கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள் : 18 மே 2019 11:50

கேதார்நாத்,             

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர  மோடி இன்று காலை வழிபாடு செய்தார்.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 7வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நாளை (மே 19ம் தேத்) 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில், நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு  வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இங்குள்ள கேதார்நாத் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் வந்தடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்துச்சென்றார். பிரதமரின் வருகையால், கேதார்நாத் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி 4வது முறையாக கேதார்நாத் கோவிலுக்கு இன்று வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, நாளை (மே 19ம் தேதி) பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.