பாஜக அல்லாத கட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும்: ப. சிதம்பரம் டுவிட்டரில் கருத்து

பதிவு செய்த நாள் : 16 மே 2019 15:18

சென்னை,

பாஜக அல்லாத கட்சிகளே அடுத்து மத்தியில் ஆட்சியமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டரில்,

காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது.

தோல்வி பயத்தை மறைக்கவே 300க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என பாஜக கூறிவருகிறது.

வரலாறு, கலாசாரம், விருப்பங்களை இழிவுபடுத்தி வரும் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.

இவ்வாறு, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் கூறியுள்ளார்.