சென்னை,
மகாத்மா காந்தியடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தொடர்பான சர்ச்சை கருத்தை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு மே 20ம் தேதி வழங்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அறிவித்தது.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கமல் ஹாசன் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. நாடு முழுவதும் கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் காரணமாக கமல்ஹாசன் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.
அதை தொடர்ந்து தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் திங்களன்று (மே 12ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று அறிவித்தது.