சாதித்த தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள்

பதிவு செய்த நாள் : 18 மே 2019

தெலுங்­கானா பழங்­கு­டி­யி­னர் உறை­விட பள்­ளி­கள் [Telangana Tribal Welfare Residential Educational Institutions (TTWREIs)], தெலுங்­கானா சமூ­க­நல துறை உறை­விட பள்­ளி­க­ளைச் சேர்ந்த [Social Welfare Residential Educational Institutions (TSWREIs)] 506 மாணவ, மாண­வி­கள் முதன் முறை­யாக ஐ.ஐ.டி போன்ற உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் சேர நடத்­தப்­ப­டும், ‘இந்­திய தொழில்­நுட்ப கழக ஒருங்­கி­ணைந்த நுழை­வுத்­தேர்­வில்’, முதல்­நிலை தேர்­வில் (Joint Entrance Examination) வெற்றி பெற்­றுள்­ள­னர். இதன் இரண்­டாம் நிலை தேர்வு இந்த மாதம் நடை­பெ­று­கி­றது.

இந்த உறை­விட பள்­ளி­க­ளில் இருந்து அதிக எண்­ணிக்­கை­யி­லான மாண­வர்­கள் நுழை­வுத் தேர்­வில் பெற்றி பெறு­வது இதுவே முதல்­முறை. இவர்­கள் வறு­மை­யை­யும், பல்­வேறு சவால்­க­ளை­யும் முறி­ய­டித்து வெற்றி பெற்­றுள்­ள­னர்.

தெலுங்­கானா மாநில அரசு தாழ்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யின மாண­வர்­க­ளுக்கு சிறந்த முறை­யில் கல்வி வழங்க, இந்த உறை­விட பள்­ளி­களை நடத்­து­கி­றது. தற்­போது நுழை­வுத் தேர்­

வில் வெற்றி பெற்ற மாண­வர்­கள் அனை­வ­ரும் குக்­கி­ரா­மங்­க­ளில் இருந்­தும், பழங்­கு­டி­மக்­கள் வாழும் கிரா­மங்­க­ளில் இருந்து படிக்க வந்­த­வர்­கள்.

இந்த மாண­வர்­க­ளது பெற்­றோர்­கள் விவ­சாய கூலி­க­ளா­க­வும், கட்­டி­டம் கட்­டு­மி­டங்­க­ளில் கொத்­த­னார், டீ மாஸ்­டர், காய்­கறி விற்­பனை செய்­ப­வர்­கள், குமாஸ்­தாக்­க­ளாக குறைந்த வரு­மா­னத்தை ஈட்­டு­ப­வர்­கள்.

இந்த நுழை­வுத் தேர்­வில் வெற்றி பெற்ற 506 மாண­வர்­க­ளில் 307 பேர் தெலுங்­கானா சமூ­க­நல துறை உறை­விட பள்­ளி­க­ளில் படித்­த­வர்­கள். 199 மாண­வர்­கள் தெலுங்­கானா பழங்­கு­டி­யி­னர் உறை­விட பள்­ளி­க­ளில் படித்­த­வர்­கள்.

இவர்­க­ளில் சமூ­க­நல துறை உறை­விட பள்­ளி­க­ளில் படித்த 22 மாண­வர்­க­ளும், பழங்­கு­டி­யி­னர் உறை­விட பள்­ளி­க­ளில் படித்த 13 மாண­வர்­க­ளும் பொது பிரி­வில் தகுதி பெற்­றுள்­ள­னர். (தாழ்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யி­னர் இட ஒதுக்­கீட்­டில் அல்­லா­மல் பொது பிரிவு) கவு­லி­டோடி என்ற ஊரில் சமூக நலத்­துறை நடத்­தும் ஐ.ஐ.டி கல்­லூ­ரி­யில் படித்த ரஜி­னி­கேஸ் வர்­தன் என்ற மாணவி 360 மதிப்­பெண்­க­ளுக்கு 203 மதிப்­பெண் பெற்­றுள்­ளார். (98.41%) ராஜேந்­திர நக­ரில் அமைந்­துள்ள பழங்­கு­டி­யி­னர் ஐ.ஐ.டி கல்­லூ­ரி­யில் படித்த மாண­வர் கோரா மகேஷ் 95.3 சத­வி­கித மதிப்­பெண் பெற்று அகில இந்­திய அள­வில் பழங்­கு­டி­யி­னர் பிரி­வில் 410 வது இடத்தை பிடித்­துள்­ளார். அஜ்­மீரா மகேஷ் என்ற மாண­வர் பழங்­கு­டி­யி­னர் பிரி­வில் 486 வது இடத்தை பிடித்­துள்­ளார்.  சமூக நலத்­துறை நடத்­தும் ஐ.ஐ.டி கல்­லூ­ரி­யில் படித்த எல்.தேஜஸ்­வினி என்ற மாணவி 93.4 சத­வி­கித மதிப்­பெண் பெற்­றுள்­ளார். கே.பிரி­யா­ஷன் என்ற மாண­வர் 93.62 சத­வி­கித மதிப்­பெண் பெற்­றுள்­ளார்.

இந்த பள்­ளி­க­ளின் செய­லா­ளர் டாக்­டர். ஆர்.எஸ்.பிர­வின் குமார், நுழை­வுத் தேர்­வில் வெற்றி பெற்ற மாண­வர்­களை பாராட்­டி­ய­து­டன், இந்த வருட நுழை­வுத் தேர்­வின் வெற்றி பொன் எழுத்­துக்­க­ளால் பொறிக்­கப்­பட வேண்­டி­யது. கடு­மை­யாக உழைத்த இந்த பள்­ளி­க­ளின் தலை­மை­யா­சி­ரி­யர், ஆசி­ரி­யர்­க­ளுக்கே அனைத்து பெரு­மை­க­ளும் சேரும். இந்த உறை­விட பள்­ளி­க­ளில் தங்கி நுழை­வுத் தேர்வு எழு­தும் மாண­வர்­க­ளுக்கு தர­மான பயிற்­சி­யும், தேவை­யான புத்­த­கங்­கள், சத்­தான உணவு வழங்­கப்­ப­டு­கி­றது என்று கூறி­னார்.