காங்கிரசில் மாநிலத் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம்: அமரிந்தர் சிங் உறுதி

பதிவு செய்த நாள் : 18 மே 2019 20:19

மாலோட் (பஞ்சாப்),

   காங்கிரஸ் கட்சியில், மாநிலத் தலைவர்களுக்கு இப்போது அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும், காங்கிரஸ் மேலும் போர்க்குணம் மிக்க கட்சியாக மாறி வருகிறது என்றும் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உறுதிபட தெரிவித்தார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அமரிந்தர் சிங் கூறியிருப்பதாவது:
கடந்த  5 ஆண்டுகளில், கட்சி விவகாரங்களிலும், மாநிலங்களுக்கான கொள்கைகளை வகுப்பதிலும் மாநிலத் தலைவர்களின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் இது முன்னுக்கு வந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.. என்றாலும், மாநிலத் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது.
மாநிலத் தலைவர்களுக்கு மாநில மக்களுடன் சிறப்பான தொடர்புகள் இருக்கின்றன.

எனவே நாடு முழுவதும் மக்களின் ஆர்வங்கள், விருப்பங்கள் என்ன என்பதை காங்கிரஸ் ஆழமாக புரிந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2014-ல் இருந்த காங்கிரசைக் காட்டிலும், இப்போது 2019-ல் இருக்கும் காங்கிரஸ் வித்தியாசமானது. முன்பு அளித்ததைக் காட்டிலும் மாநிலத் தலைவர்களுக்கு கட்சி இப்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

ராகுல் காந்தியின் செயல் துடிப்பு

ராகுல் காந்தியின் செயல்துடிப்பு மிக்க தலைமையின் கீழ், கட்சியின் நம்பிக்கை வளர்ந்திருக்கிறது. தற்காப்பு என்ற கடந்த கால நிலை மாறி இப்போது புதிய போர்க்குணம் உருவாகியுள்ளது.

கட்சி அமைப்புக்குள் செயல்படும் முறையில் குறிப்பிடத் தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சிக்குள் அதிக வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகமும் காணப்படுகிறது. அடித்தளத் தொண்டர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில், ராகுல் காந்தி அவருடைய  செயல்பாட்டில் தனி பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏமாற்றுக்காரர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில், ஒரு பொய்யர், ஏமாற்றுக்காரர், பதவியில் நீடிக்க வேண்டும் என்ற அதிகார பித்துப் பிடித்தவர் என மக்கள் மத்தியில் அவர் அம்பலமாகி நிற்கிறார். இ்வ்வாறு