இந்தியத் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

பதிவு செய்த நாள் : 16 மே 2019 12:42

சென்னை,

இந்தியத் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை (14-5-2019) பாஜக பேரணியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை, வெள்ளிக்கிழமைக்கு பதிலாக 1 நாள் முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில்,

மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளில் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம், ஆளும் கட்சிகளுக்கு ஒரு விதிமுறையும் எதிர்க்கட்சிக்கு மற்றொரு விதியையும் கடைப்பிடிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.

சிலையை உடைப்பதையே பாஜக வழக்கமாக கொண்டுள்ளது.

தமிழகத்தில் பெரியார் சிலையை உடைத்தது போன்று மேற்கு வங்கத்தில்   ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர்
சிலை உடைக்கப்பட்டுள்ளது

என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.