உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் 49 வாக்களர்களுக்காக 1 வாக்குச் சாவடி

பதிவு செய்த நாள் : 19 மே 2019 17:52

சிம்லா,

இமாச்சலப் பிரதேச மாநிலம், லஹாவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில், 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில், மலைப் பகுதியைச் சேர்ந்த  தஷிகாங் பழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடிதான் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் உள்ள வாக்குச் சாவடியாகும்.

அங்கு 49 வாக்களர்கள் மட்டுமே உள்ளனர். கடுங் குளிரில் காலை 7 மணிக்கு அங்கு வாக்குப் பதிவு தொடங்கியது. குளிரையும் பொருட்படுத்தாமல் அங்குள்ள பழங்குடி மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

இந்த வாக்குச் சாவடி, மண்டி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.