சர்க்கரை இல்லாத ப்ரூட் சாலட்!

பதிவு செய்த நாள் : 17 மே 2019

தேவையான பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 5

பேரீச்சம் பழம் - 5

பாதாம், முந்திரி, திராட்சை - தலா 5

பால் - 1 கப்

ஆப்பிள், கொய்யா, மாதுளை - சில துண்டுகள்

தேன் - இரண்டு தேக்கரண்டி.

செய்முறை:

வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம், முந்திரி, திராட்சையுடன், பால் சேர்த்து, நன்கு அரைத்து, ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளுங்கள்.

ஆப்பிள், கொய்யா, மாதுளை, துண்டுகளைச் சேர்த்து, தேன் கலந்து, நன்கு கலக்கி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 10 நிமிடங்களுக்குப் பின், சாப்பிட்டுப் பாருங்கள்!

சர்க்கரை இல்லாத, கிரீம் இல்லாத ப்ரூட் சாலட், அவ்வளவு சுவையாக இருக்கும்.

–- நேயா, சென்னை.