பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் சுட்­டுக் கொலை

பதிவு செய்த நாள் : 18 மே 2019

ஆப்­கா­னிஸ்­தா­னில் பெண்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுத்த பெண் பத்­தி­ரி­கை­யா­ளர் மேனா மங்­கள் பட்­டப்­ப­க­லில் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இவர் சில தினங்­க­ளுக்கு முன் பேஸ்­புக்­கில், தனது உயி­ருக்கு ஆபத்து இருப்­ப­தாக பதி­விட்­டி­ருந்­தார்.

ஆப்­கா­னிஸ்­தான் தலை­ந­கர் காபூ­லில் உள்ள அவ­ரது அலு­வ­ல­கம் நோக்கி சென்று கொண்­டி­ருந்த மேனா மங்­கல், பட்­டப்­ப­க­லில் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். இந்த சம்­ப­வம் பற்றி உள்­துறை அமைச்­ச­கத்­தின் செய்தி தொடர்­பா­ளர் நஸ்­ரட் ரஹிமி, “ ஒன்­றுக்­கும் மேற்­பட்ட நபர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­விட்டு தப்­பிச் சென்­றுள்­ள­னர் என்று தெரி­வித்­துள்­ளார். இவரை சுட்­டுக் கொன்­றது தனி நபரா அல்­லது பயங்­க­ர­வா­தியா என்று போலீ­சார் விசா­ரணை செய்து வரு­கின்­ற­னர்.