வர்த்தக தடை ஏன்?

பதிவு செய்த நாள் : 18 மே 2019

ஜம்­மு–­காஷ்­மீர் மாநில தலை­ந­கர் ஸ்ரீந­க­ரைச் சேர்ந்த வர்த்­த­கர் ஜாகுர் அக­மது. இவர் சென்ற மார்ச் மாதம் ரூ. 30 லட்­சம் மதிப்­புள்ள நறு­ம­ணப் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு ஆர்­டர் செய்­தார். இதை எல்­லைக்கு அப்­பால் பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ருக்கு அனுப்ப திட்­ட­மிட்­டார். அதற்கு பதி­லாக அங்­கி­ருந்து ‘மிஸ்­வாக்’ என அழைக்­கைப்­ப­டும் பல்­து­லக்­கும் குச்­சியை இறக்­கு­மதி செய்ய திட்­ட­மிட்­டார்.

“ரம்­ஜான் மாதத்­தில் பல்­து­லக்­கும் மிஸ்­வாக் குச்­சிக்கு நல்ல கிராக்கி இருக்­கும். இதன் தேவையை பூர்த்தி செய்ய தேவை­யான அளவு இருப்பு வைக்க திட்­ட­மிட்­டேன்” என்று வர்த்­த­கர் ஜாகுர் அக­மது தெரி­வித்­தார்.    

ஆனால் ஜாகுர் அக­மது திட்­ட­மிட்­ட­படி எது­வும் நடக்­க­வில்லை. சென்ற மார்ச் 8ம் தேதி காஷ்­மீர் மாநி­லத்­தில் இருந்து பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் பகு­திக்கு எல்லை கட்­டுப்­பாடு கோடு வழி­யாக வர்த்­த­கம் செய்ய தற்­கா­லிக தடை விதிக்­கப்­பட்­டது. யூரி­யில் இரண்டு பகுதி எல்­லை­க­ளுக்­கும் நடு­வில் உள்ள ‘காமன் அமன் சேது பாலத்­தில்’ பரா­ம­ரிப்பு வேலை­கள் நடப்­ப­தால் வாகன போக்­கு­வ­ரத்­திற்கு தற்­கா­லிக தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். இந்த பரா­ம­ரிப்பு பணி முடிய பத்து முதல் பதி­னைந்து நாட்­கள் வரை ஆகும் என­வும் அதி­கா­ரி­கள் தரப்­பில் இருந்து தெரி­வித்­தி­ருந்­த­னர்.

காஷ்­மீ­ரில் யூரி வழி­யாக வர்த்­தம் தடை செய்­யப்­பட்­டா­லும், ஜம்­மு­வில் பூஞ்ச் பகு­தி­யில் இருந்து எல்லா தாண்­டிய வர்த்­த­கம் நடந்து வந்­தது. (ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­தில் இருந்து, பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் பகு­திக்கு யூரி, பூஞ்ச் ஆகி­ய­வற்­றின் வழி­யாக வர்த்­த­கம் செய்ய அனு­மதி வழங்­கி­யுள்­ள­னர்.)  ஆனால் ஏப்­ரல் 18ம் தேதி பூஞ்ச் வழி­யாக வர்த்­த­கம் செய்­வ­தற்­கும் தடை விதித்­த­னர். மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் மறு அறி­விப்பு வரும் வரை தடை விதித்­தது.

