22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல்: அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

பதிவு செய்த நாள் : 15 மே 2019 20:43

சென்னை,

தமிழகத்தில் 22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தரவில்,

"போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத 22 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 22 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை அண்ணா பல்கலைக்கழகம் புதுப்பித்து வழங்கவில்லை. 22 பொறியியியல் கல்லூரிகளிலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை இருக்காது.” என்று கூறப்பட்டுள்ளது

92 கல்லூரிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, போதிய பேராசிரியர் இல்லாததால் 300 பாடப் பிரிவுகளுக்கு மூடுவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு 9,000 முதல் 15,000 வரை பொறியியல் இடங்கள் குறைய வாய்ப்புள்ளது. எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியீடு 

தமிழகம் முழுவதும் 481 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதினர்.

பி.இ., பி.டெக்., படிப்புகளின் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழம்.

சேலத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி 88.12 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது..