சட்டை கலையாமல் கமல்ஹாசனை மக்கள் அப்புறப்படுத்துவார்கள்- தமிழிசை

பதிவு செய்த நாள் : 16 மே 2019 13:35

சென்னை,

சட்டை கலையாமல் கமல்ஹாசனை அரசியலில் இருந்து மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

இந்து தீவிரவாதம் என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கமல்ஹாசனை விட சிறப்பாக படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சரித்திர உண்மை என்று சொல்லி சரித்திரத்தை திரித்து பார்க்கிறார். திரித்து வெளியிடுகிறார். ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது இந்து தீவிரவாதம் என்று சொல்கிறார்.

ரணமாக இல்லை. அது ஆறிக்கொண்டிருப்பதை குத்திக்கிளறி ரத்தம்வர வைத்து பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டு இருக்கிறார்.

தேர்தல் பிரசாரத்தில் பேசியதை சாதனை என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார்.

ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவாராம்.

சட்டை கலையாமல் கமலை அரசியலில் இருந்து தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள்.

இவ்வாறு,  தமிழிசை  கூறியுள்ளார்.