இந்த தடைக்கு மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் கூறிய கார­ணம், எல்லை கட்­டுப்­பாட்டு கோடு வழி­யாக நடக்­கும் வர்த்­த­கத்­தில், பாகிஸ்­தா­னைச் சேர்ந்த சில விரும்­பத்­த­காத சக்­தி­கள் ஆயு­தங்­கள், போதைப் பொருட்­கள், கள்ள ரூபாய் நோட்­டு­கள். ஹவாலா பணத்தை அனுப்­பு­வ­தாக தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. அத்­து­டன் இந்த எல்லை தாண்­டிய வர்த்­த­கத்­தில் பல்­வேறு மோச­டி­கள் நடக்­கின்­றன. வெளி­நா­டு­க­ளில் இருந்து பாகிஸ்­தா­னுக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பொருட்­களை இந்­தி­யா­விற்கு அனுப்­பு­கின்­ற­னர். இந்த வர்த்­த­கத்­தின் தன்­மையே மாறி­விட்­டது.  இதுவே வர்த்­தக தடைக்கு கார­ணம். இதில் மீண்­டும் வர்த்­த­கத்­திற்கு எப்­போது அனு­மதி வழங்­கப்­ப­டும் என்று கூறப்­ப­ட­வில்லை. சம்­பந்­தப்­பட்ட துறை­க­ளு­டன் விவா­தித்து விதி­களை கடு­மை­யாக அமல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்த பிறகு வர்த்­தக தடை நீக்­கு­வது பற்றி பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான வர்த்­தக தடை­யும், இது எப்­போது நீங்­கும் என்று தெரி­யா­த­தும் ஜாகுர் அக­மது போன்ற வர்த்­த­கர்­க­ளுக்கு பெரிய இடி­யாக அமைந்­தது. ஸ்ரீந­க­ரில் உள்ள பராம்­புரா பழ மார்க்­கெட்­டில் உள்ள கடை வெளியே நின்று கொண்­டி­ருந்த ஜாகுர் அக­மது, “ எங்­கள் வாழ்க்­கை­யும், முத­லீ­டும் ஆபத்­தில் உள்­ளது. நான் பொருட்­களை வாங்­கும் வர்த்­த­கர்­க­ளுக்கு பாதி பணம் முன்­ப­ண­மாக கொடுத்­துள்­ளேன். இங்­கி­ருந்து பொருட்­களை அனுப்பி, எல்­லைக்கு அப்­பால் இருந்து பொருட்­கள் வந்­த­வு­டன், அதனை விற்­பனை செய்து பாக்­கியை கொடுக்க திட்­ட­மிட்டு இருந்­தேன். ஆனால் தற்­போது நான் அனுப்ப வாங்­கிய பொருட்­கள் எல்­லாம் கிடங்­கில் அழு­கிப் போய்­கொண்­டுள்­ளது” என்று தெரி­வித்­தார்.

எல்லை தாண்­டிய வர்த்­த­கத்­தில் தொடர்­பு­டைய காஷ்­மீ­ரைச் சேர்ந்­த­வர்­கள், காமன் அமன் சேது பாலத்­தில் பரா­ம­ரிப்பு பணி என்று சாக்கு போக்கு கூறி வர்த்­த­கத்தை தடை செய்­துள்­ள­னர் என்று கரு­து­கின்­ற­னர். 2008ல் எல்லை தாண்­டிய வர்த்­த­கம் அனு­ம­திக்­கப்­பட்­டது. அப்­போ­தி­ருந்து இந்­திய பகு­தி­யில் இருந்து பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ருக்கு லாரி­களை ஓட்டி வரு­ப­வர் டிரை­வர்  நஜீர் அக­மது. அவர் கூறு­கை­யில், அந்த பாலத்­தின் நிலை மோச­மாக இல்லை. இரண்டு, மூன்று நாடா­க­ளில் பரா­ம­ரிப்பு பணி முடிந்து மீண்­டும் லாரி போக்­கு­வ­ரத்து தொடங்­கும் என்று நினைத்­தோம் என்று கூறி­னார்.

மார்ச் மாதத்­தில் இருந்து லாரி ஓட்­டும் வேலை இல்­லா­மல் இருக்­கும் நஜீர் அக­மது தொடர்ந்து கூறு­கை­யில், “இத­னால் எனது குடும்­பம் முழு­வ­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. எனது குழந்­தை­க­ளுக்கு பள்­ளிக்­கூட கட்­ட­ணம் கட்ட கூட பணம் இல்லை. விரை­வில் வர்த்­த­கம் தொடங்­கா­விட்­டால், எங்­க­ளது குழந்­தை­கள் பசியை போக்­கிக் கொள்ள தவ­றான பாதைக்கு செல்­லும் ஆபத்­தும் உள்­ளது” என்று கூறி­னார்.  

