இம­ய­மலை பனிப்­பா­றை­க­ளில் குறை­வான தண்­ணீர்!

பதிவு செய்த நாள் : 18 மே 2019

இம­ய­ம­லையை ஆசி­யா­வின் தண்­ணீர் கோபு­ரம் என்று அழைக்­கின்­ற­னர். இதற்கு கார­ணம் இம­ய­மலை பகு­தி­யில் அமைந்­துள்ள ஆயி­ரக்­க­ணக்­கான பனிப்­பா­றை­க­ளில் தண்­ணீர் நிரம்­பி­யுள்­ளதே. ஆனால் பரு­வ­நிலை மாற்­றத்­தால் எதிர்­கா­லத்­தில் பனிப்­பா­றை­க­ளில் இருந்து தண்­ணீர் கிடைக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாகி வரு­கி­றது.

சமீ­பத்­தில் இம­ய­ம­லை­யில் இந்து குஷ் பிராந்­தி­யத்­தில் அமைந்­துள்ள பனிப்­பா­றை­க­ளின் அளவு பற்றி ஆய்வு நடத்­தப்­பட்­டது. இந்த ஆய்­வில் இருந்து முந்­தைய மதிப்­பீட்­டை­விட பனிப்­பா­றை­க­ளின் அளவு 27 சத­வி­கி­தம் குறைந்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

அத்­து­டன் தற்­போது உள்ள பனிப்­பா­றை­க­ளில் பாதி­ய­ளவு வரும் 2060 ம் ஆண்டு வாக்­கில் இல்­லா­மல் போய்­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. முன்பு 2070ம் ஆண்டு வாக்­கில் பனிப்­பா­றை­கள் இல்­லா­மல் போய்­வி­டும் என்று கூறப்­பட்­டது. பல்­வேறு நாடு­க­ளில் உள்ள பனிப்­பா­றை­கள் பற்றி செய்­யப்­பட்ட ஆய்­வில் இருந்து, இந்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.  

முந்­தைய ஆய்­வில் பனிப்­பா­றை­கள் பரப்­ப­ளவு, பனிப்­பா­றை­க­ளின் அளவு, எதிர்­கா­லத்­தில் இவை­க­ளின் மாற்­றம், பனிப்­பா­றை­க­ளில் இருந்து கிடைக்­கும் தண்­ணீர் போன்­ற­வை­கள் பற்றி ஆய்வு செய்­யப்­பட்­டது. புதிய ஆய்­வில் கிரின்­லாந்து, அன்­டார்­டிகா தவிர மற்ற பகு­தி­க­ளில் அமைந்­துள்ள 2 லட்­சத்து 15 ஆயி­ரம் பனிப்­பா­றை­களை பற்­றிய முந்­தைய ஐந்து ஆய்­வு­களை ஒப்­பிட்டு பனிப்­பா­றை­க­ளின் அளவு பற்றி மதிப்­பீடு செய்­த­னர்.

ஆசி­யா­வில் உய­ர­மான மலை­க­ளில் படிந்­துள்ள பனி­ம­லை­க­ளில், முந்­தைய மதிப்­பீட்டை விட 27 சத­வி­கி­தம் பனிப்­பா­றை­கள் குறை­வாக உள்­ளன. அடுத்த பத்து வரு­டத்­தில் தற்­போ­துள்ள பனிப்­பா­றை­க­ளில் பாதி குறைய வாய்ப்­புள்­ளது என்று ஆய்­வில் கூறப்­பட்­டுள்­ளது.

ஆசி­யா­வின் உய­ர­மான மலை­க­ளில் படிந்­துள்ள பனி­ம­லை­களை பற்றி கணக்­கெ­டுக்க உல­க­ளா­விய பனிப்­பாறை பரி­ணா­மம்  மாதிரி (Global Glacier Evolution Model) பயன்­ப­டுத்­தப்­பட்­டது. முந்­தைய கணக்­கெ­டுப்­பில் இந்த பிராந்­தி­யத்­தில் அமைந்­துள்ள பனி­மலை (97 ஆயி­ரம் சதுர கிலோ­மீட்­டர் பரப்­ப­ளவு) 2070ம் வரு­டத்­தில் பாதி­ய­ளவு (50%) குறை­யும் என்று கூறப்­பட்­டது. தற்­போது இந்த பிராந்­தி­யத்­தில் அமைந்­துள்ள 96 ஆயி­ரம் பனிப்­பா­றை­க­ளின் அளவை கணக்­கிட்ட போது, பாதி­ய­ளவு பனிப்­பாறை வரும் 2060ம் ஆண்­டு­க­ளி­லேயே குறைந்­து­வி­டும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வருங்­கா­லத்­தில் பனிப்­பா­றை­கள் உரு­கு­வ­தால் கிடைக்­கும் தூய்­மை­யான தண்­ணீ­ரும் குறை­யும்.

இது பற்றி மும்­பை­யில் உள்ள வெலிங்­கர் இன்ஷ்­டி­யூ­டிட் ஆப் மேனெஜ்­மென்ட், டெவ­லப்­மென்ட், அண்ட் ரிசர்ச் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த டாக்­டர்.அன்­கூர் பண்­டிட் கூறு­கை­யில், “பனிப்­பா­றை­கள் அமைந்­துள்ள இடத்­தின் சாட்­டி­லைட் படங்­களை வைத்து டிஜிட்­டல் எலி­வேன் மாடல் படி, பனிப்­பா­றை­க­ளின் தன்­மை­யை­யும் கவ­னத்­தில் கொண்டு பனிப்­ப­றை­க­ளின் அள­வு­களை கணக்­கிட்­டோம். ஒவ்­வொரு பனிப்­பா­றைக்­கும் வேறு­பட்ட அள­வு­கோளை பயன்­ப­டுத்­தி­ய­தால், அதன் அளவு பற்­றிய மதிப்­பீட்­டில் ஏற்­ப­டும் வேறு­பாட்டை குறைத்­தோம்” என்று தெரி­வித்­தார்.

நன்றி: விக்­யான்­பி­ர­சார் இணை­ய­த­ளம்