கமல்ஹாசன் பேசியது கண்டனத்துக்குரியது: ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

பதிவு செய்த நாள் : 16 மே 2019 10:05

ஈரோடு,           

மதங்களுக்கிடையே பிரச்னை வரும் வகையில் கமல்ஹாசன் பேசியது கண்டனத்துக்குரியது என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு பிரச்னை வரும் வகையில் பேசியது கண்டனத்துக்குரியது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

தேர்தலில் வாக்குகளை பெறும் நோக்கில் பேசியது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியது கமல்ஹாசன் பேசியதைவிட குற்றம். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்படும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தெரியும். தமிழகத்தில் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொண்டதால் திமுகவை கூட்டணிக்கு போட்டி போட்டு அழைக்கின்றனர் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.