­வ­ரும் நெருங்­கிய நண்பர்­கள். ஆட்­டம் பாட்­டம் கொண்­டாட்­டம் என தங்­கள் வாழ்க்­கையை அனு­ப­வித்து வாழ்­கி­றார்­கள். வீடி­யோ­கி­ரா­ப­ரான கண்­ணன் கல்­யா­ணம் மற்­றும் விசே­ஷங்­க­ளுக்கு கவ­ரேஜ் செய்­கி­றார். தனது சிறு­வ­யது தோழி­யான ராதாவை (அஞ்­சலி) சந்­திக்­கி­றார். லோக்­கல் தொலைக்­காட்சி ஒன்­றில் தொகுப்­பா­ள­ராக இருக்­கும் ராதா­வும் கண்­ண­னும் காத­லிக்­கத் தொடங்­கு­கி­றார்­கள். தவ­றான நோக்­கத்­தோடு வீடி­யோவை வைத்து ஒரு பெண்ணை மிரட்­டும் இளை­ஞனை கண்­ணன் அடித்து துவைக்­கி­றார். இந்த சம்­ப­வத்­தால் நண்பர்­க­ளின் வாழ்க்கை திசை­மா­று­கி­றது. காயம்­பட்ட இளை­ஞ­னின் தந்­தை­யான சக்­தி­வாய்ந்த பெரிய மனி­தர் (சிதம்­ப­ரம் செட்­டி­யார்) மக­னுக்காக பழி­வாங்க துடிக்­கி­றார். தப்­பிக்க நினைக்­கும் நண்பர்­கள் ஒளிந்து வாழ்­கி­றார்­கள்.

கண்­ண­னுக்­கும் ராதா­வுக்­கும் இரு­வீட்­டா­ரும் திரு­மண ஏற்­பா­டு­களை செய்­கி­றார்­கள். திரு­ம­ணத்­திற்கு வரும் நண்பர்­கள் கண்­ணனை கொல்ல முயற்­சிக்­கி­ றார்­கள். அத­னால் ஏற்­ப­டும் விபத்­துக்­க­ளால் திரு­மண வீட்­டில் கவலை ஏற்­ப­டு­கி­றது. பெரிய மனி­த­ரால் மிரட்­டப்­பட்டு ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­கள் உயிரை காப்­பாற்­றிக்­கொள்­வ­தற்­காக கண்­ணனை கொல்ல நினைப்­ப­தைப் பற்றி பேசு­கி­றார்­கள். இருள் சூழ்ந்த ஒரு மழை இர­வில் நன்­பர்­கள் ஒரு பிணத்தை எரிக்­கி­றார்­கள்.  பின்­ன­ணி­யில் கதை­யின் திருப்­ப­மாக, நண்பர்­கள் கண்­ண­னி­டம் உண்­மையை கூற, அனை­வ­ரும் சேர்ந்து திட்­டம் தீட்­டு­கி­றார்­கள். அதன்­படி, நண்பர்­கள் அப்­பெ­ரி­ய­வ­ரின் மகனை எரித்து அழிக்க, அவ­ரது வீட்­டுக்­குள் ரக­சி­ய­மாக நுழைந்து அவரை கொன்று தங்­களை சூழ்ந்து இருந்த ஆபத்தை போக்­கு­கி­றான் கண்­ணன். அடுத்­த­நாள் காலை திட்­ட­மிட்­ட­படி கண்­ண­னுக்­கும் ராதா­வுக்­கும் திரு­ம­ணம் நடக்க அனை­வ­ரும் நிம்­ம­தி­யு­டன் மகிழ்­கி­றார்­கள்.