செலவழிக்காத எம்.பி., தொகுதி நிதி

பதிவு செய்த நாள் : 18 மே 2019

பார்­லி­மென்ட் உறுப்­பி­னர்­கள் பரிந்­து­ரைக்­கும் திட்­டங்­களை நிறை­வேற்ற மத்­திய அரசு நிதி ஒதுக்­கி­றது. லோக்­சபா, ராஜ்­ய­சபா உறுப்­பி­னர்­கள் பரிந்­து­ரைக்­கும் திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் இந்த நிதியை ‘எம்.பி. வளர்ச்சி நிதி’ (MPs’ Development Funds) என்று அழைக்­கின்­ற­னர். 16 வது லோக்­சபா (சென்ற லோக்­சபா) உறுப்­பி­னர்­க­ளின் வளர்ச்சி நிதி­யாக ரூ. 12,051 கோடியே 36 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் 85 சத­வி­கித பணம் மட்­டுமே செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. 15 சத­வி­கி­தம் ரூ.1,806 கோடியே 8 லட்­சம் செல­வ­ழிக்­கப்­ப­ட­வில்லை.

ஒவ்­வொரு எம்.பி.,யும் தங்­கள் தொகு­தி­யில் வளர்ச்சி பணி­களை மேற்­கொள்ள இந்த நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு எம்.பி.,க்கும் வரு­டத்­திற்கு ரூ.5 கோடி ஒதுக்­கப்­ப­டு­கி­றது. அந்­தந்த மாவட்ட கலெக்­டர் மூல­மாக வளர்ச்சி பணி­களை மேற்­கொள்ள வேண்­டும். குடி­தண்­ணீர், பொது சுகா­தா­ரம், கல்வி, சாலை, துப்­பு­ரவு போன்ற அத்­தி­யா­வ­சிய பணி­களை மேற்­கொள்­ள­லாம். எந்த திட்­டத்தை அமல்­ப­டுத்த வேண்­டும் என்று எம்.பி.,க்கள் பரிந்­து­ரைப்­பார்­கள். இதற்­கான நிதியை ஒதுக்கி, திட்­டத்தை மாவட்ட கலெக்­டர் செயல்­ப­டுத்­து­வார். இதற்­கென வழி­காட்டி நெறி­மு­றை­கள் உள்­ளன. ஒரு தொகு­திக்கு ஒதுக்­கப்­ப­டும் நிதி, முழு­வ­து­மாக பயன்­ப­டுத்­தி­வில்லை எனில், மீத­முள்ள நிதியை அடுத்து அந்த தொகு­தி­யின் எம்.பி.,வளர்ச்சி நிதி­யில் சேர்க்­கப்­ப­டும். அடுத்து தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் எம்.பி., இந்த நிதியை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.  

