பிரதமர் மோடி நினைப்பது போல் நாட்டை தனி ஒருவர் ஆளவில்லை, மக்கள்தான் ஆள்கிறார்கள்: ராகுல் காந்தி பேச்சு

பதிவு செய்த நாள் : 15 மே 2019 19:47

பார்கரி (பஞ்சாப்), 

  பிரதமர் நரேந்திர மோடி இந்த நாட்டை தான் ஒருவரால் மட்டுமே ஆள முடியும் என்று நினைத்துகொண்டிருக்கிறார். ஆனால் இந்த நாடு தனிநபரால் ஆளபடவில்லை, மக்கள்தான் ஆள்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் பார்காரி நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி இன்று உரையாற்றினார்.

அப்போது கடந்த 2015ம் ஆண்டு பஞ்சாபின் புர்ஜ் என்ற கிராமத்தில் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரான்ந்த் சாஹிப் திருடப்பட்டு அதன் பக்கங்கள் கிழிக்கப்பட்ட சம்பவத்தை ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதற்கு நான் உறுதி அளிக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

இந்த நாட்டை தனி ஒருவரால் மட்டுமே ஆள முடியும் என்று மோடி நினைக்கிறார். ஆனால் உண்மையில் இந்த நாட்டை மக்கள் தான் ஆள்கிறார்கள்.

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் மத்திய அரசு பல முறைகேடுகளை செய்துள்ளது. இந்த ஊழல் குறித்து பிரதமர் என்னுடன் நேரடி விவாதத்தில் ஈடுபட தயாரா?

ஜிஎஸ்டி வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் இரண்டு முடிவுகள் இந்திய பொருளாதாரத்தை சீரழித்து லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது என்று ராகுல் காந்தி சாடினார்.