பூஞ்ச்­சில் உள்ள எல்லா தாண்­டிய வர்த்­தக சங்­க­மான சகன்–­டா–­பக் தலை­வர் பவான் ஆனந்த் , “வர்த்­த­கர்­கள், கணக்­கு­பிள்­ளை­கள், லாரி டிரை­வர்­கள், கூலி தொழி­லா­ளர்­கள் போன்ற இரண்­டா­யி­ரம் குடும்­பங்­கள் எல்லை தாண்­டிய வர்த்­த­கத்­தையை நம்பி உள்­ளன. இதே நிலை தான் எல்­லைக்கு அப்­பா­லும் உள்­ளது. அங்கு பெரு­ம­ள­வி­லான மக்­கள், இரு நாட்டு வர்த்­த­கத்­தையே நம்பி உள்­ள­னர். குஜ­ராத், ராஜஸ்­தா­னைச் சேர்ந்த மொத்த வர்த்­த­கர்­க­ளும், லாகூர், பசி­லா­பாத் நக­ரங்­க­ளைச் சேர்ந்த உற்­பத்­தி­யா­ளர்­க­ளும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மத்­திய அர­சின் உத்­த­ரவு எங்­கள் முது­கெ­லும்பை உடைத்­து­விட்­டது” என்று கூறி­னார்.

ஏற்­று­மதி செய்­வ­தற்கு பொருட்­களை வாங்கி வர்த்­தக தடை­யால் அனுப்ப முடி­யா­மல் கிடங்­கி­யில் அடுக்கி வைத்­துள்ள ஜாகிர் அக­மது, “நாங்­கள் வாங்­கிய பொருட்­களை திரும்ப கொடுத்­தால், அவர்­கள் நாங்­கள் வாங்­கிய விலைக்கு திரும்ப வாங்­கிக் கொள்ள மாட்­டார்­கள். பாதி விலைக்கே வாங்­கிக் கொள்­வார்­கள். அத்­து­டன் போக்­கு­வ­ரத்து செல­வை­யும் ஏற்­றுக் கொள்ள வேண்­டும். வர்த்­தக தடை தொடர்ந்து நீடித்­தால், நாங்­கள் தற்­கொலை செய்து கொள்­வதை தவிர வேறு வழி­யில்லை” என்று கூறி­னார்.

இந்­தியா, பாகிஸ்­தா­னுக்­கும் இடையே நம்­பிக்­கையை வளர்க்­கும் வித­மாக 2008, அக்­டோ­பர் மாதம் இரு நாடு­க­ளும் எல்லை கட்­டுப்­பாடு கோடு வழி­யாக வர்த்­த­கம் செய்ய உடன்­ப­டிக்கை செய்து கொண்­டன.

காஷ்­மீ­ரில் யூரி–­மு­சா­ப­ரா­பாத், ஜம்­மு­வில் பூஞ்ச்–­ர­வா­லா­கோட் இடையே வர்த்­த­கம் நடை­பெற சம்­ம­தம் தெரி­வித்­தன. இரு நாடு­க­ளும் 21 வகை­யான பொருட்­களை வர்த்­தம் செய்து கொள்­வ­தற்கு முடிவு செய்­தன. இதற்­கான விதி­மு­றை­கள் வகுக்­கப்­பட்­டது. வாரத்­திற்கு நான்கு நாட்­கள் மட்­டும் பொருட்­களை அனுப்­ப­லாம். இதே போல் பெற்­றுக் கொள்­ள­லாம். இந்த வர்த்­த­கத்­தில் ரூபாய் பரி­மாற்­றம் இருக்­காது. பண்­ட­மாற்று முறை­யில் வர்த்­தம் நடை­பெ­றும். உதா­ர­ண­மாக இந்­திய வர்த்­த­கர் ரூ.5 லட்­சம் மதிப்­புள்ள பொருளை அனுப்­பி­னால், அங்­கி­ருந்து இதே மதிப்­பிற்கு பொருளை பெற்­றுக் கொள்­ள­லாம்.