மேக­லயா, டில்லி, சண்­டீ­கர்,குஜ­ராத், சிக்­கிம் ஆகிய மாநி­லங்­க­ளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதிக அளவு நிதியை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். கோவா மாநில எம்.பி.,க்கள் 22.54 சத­வி­கித நிதியை பயன்­ப­டுத்­த­வில்லை. நாகா­லாந்து மாநில எம்.பி.,க்கள் எந்த திட்­டத்­தை­யும் பரிந்­து­ரைக்­க­வில்லை. அல்­லது முன்­னு­ரிமை துறை­யான மருத்­து­வம் (சுகா­தா­ரம்) மற்­றும் குடும்­ப­நல துறைக்கு எவ்­வித நிதி­யும் ஒதுக்­க­வில்லை. மருத்­து­வம் (சுகா­தா­ரம்) மற்­றும் குடும்­ப­நல துறைக்கு ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு 1 லட்­சத்து 43 ஆயி­ரம் மட்­டுமே ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த துறைக்கு இமா­ச­ல­பி­ர­தே­சத்­திற்கு ஐந்­தா­யி­ரம் ரூபாய் மட்­டுமே ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கல்வி வளர்ச்­சிக்­காக நிதியை பயன்­ப­டுத்­திய மாநி­லங்­க­ளில் மேற்கு வங்­கம் முத­லி­டத்­தில் உள்­ளது. மேற்கு வங்க எம்.பி.,க்களின் பரிந்­து­ரை­யின் படி கல்வி துறைக்கு ரூ. 44 கோடியே 41 லட்­சம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது . அடுத்­த­ப­டி­யாக பஞ்­சாப் மாநி­லத்­திற்கு ரூ.35 கோடியே 62 லட்­சம், தமிழ்­நாட்­டிற்கு ரூ.27 கோடியே 85 லட்­சம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மிஜோ­ரம் மாநி­லத்­திற்கு ரூ. 20 லட்­சம், ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு ரூ.35 லட்­சத்து 93 ஆயி­ரம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. நாகா­லாந்­திற்கு மிக குறை­வான நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மருத்­து­வம் (சுகா­தா­ரம்) மற்­றும் குடும்­ப­நல துறைக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் அதி­க­பட்­சம் மேற்கு வங்­கத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மேற்கு வங்­கத்­திற்கு ரூ.39 கோடியே 97 லட்­சம், பஞ்­சாப்­பிற்கு ரூ.9 கோடியே 7 லட்­சம், குஜ­ராத்­திற்கு ரூ. 6 கோடியே 25 லட்­சம், தமிழ்­நாட்­டிற்கு ரூ.4 கோடியே 64 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.  ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­திற்கு ரூ.1 லட்­சத்து 43 ஆயி­ரம், இமா­ச­ல­பி­ர­தே­சத்­திற்கு ரூ.5 ஆயி­ரம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

துப்­பு­ரவு மற்­றும் பொது சுகா­தார துறைக்கு நிதியை பெறு­வ­தில் பஞ்­சாப்,மேற்கு வங்­கம் ஆகி­யவை முன்­ன­ணி­யில் உள்­ளன. பஞ்­சாப்­பிற்கு ரூ.23 கோடியே 46 லட்­சம், மேற்கு வங்­கத்­திற்கு ரூ. 17 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. தெலுங்­கா­னா­விற்கு ரூ. 9 கோடியே 72 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த முன்­னு­ரிமை துறை நிதியை பெறு­வ­தி­லும் நாக­லாந்து, இமா­ச­ல­பி­ர­தே­சம் ஆகி­யவை பின்­தங்கி உள்­ளன. நாகா­லாந்­திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்­கப்­ப­ட­வில்லை. இமா­ச­ல­பி­ர­தே­சத்­திற்கு ரூ. 12 லட்­ச­மும், உத்­த­ர­காண்­டிற்கு ரூ. 14 லட்­ச­மும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் வறட்சி பிர­தே­ச­மான விதர்பா, மராத்­வாடா ஆகிய பகு­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட எம்.பி வளர்ச்சி நிதி ரூ.211 கோடியே 68 லட்­சம். இதில் ரூ.58 கோடியே 1 லட்­சம் செல­வ­ழிக்­கப்­ப­ட­வில்லை( 27 சத­வி­கி­தம்) விதர்பா பிராந்­தி­யத்­தில் அம­ரா­வதி பகு­தி­யில் அகோலா, அம­ரா­வதி, புல்­தானா, .யாட்­மால், வாசிம் ஆகிய மாவட்­டங்­கள் அடங்­கி­யுள்­ளன. இந்த மாவட்­டங்­க­ளுக்­காக ரூ. 71கோடியே 21 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் ரூ.57 கோடியே 3 ஆயி­ரம் மட்­டும் செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. ரூ.14 கோடியே 18 லட்­சம் செல­வ­ழிக்­க­ப­ட­வில்லை.

