இறுதி கட்ட மக்களவை தேர்தல்: பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ஹர்பஜன் சிங் வாக்கு பதிவு

பதிவு செய்த நாள் : 19 மே 2019 14:52

சண்டிகர்,

நாடு முழுவதும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிக் கட்ட மக்களவை தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அமரிந்தர் சிங் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் வாக்களித்தனர்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், இன்று காலை தொடங்கியது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

ஹர்பஜன் சிங் வாக்குப் பதிவு

ஏழாவது கட்டத் தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வாக்களித்தார்.

ஹர்பஜனின் சொந்த மாநிலமான பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜலந்தரில் உள்ள கார்கி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது தாயுடன் சென்றார் ஹர்பஜன் சிங்.

மற்றவர்களுடன் வாக்களிக்கும் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.


பஞ்சாபில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனைப் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.