சென்செக்ஸ் இன்று 279 புள்ளிகளும், நிப்டி 100 புள்ளிகளும் உயர்வு

பதிவு செய்த நாள் : 16 மே 2019 17:54

மும்பை,

  இந்த வாரத்தில் சில நாட்களாக சரிவுடன் முடிந்த இந்திய பங்கு சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது. மாலை நேர வர்த்தகத்திலும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் முடிந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சற்று உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக நேரம் முழுவதும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் இருந்தது.

மாலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 279 புள்ளிகள் உயர்ந்து  37,393.48 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 100.10 புள்ளிகள் உயர்ந்து 11,257.10 புள்ளிகளில் நிலைபெற்றது.

பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் இன்று 3.64 சதவீதம் உயர்ந்தது.

டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், வேதாந்தா, ஓஎன்ஜிசி, பவர் கிரிட், என்.பி. டி.சி ஆக்சிஸ் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, கொட்டக் பாங்க், எஸ்.பி.ஐ, எச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல், டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.48 சதவீதம் உயர்ந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இன்று காலை (16-05-2019) வர்த்தகம் துவங்கியதும், அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் அதிகரித்து ரூ.70.25 காசுகளாக இருந்தது.

இறுதியில் இந்திய ரூபாயின் ரூ.70.03 காசுகளாக நிலைபெற்றது. நேற்றைய நாணய மாற்று வீதத்தின் மத்திப்பு 70.34 ரூபாய் ஆகும்