மராத்­வாடா பிராந்­தி­யத்­தில் அவு­ரங்­கா­பாத், பீட், ஜலானா, உஸ்­மா­னா­பாத், நந்­தித், லாதுர், பிர­பானி, ஹிங்­கோலி ஆகிய மாவட்­டங்­கள் அடங்­கி­யுள்­ளன. இந்த பிராந்­தி­யத்­திற்கு ரூ.140 கோடியே 48லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் ரூ.118 கோடியே 50 லட்­சம் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். ரூ.21 கோடியே 96 லட்­சம் பயன்­ப­டுத்­த­வில்லை.

எம்.பி.,வளர்ச்சி நிதி­யில் அதி­க­பட்­ச­மாக 99.9 சத­வி­கித நிதியை ஐந்து எம்.பி.,க்கள் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அவர்­கள் ராம் கிஷோர் சிங் (பீகார், வைசாலி தொகுதி), நீபியோ ரியோ (நாகா­லாந்து), ஹர்ஸ் வர்­தன் (டில்லி, சாந்­தினி சவுக்), கனார்ட் சங்மா (மேக­லயா, துரா), டி.ஜி.வெங்­க­டேஷ் பாபு (தமிழ்­நாடு, வட­சென்னை) ஆகி­யோர். குஜ­ராத் மாநி­லத்­தைச் சேர்ந்த சபர்­காந்தா தொகுதி எம்.பி டிப்­சிங் ஷங்­கர்­சிங் ரத்­தோட் 99.8 சத­வி­கித நிதியை பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்.  

பீகார் மாநி­லத்­தைச் சேர்ந்த வைசாலி தொகுதி லோக்­சபா உறுப்­பி­னர் ராம் கிஷோர் சிங், எம்.பி.,வளர்ச்சி நிதி­யாக ரூ. 25 கோடி பெற தகு­தி­யா­ன­வர். அவ­ருக்கு ரூ.22 கோடியே 50 லட்­சம் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டது. முந்­தைய எம்.பி வளர்ச்சி நிதி­யில் செல­வ­ழிக்­காத தொகை, அதற்­கான வட்டி சேர்த்து மொத்­தம் ரூ. 24 கோடியே 41 லட்­ச­மாக அதி­க­ரித்த்து. இதில் ராம் கிஷோர் சிங் பரிந்­து­ரை­யின் பேரில் மாவட்ட நிர்­வா­கம் ரூ. 24 கோடியே 40 லட்­சம் செல­வ­ழித்­துள்­ளது.

ஒரு வரு­டம் முதல் இரண்­டரை வரு­டம் வரை எம்.பி.,க்களாக இருந்து ஐந்து பேருக்கு ஒதுக்­கிய எம்.பி.,வளர்ச்சி நிதி­யில் ஒரு பைசா கூட செல­வ­ழிக்­கப்­ப­ட­வில்லை. பந்­தா­ரா–­­கோன்­டியா தொகுதி எம்.பி.,யாக 2014 மே முதல் 2017 டிசம்­பர் வரை இருந்­த­வர் நானா பால்­குன்­ராடோ படோலி. இவ­ரது தொகு­திக்கு ரூ. 17 கோடியே 50 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இந்த நிதி­யில் இருந்து ஒரு பைசா கூட வளர்ச்­சிக்­காக செல­வ­ழிக்­க­வில்லை. அஸ்­ஸாம் மாநி­லம் லக்­கி­மி­பூர் தொகுதி எம்.பியாக 2014 மே முதல் 2016 மே மாதம் வரை இருந்­த­வர் சர்­பா­னந்தா சோனா­வால். (தற்­போ­தைய அஸ்­ஸாம் முதல்­வர்) இவ­ரது தொகு­திக்கு ரூ. 7 கோடியே 50 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் ஒரு பைசாவை கூட செல­வ­ழிக்­க­வில்லை. 2014 மே முதல் 2015 ஜூன் வரை தெலுங்­கானா மாநில வாராங்­கல் தொகுதி எம்.பி.,யாக இருந்­த­வர் ஸ்ரீஹரி காடி­யம். இவ­ரது தொகு­திக்­குவ ரூ. 5 கோடி ஒதுக்­கப்­பட்­டது. இதில் இருந்து ஒரு ரூபாய் கூட செல­வ­ழிக்­க­வில்லை.

