தெய்­வம் போல் காப்­பாற்­றி­னார்

பதிவு செய்த நாள் : 18 மே 2019

கண­வன் இறந்­த­தால் கட­னில் தத்­த­ளித்த குடும்­பத்­திற்கு, முன்­பின் அறி­மு­க­மில்­லாத கோடீஸ்­வ­ரர் உதவி செய்­தி­ருக்­கும் சம்­ப­வம் நெகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கேர­ளா­வில் மலப்­பு­ரம் அருகே இருக்­கும் காக்­கூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் முக­மது ஆசிக். இவ­ருக்கு திரு­ம­ணம் ஆகி பெண் குழந்தை உள்­ளது. இவ­ரின் தந்தை புற்று நோயால் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன் இறந்­து­விட்­டார். இவ­ரது சகோ­த­ரி­யும் உடல்­நிலை சரி­யில்­லா­மல் படுத்த படுக்­கை­யாக உள்­ளார்.

தந்­தை­யின் புற்று நோய் சிகிச்­சைக்­காக வீடு, நிலம் ஆகி­ய­வற்றை வங்­கி­யில் அட­மா­ன­வைத்து கடன் வாங்­கி­யி­ருந்­தார். கடனை அடைப்­ப­தற்­காக அரபு நாட்­டில் வேலைக்கு சென்­றார். அங்கு கிடைத்த சம்­ப­ளத்­தில் கடனை சிறுக சிறுக அடைத்து வந்­துள்­ளார். கடந்த செப்­டம்­பர் மாதம் வேலைக்கு சென்ற இடத்­தில் ஆஷிக் மர்­ம­மாக இறந்து கிடந்­தார். ஏற்­க­னவே வறு­மை­யில் வாடிய குடும்­பம், ஆசிக் சம்­பா­தித்து அனுப்­பிய பணத்­தில் சிறிது சிறி­தாக வறு­மை­யில் இருந்து மீண்டு வந்­தது. இந்­நி­லை­யில் ஆஷிக்­கின் மர­ணம் அவ­ரது குடும்­பத்தை மீண்­டும் வறு­மை­யில் தள்­ளி­யது.

அத்­து­டன் தந்­தை­யின் நோயை குணப்­ப­டுத்த் வங்­கி­யில் வாங்­கி­யி­ருந்த கடன், வட்­டி­யு­டன் சேர்த்து ரூ.17 லட்­சத்தை நெருங்­கி­யது. வங்கி நிர்­வா­கம் அவ­ரது கடனை திருப்பி செலுத்­தாத கார­ணத்­தால் ஜப்தி நோட்­டீஸ் அனுப்­பி­யது. ஆஷிக்­கின் மனைவி வீட்டை காப்­பாற்­று­வ­தற்­காக பல இடங்­க­ளில் முயற்சி செய்­தார். யாரும் உதவ முன்­வ­ர­வில்லை. வீட்டை காலி செய்ய வங்கி நிர்­வா­கம் இரண்டு நாட்­கள் கெடு விதித்து இருந்­தது.

மறு நாளே ஆஷிக்­கின் வீட்­டிற்கு வங்கி அதி­கா­ரி­கள் வந்­த­னர். ஆஷிக்­கின் மனை­வி­யும், மற்ற குடும்­பத்­தா­ரும் திகைத்து செய்­வ­த­றி­யா­மல் நின்­ற­னர். வங்கி அதி­கா­ரி­கள் வீடு, நிலத்­திற்­கான ஆவ­ணங்­களை திருப்பி கொடுத்­துள்­ள­னர். உங்­கள் கடன் திருப்பி செலுத்­தப்­பட்டு விட்­டது என்று கூறி­யுள்­ள­னர். கண­வர் வாங்­கிய கடனை திருப்பி செலுத்­தி­யது யார் என்று ஆஷிக்­கின் மனைவி விசா­ரித்­துள்­ளார். அவ­ரது குடும்­பத்­தைப் பற்­றி­யும், வறு­மை­யில் தள்­ளப்­பட்­டது பற்­றி­யும் உள்­ளூர் அமைப்பு ஒன்று கேர­ளா­வைச் சேர்ந்த கோடீஸ்­வ­ரர் எம்.ஏ.யூசுப் அலி என்­ப­வ­ருக்கு தெரி­வித்­துள்­ள­னர். இதை பற்றி விசா­ரித்த யூசுப் அலி, கேர­ளா­வில் உள்ள தனது நிறு­வ­னத்­தின் அதி­கா­ரி­கள் மூலம் வங்­கியை தொடர்பு கொண்டு ஆஷிக் குடும்­பத்­தின் மொத்த கட­னை­யும் உடனே திருப்பி செலுத்­தி­யுள்­ள­னர்.

இதனை அறிந்து ஆச்­ச­ரி­ய­ம­டைந்த ஆஷிக் குடும்­பத்­தி­னர் ரம­லான் மாதத்­தில் தெய்­வம் போல் எங்­களை காப்­பாற்­றி­னார். அவ­ருக்கு எப்­படி நன்­றி­கள் சொல்­வது என்று தெரி­ய­வில்லை. அவ­ருக்­காக எங்­கள் பிரார்த்­தனை எப்­போ­தும் இருக்­கும் என்று நெகிழ்ச்­சி­யு­டன் கூறி­யுள்­ள­னர்.

துபாயை தலை­மை­யி­ட­மாக கொண்டு இயங்­கும் லூலூ குழு­மத்­தின் சேர்­மன் எம்.ஏ..யூசுப் அலி. இதற்கு முன் கேர­ளா­வில் வெள்­ளம் ஏற்­பட்ட போது, தனது ஹெலி­காப்­ட­ரில் வெள்­ளச் சேதங்­களை பார்­வை­யிட்­டார். வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக ரூ.18 கோடி நிதி உதவி அளித்து உத­வி­ய­வர். அவ­ரது சொந்த ஊரான திருச்­சூ­ருக்கு அரு­கே­யுள்ள நாட்­டி­கா­வுக்கு ரூ.10 கோடி மதிப்­பில் பல நலத்­திட்ட உத­வி­களை செய்­துள்­ளார்.