கோட்சேவை புகழ்வதா? பிரக்யா தாக்கூருக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம்

பதிவு செய்த நாள் : 19 மே 2019 14:37

பாட்னா,

கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் புகழ்ந்து பேசியதற்கு, பீகார்  முதல்வரும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இறுதி கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் நித்திஷ் குமார் கூறியதாவது:

பிரக்யாவின் பேச்சு கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை. மகாத்மா காந்தி இந்த தேசத்தின் தந்தை. பிரக்யாவை பாஜகவை விட்டு நீக்குவதா, இல்லையா என்பது அந்தக் கட்சியின் உள்விவகாரம். எங்களைப் பொறுத்தவரையில், இதுபோன்ற கருத்துக்களை நாங்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டோம்.