ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும் – கமல்ஹாசன் பேச்சு

பதிவு செய்த நாள் : 19 மே 2019 13:28

சென்னை,

ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது. இன்னொரு செருப்பும் வரும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

"ஒத்த செருப்பு” திரைப்படவிழா இன்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:

நான் காந்தியின் ரசிகன். ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும், எனக்கு அந்த அருகதை உண்டு. ஒரு முறை செருப்பு தவறி விழுந்ததால் தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார் காந்தி.
ஒரு செருப்பு வந்து விட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். மற்றொரு ஒத்த செருப்பையும் வீசிவிடுங்கள்.
என் மீது செருப்பு வீசியவருக்கு தான் அவமானமே தவிர எனக்கு அல்ல. வாழ்த்துக்கள் வளர்க்கும் அளவுக்கு தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது.

காந்தியடிகள் ரயில் சென்றபோது அவர் அணிந்திருந்த ஒரு செருப்பு கீழே விழுந்துவிட்டது, உடனே அவர் மற்றொரு செருப்பையும் வீசிவிட்டார் என்ற காந்தியின் வரலாற்று நிகழ்வையும், தன் மீது செருப்பு வீசப்பட்டதையும்  சுட்டிக்காட்டி கமல்ஹாசன் பேசினார்.

ஒத்த செருப்பு திரைப்பட நிகழ்ச்சியில் இயக்குர் சங்கர், பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


முன்னதாக, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில்போது காந்தியை சுட்டுக்கொன்ற முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல்ஹாசன் பேசியதிலிருந்து இப்பிரச்சினை உருவானது. எதிர்ப்பாளர்களால் கமல்மீது செருப்பு மற்றும் முட்டை வீசப்பட்டது.