ஜூன் 8, 9ல் ஆசிரியர் தகுதித் தேர்வு

பதிவு செய்த நாள் : 15 மே 2019 19:09

சென்னை:

தமிழ்நாட்டில் ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தேர்வு (TET) நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் (Teachers Eligibility Test) என்ற ஆசிரியர் தகுதி தேர்விற்காக அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 28-2-2019 அன்று தேதி வெளியிட்டது.

www.trb.tn.nic.in என்ற தளத்தில் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. 8-ம் தேதி முதல்தாள் மற்றும் 9-ம் தேதி இரண்டாம்தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு காலை 10:00 மணிக்கு துவங்கி பகல் 1:00 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.