இந்த எல்லை தாண்­டிய வர்த்­த­கத்­திற்­கான விதை 2004ல் இந்­திய பிர­த­ம­ராக வாஜ்­பாய், பாகிஸ்­தான் அதி­ப­ராக பர்­வேஸ் முசா­பர் இருந்த போது விதைக்­கப்­பட்­டது. பிறகு மன்­மோ­கன் சிங் பிர­த­ம­ராக இருந்து போது, எல்லை தாண்­டிய வர்த்­த­கம் தொடங்­கி­யது. இந்த வர்த்­த­கம் பெரும் வெற்­றியை பெற்­றது. எல்லை தாண்­டிய வர்த்­த­கம் தொடங்­கிய 2008ல் ரூ.1 கோடியே 30 லட்­சம் மதிப்­புள்ள பொருட்­க­ளின் வர்த்­த­கம் மட்­டும் நடந்­தது. இது படிப்­ப­டி­யாக வளர்ந்து தற்­போது ரூ.3 ஆயி­ரம் கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

அதே நேர்த்­தில் வர்த்­தம் தொடங்­கிய நாளில் இருந்து பல்­வேறு பிரச்­னை­க­ளை­யும் சந்­தித்து வரு­கி­றது. பாது­காப்பு படை­யி­னர் பல்­வேறு இடங்­க­ளில் பொருட்­களை சோதிப்­பது, இரண்டு நாட்டு வர்த்­த­கர்­க­ளும் தொடர்பு கொள்ள உரிய தக­வல் தொடர்பு வசதி இல்லை.  இந்­திய பாது­காப்பு படை­யி­னர் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் பகு­தி­யில் இருந்து வரும் பொருட்­களை சோத­னை­யிட்டு ஆயு­தங்­கள், கள்ள ரூபாய் நோட்டு, போதை பொருட்­கள் போன்­ற­வை­களை கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

இது போன்ற சம்­ப­வங்­கள் நடந்­தா­லும் வர்த்­த­கம் தொடர்ந்து நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்­தது. அதே நேரத்­தில் பல முறை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டன. இரு நாடு­க­ளுக்­கும் இடையே மோதல்­கள் இருந்த போதி­லும், குறிப்­பாக 2008ல் மும்பை தாக்­கு­தல், 2016ல் யூரி­யில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்­கு­த­லில் 79 ராணுவ வீரர்­கள் பலி­யான போதும் கூட வர்த்­த­கம் தொடர்ந்­தது.

மத்­திய உள்­துறை அமைச்­ச­கம் ஏப்­ரல் 18ம் தேதி வர்த்­த­கத்­திற்கு தடை விதித்து அறி­விப்பு வெளி­யிட்­டது. இது காஷ்­மீ­ரில் உள்ள போலீஸ், பாது­காப்பு படை­யி­ன­ருக்கு எந்த ஆச்­ச­ரி­யத்­தை­யும் ஏற்­ப­டுத்­த­வில்லை.

காஷ்­மீ­ரைச் சேர்ந்த போலீஸ், பாது­காப்பு படை­யி­னர் மாநில அர­சுக்­கும், மத்­திய அர­சுக்­கும், பாகிஸ்­தான் இந்த வர்த்­த­கத்தை பயன்­ப­டுத்தி தீவி­ர­வா­தி­க­ளுக்­கும், பிரி­வி­னை­வா­தி­க­ளுக்­கும் பணம் அனுப்­பு­வதை பற்­றிய அறிக்­கையை அனுப்பி வைத்­த­னர். ஆனால் எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. மத்­திய அர­சும், மாநி­லத்­தில் அமைந்த அர­சு­க­ளும் எல்லை தாண்­டிய வர்த்­த­கத்­தால் அமைதி ஏற்­ப­டும் என்று நம்­பி­னார்­கள்.