மேக­ல­யா­வில் மாவட்ட நிர்­வா­கம் எம்.பி.,வளர்ச்சி நிதி­யில் அதி­க­பட்­ச­மாக 92.71 சத­வி­கி­தம் பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. ரூ.43 கோடியே 68 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் ரூ.40 கோடியே 26லட்­சம் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

டில்லி மாவட்ட நிர்­வா­கம் 91.46 சத­வி­கித நிதியை பயன்­ப­டுத்­தி­யுள்­ளது. ரூ.134 கோடியே 47 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் ரூ.122 கோடியே 90 லட்­சம் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். சண்­டீ­கர் எம்.பி கிரண்­கர் பரிந்­து­ரை­யின் பேரில் ரூ.22 கோடியே 50 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. முன்பு செல­வ­ழிக்­கப்­ப­டா­மல் இருந்த எம்.பி.,வளர்ச்சி நிதி­யும் சேர்த்து மொத்­தம் ரூ.27 கோடியே 87லட்­சம் ஆனது. இதில் 91.21 சத­வி­கி­தம் அதா­வது ரூ.25 கோடியே 42 லட்­சம் செல­வ­ழித்­துள்­ள­னர். கழிப்­ப­றை­கள், குளி­ய­ல­றை­கள் கட்ட மட்­டும் ரூ.17 லட்­சத்து 84 ஆயி­ரம் செல­வ­ழித்­துள்­ள­னர்.

குஜ­ராத் மாநில எம்.பி.,வளர்ச்சி நிதி­யாக மொத்­தம் ரூ.613 கோடியே 37 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் ரூ. 559 கோடியே 39 லட்­சம் (91.20 சத­வி­கி­தம்) பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். சிக்­கிம் மாநில எம்.பி.,வளர்ச்சி நிதி­யாக ரூ.22 கோடியே 23 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் 20 கோடியே 16 லட்­சம் (90.69 சத­வி­கி­தம்) பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

கோவா, லட்­சத்­தீ­வு­கள், ராஜஸ்­தான், அஸ்­ஸாம் திரி­புரா ஆகிய மாநி­லங்­க­ளில் கணி­ச­மான வளர்ச்சி நிதி பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கோவா மாநி­லத்­திற்கு ரூ. 35 கோடியே 41 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் 7 கோடியே 98 லட்­சம் (22.54 சத­வி­கி­தம்) பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. லட்­சத்­தீ­வுக்கு ரூ.21 கோடியே 40 ஆயி­ரம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் ரூ.4 கோடியே 60 லட்­சம் (21.86 சத­வி­கி­தம்) செல­வ­ழிக்­க­வில்லை.

ராஜஸ்­தான் மாநி­லத்­திற்கு ரூ.531 கோடியே 50 ஆயி­ரம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் 113 கோடியே 97 லட்­சம் (21.46 சத­வி­கி­தம்) பயன்­ப­டுத்­த­வில்லை. அஸ்­ஸாம் மாநி­லத்­திற்கு ரூ.308 கோடியே 12 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் 61 கோடியே முப்­ப­தா­யி­ரம் (19.81 சத­வி­கி­தம்) பயன்­ப­டுத்­த­வில்லை. திரி­புரா மாநி­லத்­திற்கு ரூ.40 கோடியே 92 லட்­சம் ஒதுக்­கப்­பட்­டது. இதில் 7 கோடியே 61 லட்­சம் (18.6 சத­வி­கி­தம்) பயன்­ப­டுத்­த­வில்லை.    

நன்றி: இந்­தியா ஸ்பென்ட் இணை­ய­த­ளத்­தில் பைஸி நூர் அக­மது எழு­திய கட்­டு­ரை­யின் சுருக்­கம்.

ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.ஷ.