காஷ்­மீ­ருக்கு திரும்­பிய பண்­டிட்

பதிவு செய்த நாள் : 18 மே 2019

காஷ்­மீரை விட்டு வெளி­யே­றிய ரோஷன் லால் மாவா (70) என்ற பண்­டிட் ஜாதி­யைச் சேர்ந்­த­வர் முப்­பது வரு­டங்­க­ளுக்கு பிறகு காஷ்­மீ­ருக்கு திரும்பி மீண்­டும் கடை திறந்து வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். இதை ஸ்ரீந­கர் வியா­பா­ரி­கள் விழா­வாக கொண்­டா­டி­ய­து­டன், பராம்­ப­ரி­யப்­படி அவ­ருக்கு மரி­யா­தை­யும் செய்­த­னர்.

1990ம் ஆண்­டு­க­ளில் தீவி­ர­வா­தம் காஷ்­மீ­ரில் தலை­வி­ரித்து ஆடி­யது. தீவி­ர­வா­தி­கள் பண்­டிட் ஜாதி­யி­னரை குறி­வைத்து தாக்­கு­தல் நடத்­தி­னர். இத­னால் உயி­ருக்கு பயந்து பண்­டிட் ஜாதி­யைச் சேர்ந்­த­வர்­கள் காஷ்­மீரை விட்டு வெளி­யேறி டில்லி உட்­பட பல நக­ரங்­க­ளில் தஞ்­சம் அடைந்­த­னர். அப்­போது தீவி­ர­வா­தி­க­ளின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­ன­வர் ரோஷன்­லால் மாவா என்ற பண்­டிட். நான்கு துப்­பாக்கி குண்­டு­கள் இவர் மீது பாய்ந்­தன.

உயிர் பிழைத்த ரோஷன்­லால் மாவா, டில்­லி­யில் தஞ்­சம் அடைந்து கடை நடத்தி வந்­தார். இவர் சென்ற முதல் தேதி தனது சொந்த ஊரான ஸ்ரீந­க­ருக்கு திரும்­பி­யுள்­ளார். ஸ்ரீந­க­ரில் ஜெய்னா கடல் என்ற பகு­தி­யில் கடை­கள் அமைந்­துள்ள பகு­தி­யில் பேரிச்சை, முந்­திரி, பாதம் பருப்பு போன்­ற­வை­களை விற்­பனை செய்­யும் கடையை திறந்­துள்­ளார்.

இவ­ருக்கு சக வியா­பா­ரி­கள் ‘தஸ்­தார் பந்தி’ என்ற பராம்­ப­ரிய முறைப்­படி வர­வேற்­ற­னர். இதன் படி அவ­ரது தலை­யில் வெள்ளை துணி­யால் டர்­பன் போல் கட்­டி­னார்­கள். அவரை வர­வேற்று மரி­யாதை செய்­யும் வித­மாக டர்­பன் கட்­டி­னார்­கள்.

சக வியா­பா­ரி­க­ளின் வர­வேற்பை ஏற்­றுக் கொண்ட ரோஷன்­லால் மாவா கூறு­கை­யில், “ உங்­க­ளது சொந்த ஊரை போல் வேறு எந்த இட­மும் வராது. இன்று என்னை வார்த்­தை­யில் விவ­ரிக்க முடி­யாத அளவு வர­வேற்­றுள்­ள­னர். இது காஷ்­மீர் சகோ­ரத்­து­வத்­திற்கு எடுத்­துக்­காட்டு. எங்­க­ளுக்­குள் பாகு­பாடு இல்லை. நாங்­கள் அனை­வ­ரும் ஒன்றே. இங்­குள்­ள­வர்­கள் காஷ்­மீர் பண்­டிட்­டு­கள் திரும்பி வர­வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர்” என்று தெரி­வித்­தார்.

இது தொடர்­பாக முப்தே இஸ்­லாக் என்­ப­வர் டிவிட்­ட­ரில்,

“வதந்­தியை பரப்­பு­வர்­க­ளுக்கு மர­ண­அடி. முப்­பது வரு­டங்­க­ளுக்கு பிறகு காஷ்­மீர் பண்­டிட் ரோஷன்­லால் மாவா திரும்பி வந்­துள்­ளார். ரம்­ஜான் தொடங்­கு­வ­தற்கு ஐந்து நாட்­க­ளுக்கு முன் பேரிச்சை போன்­ற­வை­களை விற்­பனை செய்­யும் கடையை திறந்­துள்­ளார். இவர் 1990ல் ஒரு இளை­ஞர் துப்­பாக்­கி­யால் சுட்­ட­தால் குண்­டு­கா­யம் அடைந்­த­வர்.  இவர் உயிர் பிழைத்து திரும்பி வந்­துள்­ளார். மற்ற பண்­டிட்­டு­க­ளும் இவரை பின்­பற்ற வேண்­டும்” என்று வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.