பண்­ட­மாற்று முறை­யில் நடந்­தா­லும்  பணப்­பு­ழக்­க­மும் இருக்­கின்­றது. காஷ்­மீ­ரைச் சேர்ந்த வர்த்­த­கர் ரூ.10 லட்­சம் மதிப்­புள்ள பொருட்­களை அனுப்­பி­னால், இரு நாட்டு நாண­யங்­க­ளின் மதிப்பு வேறு­பட்­டா­லும், அவர் அனுப்­பிய மதிப்­புள்ள பொரு­ளுக்கு இணை­யாக அங்­கி­ருந்து பெற வேண்­டும். ஆனால் அப்­படி நடப்­ப­தில்லை. ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீர் பகு­தி­யில் இருந்து வரும் பொருட்­க­ளின் விலை குறைத்து காண்­பிக்­கப்­ப­டும். அவை காஷ்­மீ­ரில் விற்­பனை செய்­யும் போது, அதிக விலைக்கு விற்­பனை செய்­யப்­ப­டும். இதில் கிடைக்­கும் லாபம் சட்­ட­வி­ரோத காரி­யங்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்று தனது பெயரை குறிப்­பி­டாத மூத்த போலீஸ் அதி­காரி தெரி­வித்­தார்.

2016, டிசம்­பர் மாதம் தேசிய புல­னாய்வு அமைப்பு, அமெ­ரிக்­கா­வின் கலி­போர்­னியா மாநில பாதம் பருப்பு ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரில் இருந்து, எல்லை கட்­டுப்­பாடு கோடு வர்த்­த­கத்­தில் இந்­திய பகு­திக்கு வரு­வது பற்­றிய விசா­ர­ணை­யில் இறங்­கி­னார்­கள். இந்த பாதாம் விற்­பனை மூலம் கிடைக்­கும் பணம் தீவி­ர­வா­தி­கள், பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு செல்­கின்­றது என்று கூறப்­ப­டு­வதை பற்றி விசா­ரணை நடத்த தொடங்­கி­னார்­கள்.

எல்­லைக்கு அப்­பால் இருந்து சட்­ட­வி­ரோ­த­மாக வேறு வழி­யி­லும் பணம் வரு­கி­றது. ஆக்­கி­ர­மிப்பு பகு­தி­யைச் சேர்ந்த வியா­பாரி, இந்­திய பகு­திக்கு ரூ.5 லட்­சம் மதிப்­புள்ள பொருட்­களை அனுப்­பு­கின்­றார். இதற்கு பதி­லாக இந்­திய வியா­பாரி ரு.5 லட்­சம் மதிப்­புள்ள பொருளை அனுப்­பு­வ­தற்கு பதி­லாக ரூ.2 லட்­சம் மதிப்­புள்ள பொருட்­களை மட்­டும் அனுப்­பு­வார். மீதம் உள்ள ரூ.3 லட்­சம் ஹவா­லா­வில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளி­டம் கொடுத்து விடு­வார். இது போன்ற வழக்­கு­களை விசா­ரிப்­பது மிக­வும் கஷ்­டம். பல நேரங்­க­ளில் விசா­ரிக்­கப்­ப­டா­மல் கிடப்­பில் போடப்­ப­டும். தேசிய புல­னாய்வு அமைப்பு பாதாம் பருப்பு விசா­ர­ணை­யில் எவ்­வித முன்­னேற்­றத்­தை­யும் காண­வில்லை என்று போலீஸ் அதி­காரி தெரி­வித்­தார்.

இந்த வர்த்­த­கத்தை உன்­னிப்­பாக கவ­னிக்­கும் மற்­றொரு போலீஸ் அதி­காரி கூறு­கை­யில், போலீஸ், பாது­காப்பு படை­யி­னர் நீண்­ட­கா­ல­மாக எல்லை தாண்­டிய வர்த்­த­கத்­தில் பண பரி­மாற்­றத்­திற்கு வங்கி வச­தியை ஏற்­ப­டுத்­து­மாறு கூறி­வ­ரு­கின்­றன. பண்­ட­மாற்று வர்த்­த­கத்­திற்கு பதி­லாக வங்கி மூல­மாக பண பரி­மாற்­றம் நடந்­தால், அதில் வெளிப்­ப­டை­தன்­மை­யும் இருக்­கும். தவறு நடந்­தால் விசா­ரித்து வழக்கு பதிவு செய்­ய­வும் முடி­யும் என்று தெரி­வித்­தார்.

