மருத்­து­வம் பார்க்­கும் பிர­த­மர்

பதிவு செய்த நாள் : 18 மே 2019

இந்­தி­யா­வின் அண்டை நாடு பூடான். இம­ய­மலை பகு­தி­யில் கேந்­திர முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பகு­தி­யில் அமைந்­துள்­ளது. பூடான் நாட்டு பிர­த­மர் லோதே ஷெரிங். இவர் மருத்­து­வ­ரும் கூட. பிர­த­ம­ராக வரு­வ­தற்கு முன் மருத்­து­வ­ராக பணி­யாற்றி வந்­தார். சென்ற வரு­டம் பிர­த­ம­ராக பத­வி­யேற்­றார்.

பிர­த­மர் ஆகி­யும் கூட ஏழை, எளிய மக்­க­ளுக்கு மருத்­து­வம் பார்ப்­பதை நிறுத்­த­வில்லை. வாரத்­தில் ஆறு நாட்­கள் அரசு அலு­வல்­களை கவ­னிக்­கி­றார். வார இறு­தி­யில் சனிக்­கி­ழமை தேசிய மருத்­து­ம­னை­யில் மக்­க­ளுக்கு சிகிச்சை அளிக்­கின்­றார். எவ்­வித பூனை படை­க­ளும் இல்­லா­மல், சாதா­ரண குடி­ம­கன் போல் பணி­யாற்­று­கின்­றார். நோயா­ளி­கள் அவரை எப்­போ­தும் போல் அணுகி சிகிச்சை பெறு­கின்­ற­னர்.

இவர் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தற்கு முன் வங்­க­தே­சம், ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளில் மருத்­து­வ­ராக பணி­யாற்­றி­யுள்­ளார். 2013ம் ஆண்டு அர­சி­ய­லில் ஈடு­பட தொடங்­கி­னார். அப்­போது இவ­ரது கட்சி தோல்வி அடைந்­து­விட்­டது.

 பூடான் மன்­னர் லோதே ஷெரிங் தலை­மை­யில் மருத்­துவ குழுவை அமைத்­தார். நாட்­டில் உள்ள அனைத்து கிரா­மங்­க­ளுக்­கும் சென்று இல­வ­ச­மாக மருத்­துவ சிகிச்சை அளிக்­கும்­படி கேட்­டுக் கொண்­டார். லோதே ஷெரிங் தேர்­த­லில் போட்­டி­யி­டும் முன் மருத்­து­வத்தை சிறந்து விளங்­கச் செய்­வேன் என்று வாக்­கு­று­தி­ய­ளித்து இருந்­தார்.

தற்­போது மருத்­து­வ­ரான பின்பு ஒவ்­வொரு வியா­ழக்­கி­ழ­மை­யும் தேசிய மருத்­து­வ­ம­னை­யில் புதிய மருத்­து­வர்­க­ளுக்கு பயிற்சி அளித்து வரு­கி­றார்.