சிரிப்பு வெடிகள்!

பதிவு செய்த நாள் : 17 மே 2019


‘‘மன்னர், போருக்கு தயார் என்றதும்,  இவ்வளவு சிப்பாய்கள் வந்துருக்காங்களே...’’

‘‘அறிவிப்பு பலகையில் ‘போர்’ன்னு எழுதறதுக்கு பதில், ‘மோர்’ன்னு எழுதியிருக்காங்க!’’

– செல்வகுமார், சென்னை.

‘‘புலவர் பாடி முடித்து விட்டாரே அமைச்சரே!’’

‘‘எதற்காக கேட்கிறீர் மன்னா?’’

‘‘காதில் வைத்திருக்கும் பஞ்சை எடுக்க வேண்டும்!’’

– அஜீத், சென்னை

‘‘ஏ.பி.சி.டி. கூட வரிசையா சொல்ல தெரியல, இவன் எல்லாம் படிச்சவனாம்...’’

‘‘யார சொல்ற?’’

‘‘என் நண்பரோட மகனதான்; என்ன படிச்சிருக்கேன்னு கேட்டா,  பி.சி.ஏ.ன்னு சொல்றான்!’’

– அசோகன், சென்னை.

‘‘எங்க பையன் அமெரிக்கால, கிரீன் கார்டு ஹோல்டர்...’’

‘‘என் பையன் இந்தியாவுல, ஆதார் கார்டு ஹோல்டர்!’’

– மகா, திருப்பூர்.

‘‘என்னய்யா இது, மேடைக்கு பக்கத்துல,  கை குழந்தையோட, பெண்கள்  வரிசையா நிக்கறாங்க?’’

‘‘பேச்சு ஆரம்பத்துல, நீங்க, ‘சகோதரிகளே...’ன்னு சொன்னதுக்கு,  இவங்க எல்லாம், ‘தாய்மாமா தங்கச்சங்கிலி  போடுறார்...’ன்னு நிக்கறாங்க தலைவரே!’’

– பி.என். நரசிம்ம மூர்த்தி, சென்னை.