படிப்பில் சுட்டி!

பதிவு செய்த நாள் : 17 மே 2019

நான் படிப்பில் சுட்டி; எப்போதுமே முதல் அல்லது இரண்டாம் இடத்தில் தான் இருப்பேன்.

திருச்சி, தாரா நல்லுார் நகராட்சி பள்ளியில், ௧௯௫௨ல், 5ம் வகுப்பு வரை படித்த நான், 6ம் வகுப்புக்கு, தெப்பக்குளம், இ.ஆர்.உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

முதல் பாடமாக பொதுத்தமிழும், இரண்டாம் பாடமாக சிறப்பு தமிழ் அல்லது சமஸ்கிருதம் இருந்தது. ஆர்வம் காரணமாக சமஸ்கிருதத்தை இரண்டாம் பாடமாக எடுத்தேன்.

சமஸ்கிருத ஆசிரியர் கந்தசாமி சிரோன்மணியின் மகனும், என் வகுப்பில் தான் படித்தான்.

நான் முதலிடத்திலும், இரண்டு அல்லது மூன்றாம் இடத்தில் அவன் வருவான்.

விடைத் தாள்களை வழங்கும் போது, 'பிராமணரல்லாத பையன் உன்னை விட அதிக மதிப்பெண் எடுக்கிறான்; நீ என் பையனாக இருந்தும் இப்படி மதிப்பெண் வாங்குற......' என்று சொல்லியபடியே தருவார் ஆசிரியர்.

அச்சிறு வயது சாதனையை, இப்போது நினைத்தாலும், எனக்குள் பெருமையும், தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.

அதே சமயம், தன் மகனாக இருந்தாலும், கூடுதல் மதிப்பெண் போடாமல், எழுதியதற்கு ஏற்ற மதிப்பெண் போட்டு, பாரபட்சமில்லாமல் திருத்திய ஆசிரியரை நினத்தால், பெருமையும், வியப்பும் ஏற்படுகிறது.

–- தங்கவேலு மாரிமுத்து, திண்டுக்கல்.