உப்பை குறை­யுங்­கள்

பதிவு செய்த நாள் : 18 மே 2019

உலக சுகா­தார நிறு­வ­னம் தின­மும் ஒரு­வர் அதி­க­பட்­சம் ஐந்து கிராம் உப்பு மட்­டுமே உட்­கொள்ள வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­துள்­ளது. இந்­தி­யா­வில் சரா­ச­ரி­யாக பத்து கிராம் உப்பு பயன்­ப­டுத்­து­வது ஆய்­வில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது. உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் பரிந்­து­ரையை விட இரண்டு மடங்கு உப்பு உட்­கொள்­வ­தால் ஏற்­ப­டும் பாதிப்­பு­கள் பற்றி விழிப்­பு­ணர்ச்சி ஏற்­ப­டுத்த பல்­வேறு முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பத்து வரு­டங்­க­ளுக்கு முன், உலக அள­வில் பல்­வேறு நோய்­க­ளுக்கு கார­ணம் என்ன என்­பது பற்றி ஆய்வு மேற்­கொண்­ட­னர். அதில் அதிக அளவு உப்பு உட்­கொள்­வதே நோய்­க­ளுக்கு கார­ணம் என்று கண்­ட­றிந்­த­னர். உலக அள­வில் மக்­கள் உப்பு உட்­கொள்­வதை குறைத்து கொள்­ள­வும், விழிப்­பு­ணர்ச்சி ஏற்­ப­டுத்­த­வும் முயற்­சி­கள் மேற்­கொண்­ட­னர். இதற்கு பலன் ஏற்­பட்­டுள்­ளதா என்று சமீ­பத்­தில் ஆய்வு செய்­த­னர். இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா, கனடா, நியூ­ஜி­லாந்து ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் 13 நாடு­க­ளில் இருந்து பெற்ற புள்­ளி­வி­ப­ரங்­களை ஆய்வு செய்­த­னர். இந்த 13 நாடு­க­ளில் ஆறு நாடு­க­ளைச் சேர்ந்த ஆரோக்­கி­ய­மாக உள்­ள­வர்­கள், பத்­தாண்­டு­க­ளுக்கு முன்பு சாப்­பிட்ட உப்பை விட குறை­வாக சாப்­பி­டு­வது தெரிந்­தது.

சர்­வ­தேச அள­வில் வரும் 2025ம் ஆண்­டிற்­குள் மக்­கள் உப்பு உட்­கொள்­வதை 30 சத­வி­கி­தம் குறைக்க வேண்­டும் என்று இலக்கு நிர்­ண­யித்­துள்­ள­னர். இந்த இலக்கை எட்­டு­வ­தற்கு தேசிய அள­வில் உத்­தி­க­ளை­யும், உப்பு உட்­கொள்­வதை குறைக்­கும் கொள்­கை­க­ளை­யும் வகுக்க வேண்­டும் என்று சுதிர் ராஜ் தோட் கூறி­யுள்­ளார். இவர் ஜார்ஜ் இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் குளோ­பல் ஹெல்த் இந்­தியா என்ற நிறு­வ­னத்­தில் ஆராய்ச்­சி­யா­ள­ராக உள்­ளார். உப்பு பற்­றிய ஆய்வு குழு­வி­லும் இடம் பெற்­றி­ருந்­தார். இவர்­க­ளின் ஆய்வு முடி­வு­கள் ஜெர்­னல் ஆப் கிளி­னிக்­கல் ஹைபர்­டென்­சன் (Journal of Clinical Hypertension) என்ற ஆராய்ச்சி இத­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

 இந்­தி­யா­வைப் போன்ற வள­ரும் நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அதிக அளவு உப்பு உட்­கொள்­ளும் போது, வளர்ந்த நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் குறைந்த அளவு உப்பு தேவைப்­ப­டும் உண­வு­களை உட்­கொள்­கின்­ற­னர். வளர்ந்த நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் ஆரோக்­கி­ய­மாக இருக்க விழிப்­பு­ணர்­வு­டன் குறைந்த அளவு உப்பு உட்­கொள்­கின்­ற­னர்.  

உலக அள­வில் 187 நாடு­க­ளில் 13 நாடு­க­ளில் மட்­டுமே மக்­கள் உப்பு உட்­கொள்­ளும் அளவு பற்­றிய புள்ளி விப­ரங்­கள் உள்­ளன. இது மிக­வும் கவ­லை­ய­ளிக்க கூடி­ய­தாக உள்­ளது. இது பற்­றிய அக்­கறை இல்­லா­மல் இருப்­பது அல்­லது பல்­வேறு நோய்­களை வரும் முன் தடுக்க உரிய அக்­கறை காட்­டா­மல் இருப்­பதே கார­ணம். வரு­டத்­திற்கு 16 லட்­சத்து 50 ஆயி­ரம் பேர் இரு­தய நோய்­க­ளால் மர­ணம் அடை­கின்­ற­னர். இதற்கு கார­ணம் அதி­க­மாக உப்பு உட்­கொள்­வதே.    

இந்­தியா முழு­மை­யும் நகர்ப்­பு­றங்­க­ளி­லும், கிரா­மப்­பு­றங்­க­ளி­லும் மக்­கள் அதிக அளவு உப்பு உட்­கொள்­கின்­ற­னர். ஊறு­காய் போன்­ற­வை­க­ளை­யும், அதிக மசாலா சேர்த்த, கார­மான பதார்த்­தங்­களை உண்­பதே உப்பு அதிக அள­வில் உட்­கொள்­வ­தற்கு கார­ணம்.