மத்­திய அரசு இப்­போது ஏன் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யுள்­ளது என்ற கேள்­விக்கு போலீஸ் அதி­காரி பதி­ல­ளிக்­கை­யில், இந்த தடை செய்­யப்­பட்­டுள்ள நேரம் மிக முக்­கி­ய­மா­னது. முத­லில் தற்­போது வேறு அரசு உள்­ளது. இரண்­டா­வது இது தேர்­தல் நேரம் என்று கூறி­னார்.

மத்­திய உள்­துறை ஏப்­ரல் 18ம் தேதி வர்த்­தக தடை அறி­விப்பு வெளி­யிட்ட ஒரு வாரத்­திற்கு பிறகு, தேசிய புல­னாய்வு அமைப்பு, உள­வுத்­துறை ஆகி­யவை, இந்த வர்த்­த­கத்தை பயன்­ப­டுத்­திக் கொண்டு, ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரில் இருந்து ஆயு­தங்­கள், போதை பொருட்­கள், கள்ள ரூபாய் நோட்­டு­களை அனுப்­பும் பத்து தீவி­ர­வா­தி­கள் பற்­றிய அறி­விப்பை வெளி­யிட்­டது. இந்த தீவி­ர­வா­தி­கள் அனை­வ­ரும் ஜம்­மு–­காஷ்­மீர் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­கள் 1990இல் ஆயுத பயிற்­சிக்கு எல்லை தாண்டி சென்­ற­வர்­கள். காஷ்­மீ­ரைச் சேர்ந்த வர்த்­த­கர்­க­ளும், போலீஸ் அதி­கா­ரி­க­ளும் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரைச் சேர்ந்த வர்த்­த­கர்­க­ளில் பெரும்­பா­லோர், எல்லை தாண்டி சென்­ற­வர்­கள் என்று கூறு­கின்­ற­னர்.

யூரி­யில் சலாம்­பாத் வர்த்­தக சங்க தலை­வர் ஹிலால் துர்கி, நாங்­கள் 2017ல் முத­ல­மைச்­ச­ராக இருந்த மக­பூப் முப்­தி­யி­டம் கொடுத்த மனு­வில் நாங்­கள் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீ­ரைச் சேர்ந்த வர்த்­த­கர்­க­ளில் பெரும்­பா­லோர், 90களில் சட்­ட­வி­ரோ­த­மாக எல்லை தாண்டி சென்­ற­வர்­கள் என்று தெரி­வித்து இருந்­தோம். இது தொடர்­பாக உரிய ஆலோ­சனை வழங்­கும்­ப­டி­யும் கேட்­டுக் கொண்­டி­ருந்­தோம். இது வரை மாநில அர­சி­டம் இருந்து எந்த தக­வ­லும் வர­வில்லை “ என்று தெரி­வித்­தார்.

ஹிலார் துர்கி தொடர்ந்து கூறு­கை­யில், “மத்­திய உள்­துறை அமைச்­ச­கத்­தில் ஏப்­ரல் 18ம் தேதி அறி­விப்­பால், புதிய விதி­மு­றை­கள் அறி­விக்­கப்­ப­டும். இது வெளிப்­ப­டை­தன்­மை­யாக இருக்­கும். நாட்­டின் பாது­காப்பே மிக முக்­கி­யம். நாட்­டின் பாது­காப்­பிற்கு பிறகே வர்த்­த­கர்­க­ளின் நலன். வர்த்­த­கம் எவ்­வித இடர்­பா­டும் இல்­லா­மல் நடந்­தால், இது எங்­க­ளுக்கே நன்­மை­யாக இருக்­கும். மத்­திய அரசு உரிய நட­வ­டிக்கை எடுக்­கும். மீண்­டும் வர்த்­த­கம் தொடங்­கும் என்று நம்­பு­கின்­றோம்” என்று அவர் கூறி­னார்.

நன்றி: ஸ்கோரல் இணை­ய­த­ளத்­தில் சாப்­வாட் ஜார்­கர்.